search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானப்படை தலைமை தளபதி"

    • சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
    • காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

    இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

    இந்நிலையில், விமானப்படை சாகசம் குறித்து விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    சென்னை மெரினாவில் நடந்த வண்ணமயமான சாகசத்தை சுமார் 15 லட்சம் மக்கள் கண்டுகளித்துள்ளது, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

    டெல்லி, சண்டிகர், பிரயாக்ராஜ் நகரங்களிலும் வான் கண்காட்சி நடந்திருக்கிறது.

    எனினும், நிகழ்ச்சியின் அளவிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையிலும் சென்னைதான் மிகப்பெரியது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுப்பிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தை சவுத்ரி ஆய்வு செய்தார்.
    • விமானப்படை திறன் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை.

    இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார்.

    அங்குள்ள விமானப்படைத் தளதில் இலகு ரகப் போர்விமானம் தேஜாஸ், இலகு ரக காம்பேட் ஹெலிகாப்டர், இந்துஸ்தான் டர்போ டிரெய்னர்-40 ஆகிய மூன்று உள்நாட்டு விமான மற்றும் ஹெலிகாப்டர்களை அவர் இயக்கி வைத்தார்.

    தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இவை, விரைவில் இந்திய விமானப்படையில் இணைகின்றன.

    புதுப்பிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தை, விமானப்படை தலைமைத் தளபதி ஆய்வு செய்தார். விமான படை தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து வடிவமைப்பாளர்கள் மற்றும் சோதனைக் குழுவினருடன் அவர் உரையாடினார்.

    இந்திய விமானப்படையை போர்ப்படையாக மாற்றுவதற்கு திறன் மற்றும் படை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விமானப்படை தலைமைத் தளபதி விவாதித்தார். நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் மற்றும் விண்வெளித் துறையைச் சேர்ந்தவர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×