என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உணவு திருவிழா"
- பாதம் வியாஸ் ஒரு அரங்கில், தனது உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தியிருந்தார்.
- அவரது ஸ்டாலுக்கு பார்வையாளர்கள் யாரும் வரவில்லை.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு உணவு திருவிழா நடந்தது. அங்கு இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சமையல் கலைஞரான 67 வயது பாதம் வியாஸ் ஒரு அரங்கில், தனது உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தியிருந்தார். ஆனால் அவரது ஸ்டாலுக்கு பார்வையாளர்கள் யாரும் வரவில்லை.
இதையடுத்து "எங்கள் அன்பிற்குரிய தலைமை செப் சிட்னி மக்களுக்கு உணவு தயாரித்தார், ஆனால் யாரும் வரவில்லை" என்று உணவக குழு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டது. அந்த வீடியோ 4.71 கோடி பேரின் பார்வைகளைப் பெற்று வைரலானது. இதனால் சமையல் கலைஞர் பாதம் வியாஸ் உலகப் புகழ் பெற்றார். அவரது உணவுகளைப் பற்றிய விவாதமும், இந்திய உணவு தயாரிப்பு பற்றிய கருத்துகளும் அதிகம் பகிரப்பட்டன.
- கலெக்டர் வளர்மதி தகவல்
- தானியங்களின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுதானிய ஆண்டு-2023 ஐ முன்னிட்டு பொதுமக்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நாளை முதல் சிறுதானிய உணவுத்திரு விழாவானது பஸ் நிலையங்கள், கல்லூரிகள் மற்றும் பொது மக்கள் கூடும் சந்தைகளில் நடைபெறவுள்ளது.
மேற்படி உணவுத் திருவிழாவில் சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சி பல்வேறு அரசுத்துறைகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி களில் இடம்பெற்றுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் சார்பில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் சிறுதானியங்களின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.
இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை சந்தை, 2 -ந்தேதி ஓச்சேரி சந்தை, 4-ந்தேதி நெமிலி சந்தை, 5-ந்தேதி மின்னல் கிராமம்,6-ந்தேதி சோளிங்கர் பஸ் நிலையம், 7-ந்தேதி பாணாவரம் சந்தை, 8-ந்தேதி அரக்கோணம் பஸ் நிலையம், 11-ந்தேதி ஆற்காடு பஸ் நிலையம், 19-ந்தேதிராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் மேலும் நுகர்வோர் மன்றங்கள் செயல்படும் கல்லூரி களிலும் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெறும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் சிறுதானிய உணவுத்திரு விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறித்து தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
- 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.
- முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.
வேதாரண்யம்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் மூலம் வேதாரண்யம் வட்டாரத்தில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா வட்டார இயக்க மேலாண்மை அலுவ லகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு வட்டார இயக்க மேலாளர் அம்பு ரோஸ்மேரி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் இந்திராணி, வேதாரண்யம் வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், தோப்புத்துறை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமூர்த்தி மற்றும் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரித்த ஊட்டச்சத்து நிறைந்த 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தி வைத்திருந்தனர்.
பின்பு, ஊட்டச்சத்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.
- ஏற்காட்டில் மகளிர் திட்ட அலுவலகத்தில் ஏற்காடு வட்டார அளவிலான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.
- ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மகளிர் திட்ட அலுவலகத்தில் ஏற்காடு வட்டார அளவிலான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது. ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஊராட்சி ஒன்றிய மேலாளர் கென்னடி, மகளிர் திட்ட வட்டார மேலாளர் மகாலிங்கம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஊட்டச்சத்து திருவிழாவில் ஏற்காட்டில் உள்ள 9 ஊராட்சியில் உள்ள மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு ராகி, சாமை, வரகு போன்ற பல்வேறு தானியங்களை வைத்து தயாரித்த பாரம்பரிய உணவு வகைகளை பார்வைக்கு வைத்தனர். இந்த உணவுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சுவைத்து பார்த்து சிறப்பாக செய்திருந்த 3 குழுக்களை தேர்ந்தெடுத்தனர்.
இதன்படி ஏற்காடு ஊராட்சியை சேர்ந்த பி.எல்.எப் குழு, மாரமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பனித்துளி மகளிர் குழு, வெள்ளக்கடை ஊராட்சியை சேர்ந்த சிறகுகள் மகளிர் குழு ஆகிய குழுக்கள் தேர்தெடுக்கப்பட்டனர். இந்த 3 குழுக்கள் மாவட்ட அளவில் நடைபெற இருக்கும் உணவு ஊட்டச்சத்து திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன் மற்றும் மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.
- தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உணவு திருவிழா நடத்தினர்.
- மாணவர்கள் உள்பட 14 பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பூவம் வயல் பகுதியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உணவு திருவிழா நடத்தினர். இதற்காக தங்கள் வீடுகளில் இருந்து பொருட்களை கொண்டு வந்து அவர்கள் உணவு தயாரித்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு சமைத்த உணவை அவர்கள் சாப்பிட்டனர். இதில் மாணவர்கள் உள்பட 14 பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நாகர்கோவில் அருகே உள்ள களியங்காட்டில் நடந்தது
- மலர் மகளிர் அமைப்பு கவுரவத்தலைவர் செலின்மேரி தலைமை தாங்கினார்
நாகர்கோவில் :
சமூக பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு குமரி மாவட்ட மலர் மகளிர் அமைப்பு, கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆப் கன்னியாகுமரி ஆகியவை இணைந்து நடத்திய சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி சிறு தானிய உணவு திருவிழா மற்றும் சிறுதானிய உணவு தயாரித்தல் விழிப்புணர்வு பயிற்சி நாகர்கோவில் அருகே உள்ள களியங்காட்டில் நடந்தது.
மலர் மகளிர் அமைப்பு கவுரவத்தலைவர் செலின்மேரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் லிட்வின் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர் மேரி ேஜாஸ்பின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் சன்லைட் நல்வாழ்வியல் மையம் பயிற்சியாளர் டாக்டர் அரசு மற்றும் அலமேலு மங்கை நாச்சியார், அனிஷா, ராஜகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உயிர் காக்கும் உணவுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.
- முன்னதாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் யோகா தியான வகுப்புகள் நடைபெற்றது.
பவானி:
இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை ஈரோடு மற்றும் பவானி சித்த மருத்துவ பிரிவு சார்பில் சர்வதேச யோகா தினம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி பவானி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.
விழாவிற்கு சித்த பிரிவு டாக்டர்.கண்ணுசாமி தலைமை வகித்தார். பவானி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்.கோபாலகிருஷ்ணன், மனவளக்கலை மன்ற ஆறுமுகம், உலக சமாதான ஆலய ஞானாசியர் ரவிச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
சிறு தானியங்கள், பாரம்பரிய உணவு வகைகள், சிறு தானியத்திலான திண்பண்டங்கள், முளைகட்டிய தானியங்கள், தொற்றா நோய்களுக்கான உணவுகள், உணவு உண்ணும் முறைகள், உயிர் காக்கும் உணவுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.
முன்னதாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் யோகா தியான வகுப்புகள் நடைபெற்றது. இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு நன்னாரி ஜூஸ், நெல்லிக்கனி ஜூஸ், பருத்திப்பால் உள்பட பல்வேறு வகையான ஜூஸ்கள் வழங்கப்பட்டது.
- கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழி கைத்தொழிலின் மேன்மையை உணர்த்துவதாக உள்ளது.
- மே 14-ந் தேதி வரை தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் கைவினை, உணவு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
தமிழ்நாட்டை முக்கியமான சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தை 1971-ம் ஆண்டில் உருவாக்கி சுற்றுலா பேருந்து வசதியையும், சுற்றுலா திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு சுற்றுலாத்துறையை விளங்கச் செய்தார். கருணாநிதியால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், 'பூம்புகார்' என்ற வர்த்தக பெயரால் 1.8.1973 அன்று முதல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கருணாநிதி 1989-ம் ஆண்டு முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்து பெண்கள் தாங்களாகவே வங்கி நடவடிக்கைகள், சுய தொழில் செய்தல், குழுவாக செயல்படுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்தார்.
அவரது வழியில் தற்போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி, சமமான வளர்ச்சி என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடைபெற்று வருகின்றது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா பாதிப்பால் நலிவடைந்த நிலையில் இருந்த சுற்றுலாத்துறை, முதலமைச்சரின் சிறப்பான முன்னெடுப்புகளால் தற்போது விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிறு வணிகர்கள், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என லட்சக்கணக்கானோருக்கு இத்துறையின் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதும், நிரந்தர பொருளாதாரம் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டும் வருகின்றது.
தமிழ்நாட்டை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ள சென்னை விழாவில் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் 30 அரங்கங்களில் இடம் பெறுகின்றன. 20 வெளிமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணிவகைகள், பட்டு சேலைகள், கோ –ஆப் டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் 70 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த கண்காட்சியால் சென்னை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கைவினை கலைஞர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழ்நாடு கலை நயமும், பாரம்பரியமும் கொண்டதாகும். தொன்மை வாய்ந்த துறைமுக நகரங்களை கொண்ட தமிழ்நாட்டில் வெளிநாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. ஆள்பாதி, ஆடைபாதி என்பது தமிழ்நாட்டின் பழமொழிகளுள் ஒன்றாகும். இந்த பழமொழி ஆடை நெய்யும் நெசவாளர்களின் புகழை தெரிவிப்பதாக உள்ளது.
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழி கைத்தொழிலின் மேன்மையை உணர்த்துவதாக உள்ளது. தற்போது நடைபெறும் திருமணங்களில் பெண்களின் ஆடைகள் கைவினைக் கலைஞர்கள் மூலம் நூல் வேலைப்பாடுகள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுவது கை வினைக் கலைஞர்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலை கள், பரமக்குடி காட்டன் சேலைகள், ராசிபுரம் தாழம்பூ பட்டு புடவைகள், ஆர்கானிக் கைத்தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பவானி ஜமுக்காளம், படுக்கை விரிப்புகள், அலங்கார கைத்தறி துணிகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், செட்டிநாடு சுங்கடி புடவைகள், ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள், துணிப் பைகள், தஞ்சா வூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் தென்னக கலைபண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என தினந்தோறும் 5-க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன.
சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சென்னை விழா-கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா மே 14-ந் தேதி வரை தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 ஆகும். கண்களுக்கு விருந்து படைக்கும் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து விட்டு, விதம் விதமாக சாப்பிட்டும் வரலாம்.
- உணவு வகைகள் உடலுக்கு சத்து தரும் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
- உணவுகளை சுவைத்து சிறப்பாக உணவு செய்தவர்களுக்கு பாராட்டி வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார அளவில் மகளிர் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருவிழாவில் சமைக்கப்பட்ட உணவு வகைகள் உடலுக்கு சத்து தரும் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதனை சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் லாவண்யா ஹேம்நாத் உணவுகளை சுவைத்து சிறப்பாக உணவு செய்தவர்களுக்கு பாராட்டி வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்சி அலுவர்கள் கோபால கிருஷ்னண், விமல் ரவிகுமார், உதவி திட்ட அலுவலர் பிரபாகர், வட்டார மேலாளர் எல்லப்பன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கர், ேமுகிலன் மற்றும் சுய உதவி குழுவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கல்லூரி முதல்வர் கீதா தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
- சிறப்பு பரிசுகளை வென்ற சாரு ஸ்ரீ, சவுமியா, சவுந்தர்யா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு விழா, உணவு திருவிழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கீதா தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்து பேசினார். ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறுதானியங்கள் குறித்தும், அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார்.
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் சுகாதாரமற்ற உணவுகளால் ஏற்படும் நோய்கள் குறித்து விளக்கினார்.
இதில் பாலக்கோடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, கிராமிய மசாலா நிறுவன மேலாளர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 150 வகையான சிறுதானிய உணவு வகைகள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தன.
மேலும் சிறுதானிய உணவினை சிறப்பாக தயாரித்து முதல் பரிசு வென்ற புவனேஸ்வரி, 2-வது பரிசு வென்ற ஜனனி, 3-வது பரிசு வென்ற அபினயா ஸ்ரீ மற்றும் சிறப்பு பரிசுகளை வென்ற சாரு ஸ்ரீ, சவுமியா, சவுந்தர்யா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முடிவில் கவுரவ விரிவுரையாளர் கோமதி நன்றி கூறினார்.
- தாளாளர் கீதா தங்கராஜன் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.
- மாணவ-மாணவிகள் 6 அணிகளாக பிரிந்து பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து அசத்தினார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் உணவு திருவிழா நடைபெற்றது. தாளாளர் கீதா தங்கராஜன் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகள் 6 அணிகளாக பிரிந்து பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து அசத்தினார்கள்.
இயற்கை முறையில் விளைந்த பொருட்களை கொண்டு கம்பு தோசை, கம்மங்கூழ், ராகி வடை, சோள பக்கோடா, இளநீர் பாயாசம், புட்டு, கோதுமை அல்வா, சாமை அரிசி உணவு வகைகள், உளுந்து வடை, தேங்காய் பர்பி, ரசகுல்லா, முளை கட்டிய பச்சை பயிறு, புதினா சட்னி, எள்ளுருண்டை, அவல், கோதுமை அடை, கோளா உருண்டை, முட்டை மசாலா, ராகி அடை, மாங்காய் தொக்கு மற்றும் ரசம், சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகள், கேக் வகைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட இயற்கை முறையிலான உணவு வகைகளை தயாரித்து தனித்திறமைகளை வெளிப்படுத்தினார்கள். முடிவில் சிறந்த உணவு தயாரிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் பிரவீன் தலைமையிலான மாணவர் அணி முதலிடமும், ஸ்ரீதர் அணி 2-ம் இடமும், யாழினி தலைமையிலான மாணவிகள் அணி 3-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ், மெடல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. மெட்ரோ அமைப்பின் தலைவர், செயலாளர் ஆடிட்டர் கார்த்தி, இயக்குனர் பிரசன்னா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். ரோப்டிக் ஆசிரியர் சகாயசுரேஷ், கே.ஆர்.எஸ். பில்டர்ஸ் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்–லூரி முதல்வர் தங்கராஜன் நன்றி கூறினார்.
- மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது
- மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை லேணாவிளக்கில் அமைந்துள்ள மௌண்ட் சீயொன் சர்வதேசப் பள்ளியில் உணவு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
மௌண்ட் சீயொன் சர்வதேச பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கினை வளர்க்கும் பொருட்டு உணவு திருவிழா நடைபெற்றது.
பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதல்வர் ஜலாஜா குமாரி முன்னிலையில் ராபின்சன் தேவதாசன், ஸ்டாரி தேவதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவின் தொடக்கமாக மாணவ மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. தொடர்ந்து பள்ளியின் தலைவர்சிறப்பு விருந்தினர்களை வரவேற்று வரவேற்புரை வழங்கி பொன்னாடையும், நினைவுப்பரிசும் வழங்கி கௌரவித்தார். இணைத்தலைவர் கடந்த ஆண்டில் நடைபெற்ற உணவுத் திருவிழாப் பற்றிய அறிக்கையை கூறியதுடன், கடந்த வருடம் உணவுத்திருவிழா வாயிலாக கிடைத்த நிதி எந்த ஆஸ்ரமங்களுக்கு வழங்கப்பட்டது , எவ்வாறு ஏழை எளியவர்களுக்கு சென்று சேர்ந்தது என்பது குறித்த அறிக்கையை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர்கள் தனது சிறப்புரையில் ஏழைக்கு உதவுகிறவன் கடவுளை மகிழ்ச்சியடைய வைக்கிறான் என்ற இறைவனின் வார்த்தைகளை கூறி பெற்றோர் ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மாணவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு அறிவுரையுடன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
உணவுத்திருவிழா தொடக்க விழாவைத் தொடர்ந்து அன்றைய நாள் முழுவதும் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் விதவிதமான உணவினை சமைத்து விற்பனை செய்தனர். உணவுத் திருவிழாவில் மாணவர்களும், பெற்றோ ர்களும் அறுசுவை உணவினை உண்டு மகிழ்ந்தனர். உணவுப் பொருட்கள் மட்டுமின்றி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு நிகழ்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வு சிறப்பாக அமைய அனைத்து ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர் களும் இணைந்து செயல்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்