search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணி திருவிழா"

    • இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் காலையிலும் மாலையிலும் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வருபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளைமலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    பகல் 11.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) காலையில் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.
    • வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 7-ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

    5 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின், சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    காலை 8.10 மணிக்கு சுவாமி சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4.35 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வீதி உலா முடிந்து மேலக்கோவில் வந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் பந்தல் மண்டபம் முகப்பில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டு அணிந்து பச்சை நிற மலர்கள் சூடி பெருமாள் அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து கோவிலை வந்தடைகிறார்.

    பின்னர் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின் மேலக்கோவில் சேர்கிறார்கள்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி அம்பாளுடன் பல்லக்கில் வீதி உலா வருகிறார். இரவு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி தேர் கடாட்சம் அருளி எட்டு வீதிகளிலும் வலம் வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.

    10-ம் திருநாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • விழா நாட்களில் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
    • வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.

    திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெள்ளித்தேரிலும், வள்ளியம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    7-ம்திருவிழாவான இன்று காலையில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    10-ம் திருவிழாவான வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை (செவ்வாய்க்கிழமை) சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நடக்கிறது.
    • 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    ஆவணி திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடந்தது. இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. அங்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டவுடன் குடவருவாயில் தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனை நடந்தது.

    7-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 5 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். பின்னர் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும்.

    மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். 8-ம் திருநாளான நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், பகல் 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 10-ம் திருநாளான 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது.
    • மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

    தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது. மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த நாட்களில் தேரோட்டம், தெப்ப உற்சவம் போன்றவை நடைபெறும்.

    18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் திருவிழாக்கள் நடைபெறாது. ஆனால் வழக்கம்போல் அம்மனை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர். கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல்நாள் இரவு வந்து கோவிலில் தங்கியிருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    அம்மன் சன்னதியில் பூக்களால் தோரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மூலவர் அம்மனுக்கு சம்மங்கி பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்து.

    பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக பொதுவழி, சிறப்புவழி என 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பக்தர்கள் இந்த 2 வழிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துகிடா வாகனத்தில் வீதி உலா வந்தார்.
    • வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 17-ந் தேதி ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

    3-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைந்தனர்.

    பின்னர் மாலை 6.45 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    ஆவணித்திருவிழாவின் 4-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 26-ந்தேதி அய்யா வைகுண்டசுவாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 29-ந்தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்று விழா நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடு தலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 5.30 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கப்பட்டு பதியை சுற்றி வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருக்கொடியை பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். உச்சிப் படிப்பு, பணிவிடைகளை பையன் கிருஷ்ண நாம மணி செய்திருந்தார். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

    வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாச லில் அய்யாவின் தவக்கோல காட்சிஅளிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடை பெறுகிறது. 9-ம் திருவிழா அன்று அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் திருவிழா அன்று இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருகிற 29-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை, பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடைபெறுகிறது.

    • இன்று சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் உலா வருகிறார்கள்.
    • விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். 2-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும், வள்ளி அம்பாள் சிறிய பல்லாக்கிலும் எழுந்தருளி தூண்டுகை விநாயாகர் கோவில் அருகே உள்ள ஆழ்வார் திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபம் சேர்ந்தனர். மாலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவு 8.15 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளியம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    ஆவணித் திருவிழாவின் 3-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி பூங்கடேயச் சப்பரத்திலும், அம்மன் கேடயச் சப்பரத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் உலா வருகிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 26-ந்தேதி அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 29-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் வருடந்தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட ஆவணி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார்.

    குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்கின்றனர். உச்சிப்படிப்பு பணிவிடைகளை பையன் கிருஷ்ண நாம மணி செய்கிறார். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    2-ம் நாள் இரவு அய்யா வைகுண்டசாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்தில் பவனியும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகன பவனியும் நடைபெறுகிறது.

    வருகிற 26-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 29-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. தினமும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி முன்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழா நிறைவு பெறுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. 4 மணியளவில் கொடிப்பட்டமானது வீதி உலா வந்தது.

    அதிகாலை 5.40 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடி மரத்தில் காப்பு கட்டிய அரிகரசுப்பிரமணிய பட்டர் கொடியினை ஏற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 7.05 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, கோவில் கண்காணிப்பாளர்கள் சீதாலெட்சுமி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பணியாளர்கள், தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் அர. கருத்தப்பாண்டி, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், தி.மு.க. நகர செயலர் வாள் சுடலை மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் காலை 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    5-ம் திருவிழாவான 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். இரவு 7.30 மணியளவில் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது.

    7-ம் திருவிழா 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தான்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவை நடக்கிறது. 8.45 மணிக்கு வெற்றிவேர் சப்ரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

    8-ம் திருவிழா நண்பகல் 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 12-ம் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று ஆவணி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பிறக்கிறது.
    • அசுவினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள் பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.

    இன்று (புதன்கிழமை) ஆவணி மாதம் பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று அதிகாலை 5.34 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று காலை 7.21 மணிக்கும் ஆவணி மாதம் பிறக்கிறது. இன்றைய மாத பிறப்புக்கு விஷ்ணுபதி என்று பெயர். இன்று அதிகாலையில் புனிதநீராடி விட்டு பாராயணம் செய்வது மிகுந்த பலன்கள் தரும். இன்று நடத்தப்படும் ஹோமங்களுக்கு சிறப்பான பலன் உண்டு.

    இன்று ஆவணி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பிறக்கிறது. எனவே அசுவினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. குறிப்பாக நெய், ஒருசெம்பு பசும்பால், பழ வகைகள் ஆகியவற்றை தானமாக கொடுத்து பரிகாரம் செய்து கொள்ளலாம். இந்த பரிகார தானங்களை இன்று காலையிலேயே கொடுக்க வேண்டும்.

    தானம் செய்ய இயலாதவர்கள் சிறிது வாழைப்பழத்தை ஆலயங்களில் வைத்து வழிபட்டு விட்டு பிறகு அவற்றை ஆலய வாசலில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து விடலாம். இவ்வாறு பரிகாரங்கள், தானங்கள் செய்வதால் ஆவணி மாதம் முழுவதும் மனதில் நிம்மதி நிலவும். பண வரவும் அதிகரிக்கும். ஆவணி மாத தானத்துக்கு நீண்ட ஆயுள், நல்லவர்களுடன் சேருவது போன்ற பலன்கள் கிடைக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்துள்ளது வெயிலுகந்தம்மன் கோவில்.
    • அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் தினசரி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    10-ம் திருநாளான நேற்று காலை 6.30 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    இரவு அம்மன் அலங்கார சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் சண்முக விலாசத்தில் எழுந்தருளி சண்முகருக்கு எதிர்சேவை காட்சியளித்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து கோவிலை சேர்ந்தார்.

    தேரோட்ட நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், பணியாளர்கள் ராஜ்மோகன், அம்பலவாணன், ஆவுடையப்பன், செல்லகுத்தாலம், கார்த்திகேயன், மணியம் நெல்லையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×