என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விமானங்கள்"
- விமானங்களுக்கு தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
- மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை.
கொல்கத்தா:
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை நடைபெற்ற நிலையில் அவை வெறும் புரளி என்பது உறுதியானது.
சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, குஜராத் மாநிலம் ராஜ்கோட், ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள 23 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தாவில் 10 பெரிய ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. இதில் பெரும்பாலான ஓட்டல்கள் நட்சத்திர அந்தஸ்து கொண்டவை. இதைத்தொடர்ந்து அந்த ஓட்டல்களில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தினர். அதில் மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இ-மெயில் மூலம் புனை பெயரை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஓட்டல் வளாகத்தில் வெடிகுண்டுகளை கருப்பு பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதை விரைவில் வெடிக்கும். உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள் என கூறப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது. எனினும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள 10 ஓட்டல்களுக்கு நேற்று மதியம் 12.45 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கான்டென் என்ற பெயரில் இ-மெயில் மூலம் அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
அதில் 10 ஓட்டல்களில் வெடிகுண்டுகளை வைத்துள்ளதாகவும், அது சில மணி நேரத்தில் வெடித்து விடும். இன்று பல அப்பாவி உயிர்கள் பலியாகும். விரைந்து சென்று ஓட்டல்களை காலி செய்யுங்கள் என தெரிவித்து இருந்தார்.
உடனடியாக வெடி குண்டு செயலிழக்கும் படையினர் மூலம் ஓட்டல் களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் சோதனை நீடித்த நிலையில் ஓட்டல்களில் சந்தேகத்திற் கிடமாக எதுவும் சிக்க வில்லை என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதே போல திருப்பதியி லும் 3 ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் பெயரை தொடர்புபடுத்தி இந்த மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக சம்பந்தப் பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு மோப்ப நாய், வெடி குண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.
ஓட்டல் அறைகளில் இருந்தவர்களை வெளியே அனுப்பி விட்டு அங்குள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தியதில் மிரட்டல் வீண் புரளி என தெரியவந்தது. மேலும் ஜாபர் சாதிக் பெயரில் போலியான இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் முப்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ உள்ளிட்ட 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதன்படி, மும்பையில் இருந்து லண்டன் சென்ற விமானம் லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன.
- ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
துபாய்:
லெபனானில் கடந்த மாதம் 17-ந் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. அதற்கு அடுத்த நாளே நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இந்த 2 சம்பவங்களிலும் 37 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்து செல்ல அந்த நிறுவனம் தடைவிதித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துபையிலிருந்து அல்லது துபை வழியாக செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் நடைபெறவுள்ளது.
- அம்பானி வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.
இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரான அம்பானியின் வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இத்திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்களை அழைத்து வருவதற்கு 3 பால்கன் ஜெட் விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த திருமண விழாவுக்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த சங்கீத் நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர். தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், நடிகை நேஹா சர்மா, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
- பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது.
- பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
பெங்களூரு:
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் 11 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. பெங்களூருவை பொறுத்தவரையில் 93 சதவீதத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயில் வறுத்தெடுக்கிறது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.
அதன்படி நேற்று பெங்களூரு நகரில் 93.56 சதவீதம் வெயில் பதிவாகி இருந்தது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.
பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த மழையால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
கன மழையால் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி விட்டு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களது வாகனங்களில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பெங்களூருவில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில் பெங்களூருவில் பெய்த பலத்த கனமழை, மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு விமானங்கள் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.
5 வெளிநாட்டு விமானங்கள், 8 உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு கார்கோ விமானம் சென்னையில் தரையிறங்கின. பின்னர் பெங்களூருவில் வானிலை சீரடைந்ததும் இன்று அதிகாலை 3 மணிக்கு அந்த விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.
- திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8.55மணி, பகல் 12மணி, இரவு 9 மணிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- விருப்பப்படும் பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டுகளை, அந்த விமானங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு தினமும் காலை 6.20மணி, 9.25மணி, மதியம் 12.30மணி, மாலை 6.40 மணிக்கும், இதேபோல் திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8.55மணி, பகல் 12மணி, மாலை 3மணி, இரவு 9 மணிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று, இந்த 8 விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக, இன்று மாலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கும், மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னைக்கும், சிறப்பு பெரிய ரக விமானத்தை விமான நிறுவனம் இயக்குவதாகவும், விருப்பப்படும் பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டுகளை, அந்த விமானங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது.
- மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கோவை
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது.
தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்னர் தினமும் 35-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் விமானங்கள் இயக்கம் வெகுவாக குறைந்தது.
பல நாட்களுக்குப் பின்னர் மெல்ல இயல்பு நிலையை மீண்டும் திரும்ப தொடங்கியது. சமீபத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது. தற்போது மீண்டும் விமான போக்குவரத்து குறைய தொடங்கியுள்ளது. தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 24, 23 ஆக குறைந்துள்ளது.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-கோவை விமான நிலையத்தில் தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் நிரம்பி செல்கின்றன. ஆனால் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன.
சில சேவைகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டுள்ளன. போதிய எண்ணிக்கையில் பயணிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மீண்டும் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும் புதிதாக சில நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்