என் மலர்
நீங்கள் தேடியது "சின்ன வெங்காயம்"
- உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
- மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கோவை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.
உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை சின்ன வெங்காயம் பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும்.
தமிழ்நாட்டில், திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயம் உற்பத்தியில் அதிக பங்கு உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுவதால் உள்நாட்டு தேவைக்கு ஏற்ப கர்நாடகா ஆந்திரபிரதேசத்திலிருந்து சின்ன வெங்காயம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து சின்ன வெங்காயம், மேற்கு ஆசியா, இலங்கை, பங்களதேஷ், மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில், சின்ன வெங்காயத்தின் முக்கிய உற்பத்தியாளராக தமிழ்நாடு உள்ளது. தற்போது திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்தைக்கு பெரம்பலூர், தாராபுரம், பல்லடம் ஆகிய இடங்களிலிருந்தும் மற்றும் கர்நாடகாவிலிருந்தும் சின்ன வெங்காயம் வரத்து உள்ளது.
விலை முன்னறிவிப்பு திட்டமானது, கடந்த 23 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வுகளின் அடிப்படையில், தரமான சின்ன ெவங்காயத்தின் சராசரி பண்ணை விலை அறுவடையின் போது (மே முதல் ஜூன் வரை) கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சந்தை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என பரிந்துரைக்கப்படுகின்றனர்.
- முதல்தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.
- தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது.
காங்கயம் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமைதோறும் கூடும் வாரச் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள், கீரைகள் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்நிலையில், திங்கள்கிழமை கூடிய வாரச் சந்தையில் முதல்தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், இரண்டாம் தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.25க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.
- விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளது.
- வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும்.
உடுமலை :
தற்போது வைகாசி பட்டம் துவங்கியுள்ளது. குளிர்ந்த காற்று, அளவான வெப்பநிலை காணப்படுவதால் இந்த சீசனில் வெங்காயம் ஆரோக்கியமாக வளரும். கூடுதல் மகசூல் கிடைக்கும். இதை எதிர்பார்த்து விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்துவிலை 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஓராண்டு பயிர்களான வாழை, மஞ்சள், மரவள்ளி போன்றவை இந்த சீசனில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதல் வருவாய் ஈட்டவும், முதன்மை பயிரை பாதிக்காத வகையில் சின்ன வெங்காயம் இருப்பதாலும் விவசாயிகள் அதை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும். ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் அறுவடை இருக்காது. அந்த சீசனில் அதிக விலை கிடைக்கும்.
இந்த ஆண்டு மழை அதிகம் பொழிந்ததால் கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் போதுமான நீர் வளம் உள்ளது. இந்த சீசனில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இது சின்ன வெங்காய சாகுபடிக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றனர்.
- வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
- தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் என அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் திங்கள்கிழமை கூடிய வாரச் சந்தையில் முதல் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது.
- உழவர் சந்தைகளில் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி வெளிமார்க்கெட்டுகளில் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.
- பச்சை மிளகாய் சீசன் இல்லாததாலும், வரத்து குறைந்ததாலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மதுரை:
சமீப காலமாக காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. தற்போது பல்வேறு பகுதிகளில் காய்கறி உற்பத்தி அதிகளவில் செய்யப்பட்டாலும் மழை மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக காய்கறி மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் காய்கறி விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.
நாட்டு காய்கறிகளான கத்தரிக்காய், வெண்டை, புடலை மற்றும் சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.
தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்து காணப்படுவதால் மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உழவர் சந்தைகளில் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி வெளிமார்க்கெட்டுகளில் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக கிலோ 50 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் இன்று கிடுகிடுவென விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உழவர் சந்தைகளில் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதுபோல இஞ்சி கிலோ 220 ரூபாய்க்கு உழவர் சந்தைகளில் விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் 260 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சமீப காலமாக கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை மிளகாய் இன்று திடீரென விலை எகிறியது.
உழவர் சந்தையில் 130 ரூபாய்க்கு பச்சை மிளகாய் விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 160 ரூபாய் வரை விற்பனையானது. பச்சை மிளகாய் சீசன் இல்லாததாலும், வரத்து குறைந்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர மற்ற காய்கறிகள் உழவர் சந்தைகளில் இன்று விற்பனை செய்யப்பட்ட விலை விவரம் வருமாறு:-
உருளைக்கிழங்கு-ரூ.50, கேரட்-ரூ. 70, முட்டைகோஸ்-ரூ.28, பீட்ரூட்-ரூ.40, சவ் சவ்-ரூ.24, முருங்கை பீன்ஸ்-ரூ.110, பட்டர் பீன்ஸ்-ரூ.110, சோயா பீன்ஸ்-ரூ.110, பச்சை பட்டாணி-ரூ.170, நூல்கோல்-ரூ.70, டர்ணிப்-ரூ.60, குடை மிளகாய்-ரூ.70, காளிபிளவர்-ரூ.35, வெள்ளைபூண்டு-ரூ.200,
கத்தரிக்காய்-ரூ.42, வெண்டைக்காய்-ரூ.26, புடலை-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.60, சுரைக்காய்-ரூ.24, பெரிய வெங்காயம்-ரூ.25, பூசணி-ரூ.18, சர்க்கரை பூசணி-ரூ.24, அவரை-ரூ.90, சிறிய பாகற்காய்-ரூ.140, பெரிய பாகற்காய்-ரூ.60, கொத்தவரை-ரூ.36, கறிவேப்பிலை-ரூ.42, புதினா-ரூ.40, கொத்தமல்லி-ரூ.100, முருங்கைக்காய்-ரூ.60, கோவக்காய்-ரூ.25, மொச்சைக்காய்-ரூ.55, முள்ளங்கி-ரூ.24 ஆகிய விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களில் விற்கப்பட்ட விலையை ஒப்பிடுகையில் ஒவ்வொரு காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ. 30 வரை விலை அதிகரித்துள்ளது.
உழவர் சந்தைகளில் இந்த விலையில் காய்கறிகள் விற்கப்பட்டாலும் காய்கறி மார்க்கெட்டுகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க உழவர் சந்தைகளை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் மதுரை பீ.பி.குளம், பழங்காநத்தம், அண்ணாநகர் உழவர் சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
- மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.
போரூர்:
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று கிலோ ரூ.120-க்கு தக்காளி விற்கப்பட்டது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் தக்காளி விலையால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை தக்காளி வரத்து இன்னும் சீராக வில்லை. இதனால் தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளில் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலையை தொடர்ந்து தற்போது காய்கறி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது. காய்கறிகள் விலை கிலோ ரூ.50-க்கும் கீழ் இருந்த நிலையில் அனைத்து காய்கறிகளின் விலையும் தற்போது எகிறியுள்ளது.
கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று 400 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. மொத்த மர்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ120-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70-க்கும், ஊட்டி கேரட் ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் ரூ.120-க்கும் விற்பனை ஆனது.
பச்சை மிளகாய் ரூ.110-க்கும், உஜாலா கத்தரிக்காய்-ரூ.60-க்கும், முருங்கைக்காய் ரூ.60,வெண்டைக்காய் -ரூ.40, இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் காய்கறிகள் விலை தாறுமாறாக அதிகரித்து பீன்ஸ் ஒரு கிலோ ரூ.140வரையிலும், இஞ்சி ஒரு கிலோ ரூ.250-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.150வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் பெங்களூர் தக்காளி விலையும் உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்கப்பட்டது. ஆனால் அதையும் வாங்கி செல்ல ஆள் இல்லாமல் பல இடங்களில் விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது.
தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் தமிழகத்தில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தியை விவசாயிகள் பலர் நிறுத்தி விட்டனர். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது பெய்த மழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் கடுமையாக சேதமடைந்து வீணாகிவிட்டது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.
இன்று கோயம்பேடு சந்தையில் ஒரு பெட்டி தக்காளி ரூ1200-க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் தக்காளி உற்பத்தி நடந்து வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநி லத்தில் ஒரு பெட்டி தக்காளி (14கிலோ) ரூ1600-க்கு விற்கப்படுகிறது. எனவே இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து தற்போது வெகுவாக குறைந்து உள்ளது.
- கிலோக்கணக்கில் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள், இன்றைக்கு கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.
கோவை:
கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அங்கு அவை வியாபாரிகளுக்கு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே கோவை காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து தற்போது வெகுவாக குறைந்து உள்ளது.
கோவை மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 110-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வந்திறங்குவது வழக்கம். ஆனால் தற்போது சராசரியாக 40 லாரிகள் என்ற நிலையில் மட்டுமே காய்கறிகள் வரத்து உள்ளது. கோவை மாவட்டத்திலும் காய்கறி சாகுபடி குறைந்து உள்ளது. எனவே விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வருவது இல்லை.
கோவை ஒட்டுமொத்த சந்தைகளுக்கு உணவு பொருட்களின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளதால், அங்கு காய்கறிகளின் விலை தற்போது உச்சத்தை எட்டி உள்ளது. இதனால் கிலோக்கணக்கில் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள், இன்றைக்கு கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.
கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தற்போது நாட்டு தக்காளி ரூ.110-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து உள்ளது.
கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை ஒருபுறம் உச்சாணிக் கொம்பில் நிற்க, சின்ன வெங்காயத்தின் விலை இன்னொரு பக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
இங்கு சின்ன வெங்காயம் பல்வேறு தரங்களில் ஒரு கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது. அதேபோல 2 கிலோ பெரிய வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கோவை மட்டுமின்றி பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ளவில்லை. வெளியூர்-வெளிமாவட்டங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது.
எனவே கோவை மார்க்கெட்டுகளுக்கான காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் தற்போது பருவமழை குறைந்து விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். எனவே கோவை மார்க்கெட்டுக்கான காய்கறிகளின் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலை மீண்டும் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 50 முதல் 60 டன் சின்ன வெங்காயம் வந்த நிலையில் திடீரென வரத்து குறைந்தது.
- தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலை பொதுமக்களை கண்ணீர் வரச் செய்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சென்னைக்கு குறைவாகவே வருவதால் விலையேற்றத்து டன் காணப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கே தக்காளி கிலோ ரூ.100-க்கு இன்று விற்கப்பட்டது. இதனால் காய்கறி கடைகளில் சில்லரை விற்பனை ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.
தக்காளி இப்போது அபூர்வ உணவு பொருளாக மாறி விட்டது. வீட்டு சமையல்களில் தக்காளியை பெயர் அளவுக்குதான் பயன்படுத்துகின்றனர். தக்காளியை போல இஞ்சி கிலோ ரூ.300-க்கும், பச்சை மிளகாய் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமையலில் குறைந்த அளவில் இதன் பயன்பாடு இருந்தாலும் கூட கட்டாயம் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சில்லரை கடைகளில் பச்சை மிளகாய் 10 ரூபாய்க்கு கேட்டால் 4 அல்லது 5 எண்ணி தருகிறார்கள்.
இந்த நிலையில் சின்ன வெங்காயம் விலையும் எகிறியது. கடந்த மாதம் ரூ.50-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் படிப்படியாக ரூ.100 வரை உயர்ந்தது. இன்று கிலோ ரூ.230-க்கு விற்கப்படுகிறது. வரலாறு காணாத அளவிற்கு சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 50 முதல் 60 டன் சின்ன வெங்காயம் வந்த நிலையில் திடீரென வரத்து குறைந்தது. 20 டன் அளவில் சின்ன வெங்காயம் வருவதால் தட்டுப்பாட்டின் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலை பொதுமக்களை கண்ணீர் வரச் செய்துள்ளது. மற்ற பச்சை காய்கறிகளான கேரட், அவரை, முட்டை கோஸ், கத்திரிக்காய் போன்றவை விலை குறைவாக இருந்த போதிலும் இவற்றின் விலை குறையாமல் தொடர்ந்து நீடித்து வருவதால் பொதுமக்கள் மிக குறைந்த அளவிலேயே வாங்குகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று பச்சை மிளகாய் கிலோ மொத்த விற்பனைக்கு ரூ.60, பீன்ஸ் கிலோ 90-க்கு விற்கப்பட்டது. பச்சை மிளகாய் விலை சற்று குறைந்து உள்ள நிலையில் பீன்ஸ் விலை சில்லரையில் ரூ.120 வரை விற்கப்படுகிறது.
பொதுமக்கள் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதால் கூலி தொழிலாளர்கள், குறைந்த வருவாய் உடையவர்கள் பெரும் சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- ஒரு கிலோ சின்ன வெங்காயம் இன்று நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் 180 முதல் 200-க்கு விற்பனையானது.
- இன்னும் காய்கறிகளின் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
ஒட்டன்சத்திரம், மேட்டுப்பா ளையம், ஒசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு வரை விற்கப்பட்டது.
தற்போது கிலோ ரூ.20 குறைந்து இன்று ரூ.120-க்கு விற்பனையானது.
தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் இன்று நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் 180 முதல் 200-க்கு விற்பனையானது.
இதேபோல் இஞ்சியின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.300-க்கு விற்கப்பட்டது. பூண்டு ரூ.150-க்கு விற்பனையானது. தக்காளி, இஞ்சி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தக்காளி பயன்பாட்டை குறைத்து வந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர். நாகர்கோவில் மார்க்கெட்டில் தக்காளி, சின்ன வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பீன்ஸ், கேரட், மிளகாயின் விலையும் அதிகமாகவே காணப்படுவதால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கான அளவை குறைத்து வருகின்றனர்.
வழக்கமாக தக்காளி, சின்ன வெங்காயத்தை கிலோ கணக்கில் வாங்கி வந்த நிலையில் தற்போது கிராம் கணக்கில் வாங்க தொடங்கி யுள்ளனர். நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனை காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-
பீன்ஸ் கிலோ ரூ.100, கேரட் ரூ.70, மிளகாய் ரூ.100, நாட்டுக் கத்தரிக்காய் ரூ.80, வரி கத்தரிக்காய் ரூ.50, பீட்ரூட் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.30, புடலங்காய் ரூ.40, தடியங்காய் ரூ.30, சேனை ரூ.60-க்கு விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், வெளி மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக காய்கறிகளின் உற்பத்தி குறைவாகவே உள்ளது. மார்க்கெட்டுக்கு குமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி வெளியூர்களில் இருந்தும் குறைவான அளவில் காய்கறிகள் வருகிறது. மக்களின் தேவை அதிகரித்து உள்ளதால் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்து காணப்படுகிறது. இன்னும் காய்கறிகளின் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றார்.
- தக்காளி கிலோ ரூ.80க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
தரங்கம்பாடி:
தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி மயிலாடுது றையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடக்கி வைத்தார்.
தக்காளி கிலோ ரூ. 80க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையை விட குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துறை இணைச் இயக்குனர் சேகர், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மற்றும் கூட்டுறவு துறை மாவட்ட இணை பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், சரக துணை பதிவாளர் ராஜேந்திரன், பொது விநியோகத் திட்டம் துணைப்பதிவாளர் அண்ணாமலை, தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் கலந்து கொண்டனர்.
முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்து க்கான கூட்டுறவு ஒன்றியத்தை கலெக்டர் மகாபாரதி குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைத்தார்.
- மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
- தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம்.
கோவை:
தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இன்னொருபுறம் ஓட்டல்களில் தக்காளி சட்னி, வெங்காய பொரியல் ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது சாப்பாட்டு பிரியர்களை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.
கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இதுதவிர வெளி மாவட்டங்களில் இருந்தும் சரக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. கோவை மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அங்கு விளையும் காய்கறிகளை அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு சிரமநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மார்க்கெட்டுக்கு விளைபொருட்களை கொண்டு வரவில்லை. இன்னொருபுறம் வெளி மாவடடங்களில் இருந்தும் சரக்கு காய்கறி லாரிகளின் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம். ஆனால் இங்கு தற்போது 40 லாரிகள் மட்டுமே வந்து செல்கின்றன.
கோவை காய்கறி மார்க்கெட்களில் உள்ளூர் காய்கறி வரத்து குறைவு, வெளியூர் சரக்கு லாரிகளின் வருகை குறைவு ஆகியவை காரணமாக சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியது.
கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தக்காளி விலை கிலோ ரூ. 40 ஆக இருந்தது. ஆனால் தற்போது 120 ரூபாயாக உள்ளது. அதேபோல சின்ன வெங்காயத்தின் விலை முன்பு ரூ.40 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120 ஆக உள்ளது.
கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் பெரியஅளவில் இல்லை. எனவே விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளை தொடங்கி விட்டனர். அதேபோல வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகளில் காய்கறி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
எனவே கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் விலை சிறிதுசிறிதாக குறைய தொடங்கி உள்ளது. தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒருகிலோ சின்ன வெங்காயம் ரூ.170 ஆக இருந்தது. அதன் விலையில் தற்போது 50 ரூபாய் குறைந்து, ஒருகிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் தக்காளி விலை மட்டும் குறைாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காய்கறி மார்க்கெட்டுகளில் நேற்று வரை ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.110, ஆப்பிள் தக்காளி ரூ.140 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு நாட்டு தக்காளியின் விலை ரூ.10 அதிகரித்து தற்போது ரூ.120க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் தக்காளியின் விலையில் மாற்றம் இல்லை.
கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்தபோதிலும், தக்காளியின் விலை அதிகரிப்பு பொதுமக்களை கவலைப்பட வைத்து உள்ளது.
- விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம்.
- விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சின்ன வெங்கயம் அதிக அளவில் பயிரிட்டிருந்ததால், விரைவாக அவற்றை எடுத்து மார்க்கெட்டுகளில் விற்பனை செய்தனர்.
இந்நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக சின்ன வெங்காயம் விலை ரூ.70 ஆக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். செங்கோட்டையை அடுத்த இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கரிசல் குடியிருப்பு, சிவராம பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் செய்யவேண்டிய சின்ன வெங்காயம் சாகுபடியானது தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குறைந்துவிட்டது. அங்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ள சுமார் 500 ஏக்கர் அளவிலான நிலங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் நெல்லுக்கு அடுத்தப்படியாக சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்கிறோம். 2 மாத பயிரான சின்ன வெங்காயத்துக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.
விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு உழுவது, பயிரிடுவது, பூச்சிக்கு மருந்து அடித்தல், உரம் களையெடுத்தல், மழை பொய்த்தால் விலைக்கு வாங்கி தண்ணீர் பாய்ச்சல் உள்ளிட்ட வகையில் அறுவடை வரை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை கூடுதலாக செலவாகிறது.
அதற்கு தகுந்த மாதிரி அறுவடை தொடங்கிய காலத்தில் சென்ற மாதம் விலை ரூ.140 வரை விலை கிடைத்ததால் லாபகரமாக இருந்த நிலையில் தற்போது அறுவடை முடிந்த சின்ன வெங்காயம் ரூ.70-க்கும் விலை போகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். மழை காலங்களில் உரிய முறையில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.