search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்ன வெங்காயம்"

    • உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
    • மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

    உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை சின்ன வெங்காயம் பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும்.

    தமிழ்நாட்டில், திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

    சின்ன வெங்காயம் உற்பத்தியில் அதிக பங்கு உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுவதால் உள்நாட்டு தேவைக்கு ஏற்ப கர்நாடகா ஆந்திரபிரதேசத்திலிருந்து சின்ன வெங்காயம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    தமிழ்நாட்டில் இருந்து சின்ன வெங்காயம், மேற்கு ஆசியா, இலங்கை, பங்களதேஷ், மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தியாவில், சின்ன வெங்காயத்தின் முக்கிய உற்பத்தியாளராக தமிழ்நாடு உள்ளது. தற்போது திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்தைக்கு பெரம்பலூர், தாராபுரம், பல்லடம் ஆகிய இடங்களிலிருந்தும் மற்றும் கர்நாடகாவிலிருந்தும் சின்ன வெங்காயம் வரத்து உள்ளது.

    விலை முன்னறிவிப்பு திட்டமானது, கடந்த 23 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

    ஆய்வுகளின் அடிப்படையில், தரமான சின்ன ெவங்காயத்தின் சராசரி பண்ணை விலை அறுவடையின் போது (மே முதல் ஜூன் வரை) கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சந்தை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என பரிந்துரைக்கப்படுகின்றனர்.

    • விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல், வேதனையடைந்து வருகின்றனர்.
    • நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குடிமங்கலம்:

    உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் காய்கறி பயிர்களில் சின்னவெங்காயம் பிரதானமாக உள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் நாற்று நடவு முறை மற்றும் நேரடியாக காய் நடவு முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதிகளில் பிரதான சாகுபடியாக சின்ன வெங்காயம் இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நோய்த்தாக்குதல், விலை சரிவு, சாகுபடி செலவினம் என பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டதால் நடப்பு பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

    இப்பகுதிகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது.சாகுபடியில் விதைப்பு பருவத்தில் மழை குறைந்தது, தொடர்ந்து பெய்த அதிக பனிப்பொழிவு, கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களினாலும், களைக்கொல்லி, பூச்சி மருந்துகள் உள்ளிட்ட இடு பொருட்கள் குறித்து தொழில் நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல், வேதனையடைந்து வருகின்றனர். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 டன் வரை மகசூல் இருக்கும் நிலையில் நடப்பாண்டு 4 டன் மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது.

    ஒரு சில பகுதிகளில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், ஒட்டுமொத்த வெங்காய பயிரும் கருதி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளை நிலங்களில் 20 முதல் 25 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    சின்ன வெங்காயம் சாகுபடியில் சீதோஷ்ண நிலை மாற்றம், தரமற்ற இடு பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 70 முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் நடப்பாண்டு கடுமையான பனிப்பொழிவு, வெயில், மழையில்லாதது என சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மகசூல் குறைந்துள்ளதோடு விலையும் குறைவாக உள்ளது. பல இடங்களில் வெங்காயம் பயிர் கருகி வீணாகியுள்ளது. இதனால் நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உடுமலை பகுதிகளில் ஆண்டு தோறும் சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. அதே போல் தக்காளி, புடலங்காய், அவரைக்காய், பாகற்காய் என பந்தல் சாகுபடியிலும், மஞ்சள் தேமல் நோய் உள்ளிட்ட காரணங்களினால் பாதிப்புகள் ஏற்படுவதோடு விளைபொருட்களுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை.

    மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  

    • ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர்.
    • அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம்.

     குண்டடம்

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    குண்டடம் பகுதி வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்து வருகிறோம்.

    மேலும் இந்த பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒடிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது.

    சின்னவெங்காயத்தை 100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள சின்ன வெங்காய பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 8 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்றால் அதிக லாபம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ. 40 ,உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20 ,பீன்ஸ் ரூ.40 ,கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60 ,பச்சைமிளகாய் ரூ.40 ,வெண்டைக்காய் ரூ.40 ,இஞ்சி ரூ.60 ,அவரைக்காய் ரூ.60 ,நேரோ காய் ரூ. 20, கோவக்காய் ரூ.30 ,முள்ளங்கி ரூ. 40 ,சுரக்காய் ரூ. 10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதித்தது.
    • பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் பரவலாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மல்லூர், பனமரத்துப்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி, மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெறுகிறது.

    கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதித்தது. இதனால் அப்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100 வரை விலை உயர்ந்தது.

    இதையடுத்து கடந்த டிசம்பரில் விவசாயிகள் அதிகளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது பல இடங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு சின்னவெங்காயம் வரத்து அதிகரிதுள்ளதால் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சின்ன வெங்காயம் வியாபாரிகள் கூறுகையில், "கடந்த இரு மாதத்திற்கு முன்பு சின்ன வெங்காயம்" கிலோ ரூ.90 முதல் ரூ.100-க்கு விற்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு சின்னவெங்காயம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட 40 சதவீதம் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பால் ரூ.40 முதல் ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

    • இதனால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர்

    அரியலூர் ஆலத்தூர் தாலுகா, கூத்தனூரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காய செடிகள் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    • காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
    • பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும், தக்காளி கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

    காங்கயம்:

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை வளாகம் உள்ளது. வாரந்தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்நிலையில் திங்கட்கிழமை கூடிய சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும், தக்காளி கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

    • சின்ன வெங்காயம் வந்தால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
    • சின்ன வெங்காயம் உரிய விலைக்கு விற்பதால் விவசாயிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

     பல்லடம் : 

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமன்றி நல்ல தரமான சின்ன வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயத்துக்கு ஏற்ற தட்பவெப்பநிலை நல்ல விளைச்சலை கொடுத்து வருகிறது. ஆரம்ப காலங்களில் நாட்டு ரகங்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகள் தற்போது உயர்ரக சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    அனைத்து சமையலுக்கும் சின்ன வெங்காயம் பயன்படுத்தப்படுவதால் எப்போதும் அதற்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. எனவே விவசாயிகள் ஆர்வமுடன் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    கடந்த காலங்களில் விலை குறைவாக இருந்த சின்ன வெங்காயம் தற்போது ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து ரூ.50 லிருந்து ரூ.80 வரை விலை கொடுத்து வாங்குகிறார்கள். நல்ல தரமான சின்ன வெங்காயம் கூடுதல் விலைக்கு வாங்கப்படுகிறது.

    மேலும் விலை குறைவான சமயங்களில் விவசாயிகள் பட்டறை அமைத்து இருப்பு வைத்து விலை ஏறுகிறபோது சின்ன வெங்காயத்தை விற்பனை செய்தும் வருகிறார்கள். பல்லடம் பகுதியில் தற்போது தான் நடவு பணிகள் தொடங்க உள்ளது.

    எனவே வெளி மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் வந்தால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    எனவே மழை இல்லாமல் இருந்தால் அடுத்து வரக்கூடிய நாட்களில் ராசிபுரம், நாமக்கல் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு தயாரான நிலையில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அவ்வாறு வரும் பட்சத்தில் விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் தற்போதைக்கு சின்ன வெங்காயம் உரிய விலைக்கு விற்பதால் விவசாயிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    • அறுவடை சீசன் இல்லாததால் இருப்பு வெங்காயம் மட்டுமே சந்தைக்கு வருகிறது.
    • பல விவசாயிகள் விதை வெங்காயம் கொள்முதல் செய்வதால் சின்ன வெங்காயத்திற்கு கிராக்கி நிலவுகிறது.

    திருப்பூர் : 

    மார்கழி மாதம் தொடங்கி உள்ள நிலையில் படிப்படியாக மழை குறைந்து விடும் என்பதால் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சின்ன வெங்காய நடவு பணியில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர்.

    அறுவடை சீசன் இல்லாததால் இருப்பு வெங்காயம் மட்டுமே சந்தைக்கு வருகிறது. பல விவசாயிகள் விதை வெங்காயம் கொள்முதல் செய்வதால் சின்ன வெங்காயத்திற்கு கிராக்கி நிலவுகிறது.

    வியாபாரிகள் சராசரியாக கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர். சில்லறை விலையில் முதல் தரம் கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தரம் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கலூர் ஒன்றியம் மருதுரையான் வலசை சேர்ந்த வெங்காய வியாபாரி ரவி கூறுகையில், புதிய வெங்காயம் வர ஒரு மாதத்துக்கும் மேல் ஆகும். அதுவரை விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை. புதிய காய்கள் பொங்கலுக்கு பின் வர துவங்கும். அதன் பின் விலை படிப்படியாக குறையும் என்றார்.

    • சின்ன வெங்காய நாற்றுகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை.
    • பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

     குண்டடம், நவ.23-

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்ன வெங்காய நாற்றுகள் மூலம் அதிகப்படியான லாபத்தை ஈட்டிவருகின்றனர்.

    இது குறித்து மேடுக்கடையை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-தற்போது இப்பகுதி விவசாயிகள், சின்ன வெங்காய நாற்றுகக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிய நாற்று ரகங்கள் பயிர்செய்ய ஒரு ஏக்கருக்கு விதைகள் 35 கிலோ மூலம் 400 பாத்திகள் விதை விடுகின்றனர். இதற்கான செலவுகள் ஏக்கருக்கு விதை, கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு 3 லட்சம் வரை செலவாகிறது

    இந்த பயிர்கள் 40 முதல் 45 நாகளில் பிடுங்கி நடவு செய்யலாம். இந்த நிலையில் தற்சமயம் சின்ன வெங்காய விலை உயர்ந்துள்ளதாலும் சில நாட்களாவே பரவலாக மழை பொழிந்துள்ளதால் தேனீ, கம்பம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொங்கலூர், பூளவாடி, உடுமலை, உள்பட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் சின்ன வெங்காய நாற்றுகளை வாங்கிச்செல்கின்றனர்.

    இங்கு நல்ல தரமான நாற்றுகளை விற்பனைக்கு பயிர்செய்வதால் வாங்கிச்செல்லும் விவசாயிகளுக்கும் பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    கடந்தவருடம் ஒரு பாத்தி சின்ன வெங்காய நாற்றுகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானதால் நல்ல லாபம் ஈட்டினர். இதனால் இந்தவருடமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காய நாற்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • இனிவரும் காலங்களிலும் மழை அதிகரித்தால் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகரின் மத்திய பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் தினமும் மொத்த மற்றும் சில்லறை காய்கறி விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இங்கிருந்து அருகாமையில் உள்ள சில மாவட்டங்களுக்கும் காய்கறி சப்ளை செய்யப்படுகிறது.

    அந்த அடிப்படையில் காந்தி மார்க்கெட்டுக்கு தினமும் 250 டன் சின்ன வெங்காயம் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து இங்கு வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பருவமழை பாதிப்பினால் சின்ன வெங்காயம் வரத்து சரிந்துள்ளது. இதனால் விலையும் மெல்ல மெல்ல உயர்ந்து விட்டது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.100 விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    நேற்று முன்தினம் ரூ.80-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் இன்றைய தினம் மேலும் விலை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

    இதுபற்றி திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொறுப்பாளர் கமலக்கண்ணன் கூறும் போது, மழையின் காரணமாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் சின்ன வெங்காயம் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இன்று 50 டன் சின்ன வெங்காயம் மட்டுமே திருச்சி மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறது. விலை ஏற்றத்தினால் சின்ன வெங்காயம் வாங்குவதை மக்கள் குறைத்துள்ளனர்.

    சாம்பாருக்கு அதிகம் சின்ன வெங்காயம் பயன்படுத்துகிறார்கள். தற்போது விலை ஏறி உள்ளதால் அதற்கு பதிலாக பெரிய வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். பெரிய வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.40 என்ற அளவில் உள்ளதால் அதன் விற்பனை அதிகரித்து உள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களிலும் மழை அதிகரித்தால் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது என்றார்.

    • மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இனிமேலும் இருப்பு வைக்க முடியாத காரணத்தால்தற்பொழுது இருப்பு வைத்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளார்கள்.

    வீரபாண்டி:

    திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 10க்கு விற்கப்பட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால்விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து இருப்பு வைத்தார்கள். இனிமேலும் இருப்பு வைக்க முடியாத காரணத்தால்தற்பொழுது இருப்பு வைத்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளார்கள். தற்பொழுது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய் முதல் ரூ.50 வரை வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. உரங்களின் விலை உயர்வு, கூலி உயர்வு மற்றும் உற்பத்தி குறைவு ஆகிய காரணங்களால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 60 க்கு மேல் விற்றால் ஒரு அளவு லாபம் பெற முடியும். மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×