search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிருந்தாவனம்"

    • கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.
    • அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.

    கிருஷ்ணர் பிறந்த கதை

    நீண்ட காலத்திற்கு முன்பு, பண்டைய இந்தியாவில், உக்ரசேனன் என்ற அரசன் இருந்தான்.

    அவருக்கு இளவரசர் கம்சன் மற்றும் இளவரசி தேவகி என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

    இளவரசர் கம்சன் இயல்பிலேயே கெட்டவர்.

    கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.

    விரைவில், அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.

    திருமணத்திற்குப் பிறகு, கம்சன் வானத்திலிருந்து ஒரு தெய்வீக அசரீரியைக் கேட்டான்,

    "அரசே! உன் சகோதரியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்லும் அளவுக்கு வளர்வான்" என்று, இதைக் கேட்டு பயந்த கம்சன் தனது சொந்த சகோதரி தேவகி மற்றும் அவரது கணவர், மன்னர் வாசுதேவ் ஆகியோரை உடனடியாக சிறையில் அடைத்து, தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தான்.

    வருடங்கள் கடந்தன. ஒவ்வொரு முறையும் தேவகி சிறையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, கம்சன் வந்து குழந்தையைத் தன் கைகளால் கொன்றான்.

    எட்டாவது முறையாக தேவகி கருவுற்றபோது, வசுதேவரின் நண்பன் மன்னன் நந்தனின் மனைவி யசோதாவும் கர்ப்பமாக இருந்தாள்.

    எட்டாவது குழந்தை, பகவான் கிருஷ்ணர், சிறையில் நள்ளிரவில் ராணி தேவகிக்கு பிறந்தார்.

    • மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
    • ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணா... கிருஷ்ணா என்றால் இன்பம் வரும்

    மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.

    ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத் தினத்தை ஆண்டு தோறும் பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.

    இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினம் செப்டம்பர் 6 மற்றும் 7ந் தேதிகளில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று நள்ளிரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று, அவரது சக்தி ஆயிரம் மடங்கு அதிகரிப்பதாக ஐதீகம்.

    எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இரவு, "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்று 108 தடவை அல்லது 1008 தடவை சொல்லி வழிபட்டால் கிருஷ்ண பகவானின் அருள் பரிபூரணமாய் நமக்கு கிடைக்கும்.

    மேலும் கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் "பஜகோவிந்தம்" பாட வேண்டும்.

    ஆதிசங்கரர் தான் சென்ற இடங்களில் எல்லாம் பஜகோவிந்தம் பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார்.

    • பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.
    • பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன.

    கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.

    கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக்கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக 'விரஜபூமி' என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இந்த 'விரஜ பூமி' சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது.

    இதை வலமாகக் சுற்றி வருவது, 'விரஜ பரிக்ரமா' எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர். உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு.

    பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபுச் சேர்ந்த வைணவ அடியார்கள், 'பரிக்ரமா'வை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள். பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.

    கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் 'விரஜ பூமி'யில் உள்ளன. 'பிருந்தா' என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன.

    பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன. கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே!

    பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன. யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.

    இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள். தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம்.

    மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.

    • மகாதானபுரம் ராகவேந்திரா பிருந்தா வனத்தில் 26-வது ஆண்டு ஆராதனை விழா நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. 14-ந்தேதி வரை 3 நாட்கள் விழா நடக்கிறது.
    • விழா நாட்களில் காலையில் அபிஷேக ஆராதனை மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனையும் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தில் காரியசித்தி ஸ்ரீ ராகவேந் திரா மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது.

    இங்கு ஸ்ரீராகவேந்தி ரரின் 351-வது ஆராதனை மற்றும் மகாதானபுரம் ராகவேந்திரா பிருந்தா வனத்தில் 26-வது ஆண்டு ஆராதனை விழா நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. 14-ந்தேதி வரை 3 நாட்கள் விழா நடக்கிறது.

    விழா நாட்களில் காலையில் அபிஷேக ஆராதனை மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனையும் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 6.30 மணிக்கு ஸ்ரீராகவேந்திரா பக்தர்கள் வழங்கும் பக்தி பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு ஸ்வஸ்தி தீபா ராதனை நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மகாதானபுரம் காரியசித்தி ஸ்ரீ ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனத்தின் தலைவர் ஏ.ராகவேந்திரா மோகன் மற்றும் ராகவேந்திரா பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    ×