search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ண ஜெயந்தி"

    • வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும்.
    • குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது.

    சில ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று உற்சவர் புறப்பாட்டின்போது, முன்னால் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடியபடி, கிருஷ்ண கானங்களை இசைத்தபடி செல்வர்.

    கரகாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்த சாகசங்களும் நடைபெறும். ஊரைச் சுற்றிவந்து உற்சவரைத் திரும்பவும் ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வார்கள்.

    மாக்கோலம்

    வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும். குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது.

    வீட்டின் வாயிற்படியிலிருந்து பூஜை அறை வரை கண்ணனின் பிஞ்சு சேவடிக் கமலங்களை மாக்கோலமாக இடுவார்கள்.

    கோகுலத்தில் கண்ணன் தனது தோழர்களுடன் கோபியர் இல்லந்தோறும் சென்று வெண்ணெயைத் திருடித் தின்னும்போது, வீடு முழுவதும் வெண்ணெய் சிதறிக் கிடக்கும்.

    அவனது கமலப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடுகள் முழுவதும் நிறைந்திருக்கும்.

    இந்த நினைவுச் சின்னமாகவே மாக்கோலத்தால் வரையப்பட்ட மாக்கோலங்கள் திகழ்கின்றன.

    • அவ்வாறு உடைக்க முயற்சி செய்யும்போது கயிறை மேலும் கீழும் ராட்டினம் போன்ற கருவி மூலம் இழுப்பார்கள்.
    • சிரமப்பட்டு யாராவது ஒருவர், கம்பால் உறியிலுள்ள சட்டியை உடைத்துவிடுவார்.

    உறி ஒன்றில் சட்ட ஒன்றைக் கட்டி வைத்து கயிற்றில் தொங்கவிட்டிருப்பார்கள். கம்பால், உறியில் உள்ள சட்டியைத் தட்டி உடைக்க வேண்டும்.

    அவ்வாறு உடைக்க முயற்சி செய்யும்போது கயிறை மேலும் கீழும் ராட்டினம் போன்ற கருவி மூலம் இழுப்பார்கள்.

    அப்போது பெண்கள், உறியை அடிக்க முயற்சி செய்யும் இளைஞர்களின் மீது தண்ணீரை ஊற்றித் தடை செய்ய முயற்சிப்பார்கள்.

    சிரமப்பட்டு யாராவது ஒருவர், கம்பால் உறியிலுள்ள சட்டியை உடைத்துவிடுவார். அவருக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

    விளையாட்டாகவும் பொழுது போக்காகவும் நடைபெறும். இது, கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் திருடிய நிகழ்ச்சியை நினைவு கூறவே.

    • அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள்.
    • வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும்.

    கிராமங்களில், கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணெயைத் தடவிவிடுவார்கள்.

    அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள்.

    வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும்.

    இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப்பொருட்களைப் பிடிக்க முயலும்போது, பெண்கள் தண்ணீரை அவர்கள்மீது ஊற்றுவார்கள்.

    எண்ணெய் பூசப்பட்ட மரம் வழுக்கும்.

    தண்ணீரை ஊற்றும்போது மேலும் வழுக்கும். யாராவது ஒருவர் கஷ்டப்பட்டு வழுக்குமரத்தில் ஏறி பரிசுப்பொருளை அடைந்துவிடுவார்கள்.

    • ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்கு காட்சியளித்தார்.
    • கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது.

    உடுப்பி கிருஷ்ணர் கோவில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோவிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது.

    சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.

    விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோவிலில் உள்ளது.

    தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார்.

    அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் 'சந்திர புஷ்கரணி'.

    hநட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.

    உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

    புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது.

    உடுப்பியில் மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது.

    இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோவில் சமையலுக்குப் பயன்படுகின்றது.

    முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

    அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டுவந்தார்.

    ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்கு காட்சியளித்தார்.

    கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது.

    பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது. தற்போது அதுவே நடைமுறையில் உள்ளது.

    • ஆனால் அந்த சகாதேவன்தான் பாண்டவர் ஐவரும் பாரத யுத்தத்தில் உயிர் பிழைத்து வாழக் காரணமாகயிருந்தவன்.
    • பூபாரம் தீர்க்க வந்த பரமாத்மாவிற்கு வேண்டியவர் வேண்டாதவர், உற்றவர், மற்றவர் என்ற பேதங்களில்லை.

    பாண்டவர் ஐவருள் யார் கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர் என்று சொல்ல முடியாது.

    ஒவ்வொருவரும் அவர் மீது தங்கள் உள்ளத்தில் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். ஆனால் சற்றும் வெளியில் தெரியாத பக்தி சகாதேவன் பக்தி என்பார்கள்.

    ஆனால் அந்த சகாதேவன்தான் பாண்டவர் ஐவரும் பாரத யுத்தத்தில் உயிர் பிழைத்து வாழக் காரணமாகயிருந்தவன்.

    பூபாரம் தீர்க்க வந்த பரமாத்மாவிற்கு வேண்டியவர் வேண்டாதவர், உற்றவர், மற்றவர் என்ற பேதங்களில்லை.

    குருசேத்திரப் போரில் அவர் அனைவரையும் அழித்திருப்பார். அதில் பாண்டவரும் மாண்டிருப்பர். அந்த ரகசியத்தை அறிந்தவன் சகாதேவன்.

    பரமாத்மா தருமரின் வேண்டுகோளை ஏற்று தூது செல்லப் புறப்படுகிறார்.

    அப்போது பாண்டவர் ஐவரிடமும் சண்டையா, சமாதானமா என்று கேட்கிறார்.

    தருமர் மட்டுமே சமாதானம் என்கிறார். பீமன், அர்ஜுனன், நகுலன் மூவரும் சண்டைதான் வேண்டும் என்கின்றனர்.

    ஆனால் சகாதேவன் மட்டும் "எங்களை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதானே நடக்கப் போகிறது. அதைச் செய்யுங்கள்" என்கிறான்.

    சகாதேவன் ஜோதிடத்தில் சிறந்தவன் என்பதால் இவன் ஏதோ உள்ளர்த்தம் வைத்துப் பேசுகிறான் என்பதை உணர்கிறார் கிருஷ்ணர்.

    சகாதேவனைத் தனிமையில் சந்தித்த பரமாத்மா "பாரதப் போர் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று சொல்" என்று கேட்கிறார்.

    "உங்களைக் கட்டிப் போட்டால் பாரத யுத்தம் வராமல் தடுக்க முடியும்" என்கிறான் சகாதேவன்.

    "எங்கே என்னைக் கட்டு பார்க்கலாம்!" என்ற கண்ணன் மறுகணம் பதினாறாயிரம் வடிவம் கொண்டு நிற்கிறார்.

    ஆயினும் சகாதேவன் தயங்கவில்லை. தன் மனத்தால் உண்மை வடிவத்தைக் கட்டுகிறான்.

    அதற்கு மகிழ்ந்து கண்ணன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சகாதேவன் ஐவர் உயிரையும் காத்தருள வேண்டும் என்று கேட்க அவ்விதமே அருள்புரிகிறார் கண்ணன்.

    "பசையற்ற உடல்வற்ற" என்ற இந்தப் பாடலில் பாண்டவர் மீது குற்றமற்ற, முடிவில்லாமல் வளர்ந்த பற்று வைத்திருந்த கண்ணன், சகாதேவனுக்கு அளவற்ற தனது வடிவங்களைக் காட்டினார்.

    • ஆழ்வார்கள், பாகவதர்கள் கண்ணனின் லீலைகளில் மனம் ஈடுபட்டு அனுபவித்துப் பாடியுள்ளார்.
    • வேதமும் இறைவனை, ‘‘ரஹோவைசா’’ என்று வர்ணிக்கிறது. ‘பகவானை விட சிறந்த ரசனை உள்ளவன் வேறில்லை’ என்பது இதன் பொருள்.

    கண்ணன் செய்த லீலைகள் கணக்கில் அடங்காது.

    வெண்ணெய் உண்டது, தயிரைத் திருடியது, பூதனையைக் கொன்றது, கன்று மேய்த்தது, காளிங்க நர்த்தனம் செய்தது, உரலில் கட்டுண்டது, மரங்களை முறித்தது, பிருந்தாவனத்தில் கோபியரோடு ஆடியது, கம்சனை வதம் செய்தது என்று எத்தனையோ லீலைகளை விளையாட்டாகச் செய்து முடித்தார்.

    இதனை கண்ணன் பாட்டில், ''தீராத விளையாட்டுப் பிள்ளை! கண்ணன் தெருவில் இருப்போருக்கு ஓயாத தொல்லை!'' என்று பாரதியார் நகைச்சுவை உணர்வோடு பாடியிருக்கிறார்.

    ஆழ்வார்கள், பாகவதர்கள் கண்ணனின் லீலைகளில் மனம் ஈடுபட்டு அனுபவித்துப் பாடியுள்ளார்.

    வேதமும் இறைவனை, ''ரஹோவைசா'' என்று வர்ணிக்கிறது. 'பகவானை விட சிறந்த ரசனை உள்ளவன் வேறில்லை' என்பது இதன் பொருள்.

    பணமில்லாமல் பசுதானம்

    'கோவிந்தா' என்று சொன்னால் 'போனது வராது' என்று பொருள்படும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், 'பணம்' கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

    கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை 'கோ இந்தா' என்றும் பிரிக்கலாம்.

    அப்போது 'கோ' என்றால் 'பசு' 'இந்தா' என்றால் 'வாங்கிக்கொள்' என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்.

    எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

    • மகாவிஷ்ணு, குழந்தை கிருஷ்ணனாக ஆலிலையின் மீது சயனம் கொண்டிருக்கும் காட்சி பார்ப்பவரை ஈர்க்கக் கூடியதாகும்.
    • கிருஷ்ணன் கோகுலத்திலோ, மதுராவில் ஆட்சி செய்யும்போதோ ஆலிலையில் சயனம் கொள்ளவில்லை.

    மகாவிஷ்ணு, குழந்தை கிருஷ்ணனாக ஆலிலையின் மீது சயனம் கொண்டிருக்கும் காட்சி பார்ப்பவரை ஈர்க்கக் கூடியதாகும்.

    கிருஷ்ணன் கோகுலத்திலோ, மதுராவில் ஆட்சி செய்யும்போதோ ஆலிலையில் சயனம் கொள்ளவில்லை.

    மார்க்கண்டேய முனிவருக்கு, தன் மாயசக்தியைக் காட்டு வதற்காக பிரளயத்தை ஏற்படுத்தினார்.

    அந்த பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த ஆலிலையில் குழந்தையாக தன்னை மாற்றிக் கொண்டு படுத்துக் காட்சி தந்தார்.

    அப்போது உலக சிருஷ்டி அனைத்தும் குழந்தை பால கிருஷ்ணனுக்குள் ஒடுங்கிக் கிடந்தது.

    ஆலிலைக் கண்ணனை 'முக்தி தருகின்றவன்' என்னும் பொருளில் 'முகுந்தன்' என்பர்.

    தாமரைப் பூப் போன்ற தன் கால் கட்டை விரலை தாமரைப் பூப்போன்ற தன் கையினால் பிடித்து இழுத்து, வாயிதழால் சுவைத்தபடி சயனித்திருக்கும் இக்கோலத்தை வழிபட்டால் பிறவித் துன்பம் நீங்குவதோடு வைகுண்டத்திலும் வாழும் பாக்கியம் உண்டாகும்.

    • ஆனால் அவர் உண்மையிலேயே திருடியது தனது பக்தர்களின் மனங்களில் உள்ள கெட்ட குணங்களைத் தான்.
    • பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீக சக்தியால் நிரப்பி விடுவார்.

    ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர். முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர்.

    அங்கே அவர்கள் சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர்.

    கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான்.

    சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான். பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, ஆடைகளைத் திருப்பி கொடுத்தான்.

    ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளின் மேல் வைத்திருந்த தீராத அன்பின் காரணமாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வெண்ணையினைத் திருடி ஆசை தீர உண்பார்.

    ஆனால் அவர் உண்மையிலேயே திருடியது தனது பக்தர்களின் மனங்களில் உள்ள கெட்ட குணங்களைத் தான்.

    பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீக சக்தியால் நிரப்பி விடுவார்.

    அதன் பயனாக அவர்கள் உலகை மறந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே அதிதீவிர பக்தி பூண்டு, அவரது பாதாரவிந்தத்தையே நினைத்துக் கொண்டிருந்தனர்.

    அதனால் அவர்கள் எல்லையற்ற பேரானந்தத்தை அடைந்தனர்.

    ஸ்ரீகிருஷ்ணரின் தனிப்பட்ட ஆத்மா, உலக உயிர்களிலெல்லாம் வாசம் செய்கின்றது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.

    • அப்போது தான் கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பெயர் வைத்துக் கொண்டவன் நம்மிடம் வருவான்.
    • அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல; மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு

    'நவநீதம்' என்றால் புதிதாக எடுத்தது என்று அர்த்தம். 'நவ' - புதிதாக; 'நீதம்' - எடுக்கப்பட்டது.

    புத்தம் புதிதாகக் காலை வேளையில் பசும்பாலில் உறை குத்தி சாயங்காலமே அந்த தயிரை சிலுப்பி எடுக்கிற வெண்ணை தான் நவநீதம்.

    நாமெல்லாம் பசுக்கள். நம் மனசு வெள்ளை வெளேரென்று பாலாக இருக்கணும்.

    அப்போது தான் கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பெயர் வைத்துக் கொண்டவன் நம்மிடம் வருவான்.

    அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல; மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு, அவனைக் 'கார்வண்ணன்' என்று சொல்வார்கள்.

    மேகம் எத்தனைக்கு எத்தனை கருப்போ அத்தனைக்கு அத்தனை அதிகமாக தண்ணீரை கொட்டும்.

    அந்த தண்ணீர் கருப்பாகவா இருக்கிறது? இப்படி பரம பிரேம தாரையைப் பிரவாகமா கொட்டுகிறவனே கிருஷ்ணன்.

    • மாயக்கண்ணன் இளமையில் செய்த சேட்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும்.
    • அவற்றைப் போற்றும் வகையில், பல இடங்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று உறியடித் திருவிழா நடத்தப்படும்.

    பல ராமனுக்கும், கிருஷ்ணருக்கும் சாந்தி பீவி என்ற முனிவர் ஆயக்கலைகள் அறுபத்துநான்கையும் கற்றுக்கொடுத்தார்.

    அதற்கு குருதட்சணையாக, வெகுநாட்களுக்கு முன்பு கடலில் தவறி விழுந்த எனது மகனை உயிருடன் கொண்டு வந்து கொடுங்கள் என்றார்.

    நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் எமனிடம் இருந்து குருவினுடைய மகனை மீட்டுக்கொடுத்தனர்.

    துவாபரயுக முடிவில் கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்றது. இதையெல்லாம் பிரதிபலிக்கும் வகையில் தற்போது கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் குதூகலம் நிறைந்திருக்க வாசல் முழுவதும் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை செல்லும் பாதையில் சின்னச் சின்ன காலடிச் சுவடுகளை கோலமிட வேண்டும்.

    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணை, அவல் மற்றும் பழங்கள், கார வகைகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    மாயக்கண்ணன் இளமையில் செய்த சேட்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும்.

    அவற்றைப் போற்றும் வகையில், பல இடங்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று உறியடித் திருவிழா நடத்தப்படும்.

    கண்ணன், முகுந்தன், கோபால கிருஷ்ணன், நந்த கோபாலன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் குழந்தை கிருஷ்ணனை, கோகுலாஷ்டமி தினத்தன்று நாமும் நம் வீடுகளில் வரவேற்று பூஜை செய்து ஆனந்தம் அடைவோம்.

    • இதைக்கண்ட அனைவரும் கண்ணனைப் பாராட்டினர்.
    • ஆனால் கம்சனுக்கு மட்டும் கண்ணணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

    கம்சன், கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பினான்.

    ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் கண்ணன் கொன்று குவித்தார்.

    அதனால் கோபம் கொண்ட கம்சன், "நான் தனுர்யாகம் செய்யப்போகிறேன் அதற்கு வேண்டிய பொருட்களுடன் நந்தகோபரை குடும்பத்துடன் இங்கு வரச் சொல்லுங்கள்" என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறினான்.

    அமைச்சரும் அங்கு வந்தார். பலராமனும், கண்ணனும் கம்சனின் யாகசாலைக்குச் சென்றனர்.

    வழியில் குவலயபீடம் என்னும் யானைக்கு மதம் பிடித்தது.

    அது துதிக்கையால் இரும்பு உலக்கையை தூக்கி, கண்ணனனையும், பலராமனையும் தாக்க முயன்றது.

    அப்போது யானையின் தந்தத்தை ஒடித்து யானையையும், பாகனையும் கொன்றார் கண்ணன்.

    பின்னர் மல்யுத்த அரங்கிற்கு சென்றனர்.

    அங்கு கண்ணனை அழிக்க சானூரன், முஷ்டிகன், கூடன், சலன் போன்ற மல்யுத்த வீரர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் மல்யுத்தம் செய்து அவர்களை அழித்தார்.

    இதைக்கண்ட அனைவரும் கண்ணனைப் பாராட்டினர்.

    ஆனால் கம்சனுக்கு மட்டும் கண்ணணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

    ஊரில் உள்ள சிறுவர்களை எல்லாம் வெட்டி சாய்ந்து விட்டு, வசுதேவர், தேவகியைக் கொல்லுங்கள் என்று அவன் கூறினான்.

    உடனே கண்ணன் அவன் மீது ஏறிக் குதித்து, அவனது தலையை பிடித்து தரையில் வேகமாக அடித்துக்கொன்றார்.

    இத்துடன் கம்ச வதம் முடிந்தது.

    கம்சனின் சிறையில் இருந்த தாய், தந்தை, பாட்டனார், உக்கிர சேனர் என்று அனைவரையும் விடுவித்து, கோகுலத்திற்கு அழைத்துச் சென்றார் கண்ணன்.

    கம்ச வதத்திற்குப்பின்பு மக்கள் பயமின்றி வாழ்த்தனர்.

    • கண்ணன் பிறந்தது விரஜபூமி என்ற வட மதுரா. வளர்ந்தது கோகுலம். வடமதுரா முக்தியளிக்கும் 7 நகரங்களுள் ஒன்று.
    • கண்ணன் என்றால் ராதை, ருக்மணி, பாமா இவர்கள்தான் நினைவுக்கு வருவர். ஆனால் கண்ணனுக்கு 8 மனைவிகள் உண்டு.

    இதுபோன்று கண்ணனுக்கு தொடர்ந்து இடையூறுகள் வந்தாலும், அவரது வளர்ப்பு பெற்றோரான நந்தகோபனும், யசோதையும் மற்றும் கோகுலவாசிகளும் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர்.

    அங்கும் காளிங்கமடுவில் காளிங்கன் என்ற அசுரன் இருந்துகொண்டு அட்டகாசம் செய்து வந்தான்.

    கண்ணன் அவன் மீது ஏறி நின்று நர்த்தனம் ஆடி அவனை அடக்கினார்.

    இந்திரனது சூழ்ச்சியினால் பெய்த அடை மழையில் இருந்து கோவர்த்தன மலையைக் குடையாக பிடித்து பசுக்களையும், அங்கு இருந்த மக்களையும் காப்பாற்றினார்.

    கண்ணன் பிறந்தது விரஜபூமி என்ற வட மதுரா. வளர்ந்தது கோகுலம். வடமதுரா முக்தியளிக்கும் 7 நகரங்களுள் ஒன்று.

    கண்ணன் என்றால் ராதை, ருக்மணி, பாமா இவர்கள்தான் நினைவுக்கு வருவர். ஆனால் கண்ணனுக்கு 8 மனைவிகள் உண்டு.

    ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரவிந்தை, சத்யவதி, பத்திரை, லட்சுமணை இப்படி 8 பேர் பட்ட மகரிஷிகள். ஒவ்வொரு மனைவிக்கும் தலா 10 குழந்தைகள் பிறந்தன.

    கிருஷ்ணரின் பிள்ளைகளில் மிகவும் புகழ் பெற்றவர்கள் 18 பேர்.

    அவர்கள் பிரத்யும்னன், அனுருத்தன், தீப்திமான், பானு சாம்பன், மது, பருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாசு, ஸ்ருததேவன், சுருந்தனன், சித்திரபாகு, விருபன், கவிநியோக்தன்.

    ×