search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறிக்கோள்"

    • எங்களுக்கு சசிகலா, தினகரன் பெரிதல்ல, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே குறிக்கோள் என்று முன்னாள் அமைச்சர் பேசியுள்ளார்.
    • அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் தேசிய கொடியை பறக்க விடுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார் அவர் கூறியதாவது:-

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பி த்துள்ளார். அதன்படி வருகிற 13 முதல் 15-ந்தேதி வரை ஒவ்வொருவரும் தேசிய உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக மதுரை மாநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கொடிகளை கொடுத்து வருகிறோம்.

    கொரோனா காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடுகளில் விளக்கேற்றும் படி கூறினார். அதனை ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனும் செய்து காட்டினான். அதுபோல இப்பொழுது தேசிய கொடியை பறக்க விடும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    அ.தி.மு.க.வில் பிளவு இல்லை. சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் பெரிதாக கட்சியில் சேதம் இல்லை. தினகரன் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில கருத்துக்களை பேசி வருகிறார். அதனை பெரிதுபடுத்த தேவையில்லை. சசிகலா, தினகரன் போன்றவர்கள் கூறும் கருத்துகள் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை யில்லை. அது எங்களுக்கு பெரிதல்ல.எங்களது ஒரே நோக்கமே மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை கொண்டுவர வேண்டும் என்பதுதான்.

    தி.மு.க. ஆட்சி மீது பொதுமக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கி றார்கள். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களிடம் எப்படி ஓட்டு கேட்பார்? எனவே அ.தி.மு.க. வெற்றி உறுதியாகிவிட்டது.

    நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார்த்தை கூறினாலும் திருவாசகமாக சொல்லுவார். அதுபோல இனிமேல் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று அவர் ஏற்கனவே சொல்லி விட்டார். எனவே கவர்னரை ரஜினிகாந்த் சந்தித்தது பற்றி எதுவும் பேசத்தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×