search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்காச்சோள விதை"

    • அனைத்து விளைபொருட்களுக்கும் உரிய விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக மாறும் நிலை உருவாகும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் தலா ரூ. 2ஆயிரம் மதிப்பில் 25 விவசாயிகளுக்கு வீரிய ரக மக்காச்சோளம் விதை மற்றும் இடு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கோவை வேளாண்மை பல்கலைக்கழக சிறுதானிய துறை தலைவர் பேராசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். வேளாண்மை துறை (தினை பயிர்) உதவி பேராசிரியர் கதிர்வேலன் வரவேற்றார். இந்த விழாவில் விவசாயிகளுக்கு வீரிய ரக மக்காச்சோளம் மற்றும் இடுபொருட்களை வழங்கி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமத்தின் இயக்குநரும், பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில தலைவருமான ஜி.கே. நாகராஜ் பேசுகையில்,விவசாயத்தில் பயிர் அறுவடைக்கு முன்பு நல்ல விலையில் விற்கும் விளை பொருட்கள் அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது விலை சரிவை சந்திக்கின்றன. அதற்கு காரணம் எந்த விளை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதோ அதனையே அனைத்து விவசாயிகளும் பயிரிடுவதால் சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனை சீரமைத்து அனைத்து விளைபொருட்களுக்கும் உரிய விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இனி விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக மாறும் நிலை உருவாகும். வேளாண்மை துறை வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை சிறப்பு கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது. நாட்டின் அன்னிய செலவாணியை நாம் சமையல் எண்ணொய், பெட்ரோல், டீசல் போன்றவை இறக்குமதிக்கு தான் அதிக அளவில் செலவிடுகிறோம். அதனை தவிர்க்க உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில்வேல், மாநில விவசாய அணி செயலாளர் மவுனகுருசாமி, மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×