search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல்"

    • ஆலோசனை விதிகள் மற்றும் அட்டவணை வெளியிடவில்லை.
    • கால நீட்டிப்பு கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பல் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு வெளி வந்தும் இன்னும் நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வில்லை.

    நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் மீது சி.பி.ஐ. நடவடிக்கை, சுப்ரீம் கோர்ட்டு வழக்கு என பல்வேறு பிரச்சினைகள் உருவாகி உள்ளன.

    நீட் தேர்வு குறித்து டெல்லியில் உள்ள மத்திய சுகாதார சேவை இயக்குனரகம் இன்னும் ஆலோசனை விதிகள் மற்றும் அட்டவணை வெளியிடவில்லை.

    அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தால் தமிழகத்தில் மாணவர் சேர்க்கையை தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் எம்.பி.பி.எஸ். மட்டுமின்றி பல், இந்திய மருத்துவம், ஓமியோபதி, நர்சிங் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள், பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த படிப்புகளில் சேருவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில், ஏ.ஐ.சி.டி.இ. போன்ற மருத்துவ ஏஜென்சிகளிடம் இருந்து கால நீட்டிப்பு கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    அகில இந்திய மருத்துவ இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தும் மத்திய சுகாதார இயக்குனரகம் முதல் கட்ட கலந்தாய்வை முடித்ததும் தமிழகத்தில் முதல் சுற்று தொடங்கப்படும். அது 2-வது சுற்று தொடங்கும் போது நாங்கள் முதல் சுற்றை முடித்து விடுவோம். இதன் மூலம் மாணவர்கள் 2 சுற்றுகளிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவ கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீட் தேர்வு முடிவு வெளி வந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் கலந்தாய்வு நடைமுறையை பின்பற்ற முடியாமல் மாநில அரசு உள்ளது. இதனால் மருத்துவ படிப்பில் சேருவதற்கு தகுதியான மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றனர்.

    இதற்கிடையே பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறைகளை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தொடங்கியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் 13-ல் தொடங்கி 30 வரை நடந்தது. அதையடுத்து ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

    வருகிற 10-ந்தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் போது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கும், அதனை தொடர்ந்து விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
    • அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். திட்டமிட்டபடி பொறியியல் கலந்தாய்வு கடந்த 8-ந்தேதி தொடங்கி இருக்க வேண்டும்.

    ஆனால் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதமாக வந்ததால் ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி கலந்தாய்வு தொடங்கப்படவில்லை. சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் சேர்க்கை நடைமுறைகள் தள்ளிப்போகின்றன.

    2.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வருகிற 16-ந்தேதி வெளியிடப்படுகிறது.

    இதுகுறித்து மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறியதாவது:-

    1.49 லட்சம் மாணவிகள் கட்டணம் செலுத்தி அனைத்து நடைமுறைகளையும் முடிந்துள்ளனர். அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாராகிறது. தரவரிசை பட்டியல் 16-ந்தேதி வெளியான பின்னர் 4 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. 20-ந்தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

    முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கும், அதனை தொடர்ந்து விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதேபோல அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

    பொதுப்பிரிவு கலந்தாய்வு 23-ந்தேதி முதல் தொடங்குகிறது. பல்வேறு சுற்றுகளாக இக்கலந்தாய்வு அக்டோபர் 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்த பின்னர் 7 வேலை நாட்களுக்குள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும்.

    குறிப்பிட்ட அந்த நாட்களுக்குள் கட்டணம் செலுத்தவில்லை என்றால் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள அடுத்த மாணவருக்கு அந்த இடம் மாறிவிடும்.

    தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கலந்தாய்வை சீரிய முறையில் நடந்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. ஏற்கனவே உள்ள சாப்ட்வேர் மூலம் இடஒதுக்கீட்டை பின்பற்றி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×