search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரவு"

    • சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • அதிகாரிகள் வருவதை அறிந்த கும்பல் டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியவற்றை விட்டுவிட்டு தப்பியது.

    தாராபுரம் :

    தாராபுரம் பைபாஸ் ரோட்டில் வீரராகவபெருமாள் கோவில் அருகே அமராவதி ஆற்றையொட்டி உள்ள தனியார், அரசு புறம்போக்கு இடத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஆர்.டி.ஓ., குமரேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த, அவர்கள் மண்ணை கொட்டி விட்டு மண் எடுக்கப்பட்ட டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியவற்றை விட்டு விட்டு கும்பல் தப்பியது.சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 டிப்பர் லாரி, 2 பொக்லைனை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் இருந்து, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி வழியாக காவிரியில் தண்ணீர் கலந்து வருகிறது. இந்த ஆற்றில், காங்கயம், கம்புலியாம்பட்டி, கோவில்பாளையம், மயில்ரங்கம், மணலூர், சங்கரண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டு இல்லாமல் இருந்தது. கடந்த சில வாரங்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் சென்றது. இதனால் , ஆற்றில் மணல் குவியலாக ஆங்காங்கு பரவியிருந்தது.தற்போது, குறைந்த அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. இதை மணல் திருடர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு கைவரிசை காட்ட துவங்கியுள்ளனர். வேலப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, மயில்ரங்கத்தில், ஈஸ்வரன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் இரவு நேரத்தில் மர்ம நபர்களால் மணல் திருட்டு நடந்துள்ளது. எனவே உடனடியாக, மாவட்ட நிர்வாகம், போலீசார் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • பாறைகள் வெளியே தெரிந்தன
    • திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் நேற்றிரவு திடீர் என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது.

    இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள்கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.

    கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்வானதன் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படவில்லை.

    இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிடவந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். காலை 9மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 9 மணிக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்கு வரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். அதே சமயம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

    • ஆலாங்காடு மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருப்பூர் குமரன் சாலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஆலாங்காடு மின் பாதையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை வளர்மதி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, புதுமார்க்கெட் வீதி, காமராஜ் ரோடு, குள்ளிச்செட்டியார் வீதி, சிக்கன செட்டியார் வீதி, விட்டல்தாஸ் சேட்டு வீதி, துளசிராவ் வீதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×