search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1200 போலீசார்"

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையையும், போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை வருகின்றனர்.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள முக்கியமான சோதனை சாவடிகளான கருங்கல்பாளையம் சோதனை சாவடி, பவானி லட்சுமி நகர் சோதனை சாவடி, நொய்யல் ஆறு சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடி, காரப்பள்ளம் சோதனை சாவடி என மொத்தம் மாவட்டம் முழுவதும் 14 சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு 24 மணி நேரமும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    வாகனங்களை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்த பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.நெடுஞ்சாலைகளிலும் போலீசார் ரோந்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதேபோல் இன்று முதல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் வைத்து சோதனை செய்து வருகின்றனர்.

    ரெயில்வே நுழைவாயில் பகுதியில் ஈரோடு ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.

    மேலும் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையையும், போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை வருகின்றனர். மேலும் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில் பெட்டிகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

    ×