என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய பேருந்து இயக்கம்"
- செட்டியூர், கோடியூர், வழியாக அதியமான் கோட்டைக்கு பேருந்து இயக்கப்பட்டது.
- பொதுமக்கள் பட்டாசு வெடித்து கரகோசத்தோடு பேருந்தை வரவேற்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட அதியமான் கோட்டை, செட்டியூர், தேங்காய்மரத்து பட்டி, கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமத்து மக்கள் தங்களுடைய சிட்டா பட்டா ஜாதி சான்று, வருவாய் சான்று உள்ளிட்ட தேவைகளுக்காகவும், நிலம் சம்பந்தமான பிரச்சினை களுக்கும் நல்லம்பள்ளியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வருவதற்கு கலெக்டர் அலுவலகம் சென்று அங்கு இருந்து மாற்று பேருந்தில் நல்லம்பள்ளி வர வேண்டும்.
மேலும் 3 கிராமங்களில் உள்ள ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் அதியமான் கோட்டையில் உள்ள மேல்நிலை பள்ளிக்கு வரவேண்டும்.
மாணவர்கள் தினந்தோறும் இந்த பள்ளி களுக்கு மூன்று கிலோ மீட்டருக்கு மேல் நடந்தே வர வேண்டும். இதனால் பல ஆண்டுகளாக தருமபுரியில் இருந்து கோடியூர் வழியாக அதியமான் கோட்டைக்கு பேருந்து இயக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் நல்லம்பள்ளி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திடம் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று அமைச்சரின் முயற்சியால் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் 16 வழித்தடங்களில் பேருந்து களை இயக்க உத்தர விட்டதை அடுத்து நேற்று அமைச்சர்கள் சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் தருமபுரியில் 16 வழித்தடத்தில் புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தனர்.
இதில் தருமபுரியில் இருந்து கலெக்டர் அலுவலகம் தொழில் மையம் தேங்காய் மரத்துப்பட்டி, செட்டியூர், கோடியூர், வழியாக அதியமான் கோட்டைக்கு பேருந்து இயக்கப்பட்டது.
இந்த பேருந்து கோடியூர் வந்தடைந்த போது பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள், ஒன்று திரண்டு சந்தோஷத்தில் பேருந்தில் ஏறி உற்சாக நடமாடினர். பின்னர் பேருந்து அதியமான் கோட்டை வந்து அடைந்தபோது பொதுமக்கள் பட்டாசு வெடித்து கரகோசத்தோடு பேருந்தை வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம் தலைமையில் அதியமான் கோட்டை பொதுமக்கள் தேங்காயால் திருஷ்டி சுத்தி உடைத்தனர். பின்னர் பேருந்துக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அதியமான் கோட்டையில் இருந்து தருமபுரிக்கு மீண்டும் பேருந்தை ஏ.எஸ். சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் சுரேஷ்குமார், காளியப்பன், அன்பரசு, முனி, சரவணன், மாதையன், ஊர் கவுண்டர்கள், நாட்டு கவுண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்