என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தண்ணீரின் அளவு குறைப்பு"
- மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் நின்றுவிட்டது.
- இதனால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் நீர்மட்டம் கடந்த வாரம் முழுகொள்ளளவை எட்டியது. இதனைதொடர்ந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் நின்றுவிட்டது.
இதனால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காைல நிலவரப்படி 68.75 அடியாக உள்ளது. வரத்து 1956 கனஅடி, நேற்று வரை 2060 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று காைல முதல் 1166 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5509 மி.கனஅடியாக உள்ளது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.75 அடியாக உள்ளது. வரத்து 1271 கனஅடி, திறப்பு 2150 கனஅடி, இருப்பு 6483 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து மற்றும் திறப்பு இல்லை. இருப்பு 435.32 மி.கனஅடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி, வரத்து 3 கனஅடி, இருப்பு 100 மி.கனஅடி.