search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரரசு"

    • நித்யானந்தா பலருக்கு தர்ம ரட்சகர் விருது அறிவித்துள்ளார்.
    • தற்போது இவர் இயக்குனர் பேரரசுக்கு இந்த விருதை அறிவித்துள்ளார்.

    சாமியார் நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் விஜயதசமியையொட்டி கைலாசாவில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோருக்கு விருது அறிவித்திருந்தார்.


    பேரரசு

    இதில் பா.ஜனதாவின் ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்ம ரட்சகர் விருதை நித்தியானந்தா அறிவித்தார். இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அடுத்ததாக இந்த தர்ம ரட்சகர் விருது இயக்குனர் பேரரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நித்யானந்தா கூறுகையில், "உங்களுடைய இந்து மதப்பற்றும் இந்து மதத்திற்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதும் களம் காணுவதும் நீங்கள் செய்கின்ற மிகப்பெரும் பணிகளை நன்கு அறிவேன்.


    நித்யானந்தா

    உங்களுடைய எல்லா திரைப்படத்தின் தலைப்புகளுமே ஆன்மிக ஸ்தலங்களின் பெயர்களாக தான் இருக்கும். உங்களுடைய இந்து மதப்பணி மிகப்பெரிய பணி. அதற்காக தலைவணங்குகிறேன். உங்களோடு என்றும் தோல் கொடுத்து நிற்பேன். நானும் கைலாசமும் நீங்கள் செய்யும் இந்து மதப் பணிக்கு என்றும் உறுதுணையாக நிற்போம்." என்று கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    • சென்னையில் நடைபெற்ற குறும்பட விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார்.
    • இந்த விழாவில் வெற்றிமாறனின் பேசியதை இயக்குனர் பேரரசு விமர்சனம் செய்துள்ளார்.

    சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன், "சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள்.

    வெற்றிமாறன்

    அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது என்று விமர்சனம் செய்திருந்தார். அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது, எந்த மேடையை எடுத்தாலும் இந்து மக்களை இழிவுப்படுத்துவது சிலர் ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள். ஒருவர் இந்து மதத்தை இழிவுபடுத்தும் போது, அவருக்கு நாங்கள் பதில் சொன்னால், உடனே நாங்கள் மத வெறியர்கள் என்று சொல்கிறார்கள்.

    பேரரசு

    ராஜராஜ சோழனை இந்து என்று அடையாளம் கொடுக்கிறாங்கன்னு இயக்குனர் வெற்றிமாறன் சொல்றாரு. சரி ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு என்ன கிறிஸ்துவரா? இல்ல இஸ்லாமியரா? ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்தபோது இந்தியா மாகாணம், மாகாணங்களாக பிரிந்து இருந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றாக இணைத்து இன்று இந்தியா என்ற நாடாக்கியுள்ளனர்.

    உலகத்திலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல்தான் சைவம், வைணவம் ஆகிய அனைத்தும் இந்திய மதங்கள். அதை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து இந்தியர் என்றார்கள். இங்கு சாமி கும்பிடுபவர்கள் அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக நினைத்து வழிபடுகிறார்கள். சாமி கும்பிடாதவர்களுக்கு இங்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள்,நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பேரரசு.
    • சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பேரரசு காட்டமாக விமர்சித்துள்ளார்.

    "புளுசட்டை" என்ற பட விழா, சென்னையில் நடந்தது. இந்த படத்தில் கடுமையாக விமர்சனம் செய்பவரின் நாக்கை அறுப்பது போல் ஒரு காட்சி, அந்த குறும்படத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு நடிகர் பயில்வான் ரங்கநாதன் கண்டனம் தெரிவித்தார். "கடுமையாக எழுதுவது தவறுதான் என்றாலும், நாக்கை அறுத்து தண்டிப்பது போல் எப்படி காட்சி வைக்கலாம்?" என்று கேள்வி எழுப்பினார்.

     

    பேரரசு

    பேரரசு

     

    அதற்கு இயக்குனர் பேரரசு எதிர்ப்பு குரல் எழுப்பினார். "நான் உதவி இயக்குனராக 10 வருடங்கள் கஷ்டப்பட்டேன். இயக்குனர் ஆவதற்கு 5 வருடங்கள் ஆனது. அந்த 15 வருடங்களில் ஊருக்கு கூட போகமுடியவில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படம் இயக்கி அது வெளிவரும்போது கடுமையாக தாக்கி வா போ என தரக்குறைவாக எழுதி மனதை காயப்படுத்தினால் ஒரு புது இயக்குனரின் மனம் என்ன பாடுபடும்? கடுமையான சொற்களால் தாக்கி எழுதுபவர்கள் தங்கள் சொந்த காசில் படம் பார்த்து எழுத வேண்டும். ஓசியில் படம் பார்த்து எழுதக்கூடாது" என்றார்.

    விழாவின் நோக்கம் மறந்து வேறு பாதையில் விலகி, விவகாரமாகும் சூழ்நிலையை உணர்ந்த ஜாக்குவார் தங்கம் மேடையில் இருந்து இறங்கி வெளிநடப்பு செய்தார். காரசாரமாக நடந்த இந்த படவிழா இறுக்கமான சூழ்நிலையில் முடிவடைந்தது. இவரின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

    ×