search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டியிடம்"

    • கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.
    • புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையம் சென்று தனது தங்க சங்கிலி நகை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடு த்து மல்லியம்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 70). இவர் சம்பவத்தன்று தனது ஊரில் இருந்து புளியம்பட்டி வார சந்தைக்கு காய்கறி பொருட்களை வாங்க வந்துள்ளார்.

    பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு மல்லியம்பட்டி க்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் சிறிது நேரம் அமர்ந்துள்ளார். இதனையடுத்து பொன்னம்மாள் தனது ஊர் செல்வதற்கு அரசு பஸ் வந்தவுடன் அதில் ஏறி டிரைவரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவருக்கு தலை சுத்தி மயக்கம் வந்ததாக கூறுபடுகிறது.

    உடனே அருகில் இருந்தவர்கள் மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். பின்பு சிறு தூரம் சென்றதும் மூதாட்டி மயக்கம் தெளிந்து பார்த்த பொழுது பொன்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது அவருக்கு தெரிய வந்தது. பதட்டம் அடைந்த மூதாட்டி அலறினார்.

    அப்போது பஸ்சில் இருந்த பயணிகள், டிரைவர், கண்டெக்டர் உட்பட அனைவரும் தேடி பார்த்தபோது நகை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மூதாட்டி பொன்னம்மாள் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையம் சென்று தனது தங்க சங்கிலி நகை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் பஸ் நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இதையடுத்து குப்புலட்சுமி நகையை எடுத்து கொண்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார்.
    • இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    கோபி

    கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் குப்புலட்சுமி (70). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு நகைகள் விற்பனை செய்ய வந்தார். தொடர்ந்து அவர் 1¼ பவுன் நகைைய விற்பனை செய்ய கொடுத்தார்.

    அப்போது அந்த நகை தரம் குறைவாக இருப்பதாக கூறி கடைக்காரர் நகையை திருப்பி கொடுத்து விட்டார்.

    இதையடுத்து குப்புலட்சுமி நகையை எடுத்து கொண்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார்.

    அப்போது தான் கொண்டு வந்த பையை பார்த்த போது அதில் வைத்து இருந்த நகை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    நகை திருடப்பட்டது தெரிய வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் தேடி பார்த்தும், விசாரித்தும் நகை கிடைக்கவில்லை.

    இது குறித்து குப்புலட்சுமி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மூதாட்டி மரகதவல்லியிடம் மர்ம நபர் 1¼ பவுன் செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்டர் தப்பிவிட்டார்.
    • இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் அடுத்த வித்யா நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மரகதவல்லி (62). நேற்று காலை மரகதவல்லி அதே பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பொரு ட்கள் வாங்க சென்றார்.

    பின்னர் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென மரகதவல்லி கழுத்தில் அணிந்திருந்த 2¼ பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார்.

    சுதாரித்து கொண்ட மூதாட்டி மரகதவல்லி செயினை இறுக்கமாக பிடித்து கொண்டார். எனினும் மர்ம நபர் 1¼ பவுன் செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்டர் தப்பிவிட்டார்.

    இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்ப ட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிலில் பொங்கல் வைத்து அன்னதானம் செய்வ தற்காக வந்துள்ளதாகவும், அதற்காக வாழை இலை தேவைப்படுவதாகவும் கூறினார்.
    • இதையடுத்து மூதாட்டி பாப்பாயி, தண்ணீர் மற்றும் வாழை இலை எடுத்து வந்து கொடுத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட ராசாம்பாளையம் சுங்க சாவடி அருகில் உள்ள புலவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.இவரது மனைவி பாப்பாயி (வயது 65). ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டார்.இவரது மகன் ரவி நாமக்கல்லில் வசித்து வருவதால் பாப்பாயி மட்டும் புலவர்பாளையம் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பாப்பாயி வீட்டிற்கு காரில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், வீட்டின் அருகே காரை நிறுத்தி விட்டு அவரிடம் தண்ணீர் கொடுக்கும்படி கேட்டுள்ளார். மேலும் தான், அருகில் உள்ள கோவிலில் பொங்கல் வைத்து அன்னதானம் செய்வ தற்காக வந்துள்ளதாகவும், அதற்காக வாழை இலை தேவைப்படுவதாகவும் கூறினார்.

    இதையடுத்து மூதாட்டி பாப்பாயி, தண்ணீர் மற்றும் வாழை இலை எடுத்து வந்து கொடுத்தார். இதனை தொடர்ந்து மூதாட்டியின் வீட்டில் உள்ளவர்கள் நலமாக இருக்க வீட்டில் மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவிக்கவே கட்டாயப்படுத்தி அந்த பெண் பூஜை நடத்தினார்.

    அப்போது வீட்டில் உள்ள தங்க நகைகளை பூஜையில் வைக்கவேண்டும் என கூறியதை அடுத்து மூதாட்டி தனது 4 பவுன் தங்க சங்கிலியை பூஜையில் வைத்துள்ளார். பூஜை முடிந்ததும் பூஜையில் வைத்த எலுமிச்சம்பழங்களை வீட்டின் 4 மூலைகளிலும் போட்டுவிட்டு வருமாறு பாப்பாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து பாப்பாயி எலுமிச்சம் பழத்தை வீட்டின் 4 மூலைகளிலும் போடுவதற்காக வெளியே சென்றார். இதை பயன்படுத்தி பூைஜயில் வைத்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு அந்த பெண் காரில் ஏறி தப்பி சென்றார். இதனை பார்த்த பாப்பாயி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அதற்குள் அந்த மர்ம பெண் காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் பாப்பாயி புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் மூதாட்டியிடம் மாந்திரீக பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியிடம் இருந்து நூதன முறையில் தங்க நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு நடந்துள்ளது
    • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது நடந்த சம்பவம்

    கரூர்:

    வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நள்ளிரவில் 5 பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்மநபரை வாங்கல் போலீஸார் தேடி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் வாங்கல் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புரெத்தினம். இவர் மனைவி ஜெயம்மாள் (வயது 70). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர், ஜெயம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டான். இதுகுறித்து வாங்கல் போலீசில் ஜெயம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×