search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணக்கெடுப்பு"

    • இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணக்கான பறவைகள் வந்திருப்பது தெரியவந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கனக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. அந்த பறவைகளை கணக்கெடுக்கும பணிநடைபெற்று வருகிறது.

    திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, உதவி வன அலுவலர் கிருபாகரன், கோடிக்கரை வனச்சரகர்அயூப்கான் மற்றும் கல்லூரி மாண வர்கள், வனத்துறையினர் என12 குழுக்களாக பிரிந்து 47 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கோவை தீவு, இரட்டை தீவு பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பூநாரை,செங்கால் நாரை கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், வகைகள், கடல் கலா, கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணகான பறவைகள் வந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.

    கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பிறகு வந்துள்ள பறவைகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்று வனத்துறை அலுவலர் ஆயூப்கான் தெரிவித்தார்.

    • மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
    • மாணவரின் நிலை குறித்து மொபைல் ஆப்பில் பதிவு மேற்கொண்டு வருகின்ற னர்.

    சூளகிரி,

    சூளகிரி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வர் உத்தரவிற்கிணங்க பள்ளி செல்லா இடைநின்ற மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

    காளிங்காவரம் குடியிருப்பு பகுதியை சார்ந்த சிம்பல்திராடி, பஸ்தலப்பள்ளியில் பகுதியில் இப் பணியை தலைமையாசிரியர்கள் சண்முகம், ராஜேந்திரன், ஆசிரியர் பயிற்றுநர் வைத்தியநாதன், ஆசிரியர்கள் நிர்மலா, அனுராதா ஆகியோர் நேரடியாக களப்பயணம் மேற்கொண்டு பார்வையிட்டு மாணவரின் நிலை குறித்து மொபைல் ஆப்பில் பதிவு மேற்கொண்டு வருகின்ற னர்.

    தலைமையாசிரியர் சண்முகம் இப்பணி குறித்து கூறியபோது, கொரோனா காலத்தில் கல்வியை தொடர முடியாத மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறும், தங்கள் பகுதியில் பள்ளி செல்லா இடைநின்ற மாணவர்கள் எவரேனும் இருப்பின் பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அவர்களை பள்ளியில் சேர்க்க சம்மந்தப்பட்ட பள்ளிகளை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • படிப்பை இடை்நிறுத்தம் செய்த மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள வடமழைராஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

    பள்ளி தலைமையாசியர் ராஜேந்தின் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோகிலா, துணைத்தலைவர் சபினிஸ்வரி, ஆசிரியர் கருணாநிதி, இல்லம் தேடி கல்வி ஆசிரியர் கோகிலா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அப்பகுதியை சேர்ந்த பிரவீனா, பிரகதீஸ்வரன் ஆகிய மாணவர்கள் பள்ளியில் இருந்து இடையில் நின்றது தெரியவந்தது. உடனே, அவர்களின் பெற்றோரிடம் பேசி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
    • மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெற உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெற உள்ளது.

    இப்பணியை வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா, அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் அனிதா குமார், ராஜா, பார்வதி, செல்வராணி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்ட், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம்

    தேடி கல்வி தன்னார்வ லர்கள் மற்றும் மற்ற துறைகள் இணைந்து செய்து வருகின்றனர்.

    மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ரமேஷ், பரமத்தி வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த பணிகளை பார்வை யிட்டார். அப்போது தங்கள் பகுதிகளில் பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் கண்டறி யப்பட்டால், தங்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தா விட்டால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-

    மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் என்று தேர்தல் வாக்குறுதி தந்த தி.மு.க. அந்த வாக் குறுதியை இன்னமும் நிறைவேற் றவில்லை. இது ஒரு புறம் இருக்க 60 நாட் களுக்கு சரியாக ரீடிங் எடுப்பதிலும் குளறு படி நடக்கிறது. பல இடங்களில் காலம் தள்ளி வந்து கணக்கெ டுக்கிறார்கள். அதன் காரணமாக சாதாரண மக்கள் பயன்படுத்தும் யூனிட் கூடி விடுகிறது.

    இதன் காரணமாக கட்டண விகிதமும் தாறு மாறாக எகிறுகிறது. ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தா விட்டால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டுமென விதிகள் உள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதில் மக் கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

    அதே வேளை நுகர்வோருக்கு மின்வாரியத்தால் ஏற்படுகிற பாதிப்புகளுக்கு எந்தவித நிவாரணமும் இல்லை. மொத்தத்தில் இந்த ஆட்சியில் மக்கள் எல்லா வகை யிலும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வன்முறையாளர்களுக்கு கடும் தண்டனை விதக்க வேண்டும்.
    • மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தி ஏழை, எளிய மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    தேசிய தவ்ஹீத் கூட்ட மைப்பு சார்பில் ராமநாதபுரம் சந்தை திடலில் மாநிலச் செயலாளர் முஹம்மது பாரூஸ் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் வருகிற ஜனவரி 8-ந்தேதி திருச்சியில் நடைபெற உள்ள நபிகள் நாயகம் (ஸல்) சிறப்பு மாநாடு குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் மாநில பேச்சாளர் சபீர் ரஹ்மான், இம்ரான்கான் ஆகியோர் பேசினர். தேசிய தவ்ஹித் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் நபிகள் நாயகத்தின் சிறப்பு பண்புகளை விவரித்து பேசினார். மாவட்டப் பொருளாளர் முஹம்மது கான் தீர்மானம் வாசித்தார், மாவட்ட பேச்சாளர் அப்துல் சத்தார் நன்றி கூறினார்.

    முன்னதாக தேசிய தவ்ஹித்கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில அரசுகளின் உரிமையைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்து, மத்திய அரசின் அடக்குமுறைப் போக்கை நிலைநாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள என். ஐ. ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமையை உடனடியாக கலைத்து விட்டு, மாநில அரசுகளின் ஒப்புதலோடு சி.பி.ஐ. மட்டுமே புலனாய்வுக்கு பயன்படுத்த வேண்டும்.

    நீண்டகால சிறைவாசி களை நன்னடத்தையின் அடிப்படையிலும், அரசின் பரிந்துரையின் அடிப்படையிலும் விடுதலை செய்யும்போது, ஒவ்வொரு முறையும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. மத அடிப்ப டையிலான இந்த பாரபட்சம் ஜனநாயக விதிகளுக்கு முற்றிலும் மாறானது. இத்தகைய அநீதியைக் களையும் வகையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட நீண்டகால சிறைவாசிகளை விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

    கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பை டி.ஜி.பி. உத்தரவின் பேரில் கோவை காவல்துறையினர் விரைந்து எடுத்த நடவடிக்கையை பாராட்டுகிறோம். மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கும் வன்முறை, பயங்கரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உயர்ந்தபட்ச கடும் தண்டனைக்கு உட்படுத்தபட வேண்டும். அதே சமயம் இந்த வழக்கை புலன் விசாரணை செய்து வரும் என்.ஐ.ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள், இறந்துபோன ஜமேஷா முபினுக்கு பின்புலத்தில் இருந்த உண்மையான சூத்திரதாரியை நாட்டிற்கு அடையாளம் காட்டக் கூடியதாக இருக்க வேண்டும். சம்பந்தமில்லாத அப்பாவிகளை சோதனை என்ற பெயரில் வேட்டை யாடி அவர்களை குற்றவாளி களாக சித்தரிக்கும் போக்கு கூடாது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். குறிப்பாக மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தி ஏழை, எளிய மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுக்கப்பட்டது.
    • 2014-ம் ஆண்டில் கல்லூரியில் பட்டாம்பூச்சி பூங்கா நிறுவப்பட்டு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அமெரிக்கன் கல்லூரி நெரிசலான நகர்புறத்தில் காணப்பட்டாலும் பலவகை பட்டாம்பூச்சிகளுக்கு புகலிடமாக உள்ளது. இங்கு அரிய வகை செடி, கொடிகள் காணப்படுகின்றன. இங்கு வண்ணத்துபூச்சிகளுக்கு தேவையான தட்பவெப்ப சூழல் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விலங்கியல் இளங்கலைத்துறைத்தலைவர் ஜாய் ஷர்மிளா தலைமையில் கல்லூரி வளாகத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் கணக்கெடுப்பு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர் டேலியா ரூபா செய்திருந்தார். ஆராய்ச்சி மாணவி அர்ச்சனா சுற்றுசூழலில் வண்ணத்துப்பூச்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் செயல்பாடுகள் போன்றவற்றை விளக்கி பேசினார்.

    அமெரிக்கன் கல்லூரியின் வளாகத்தில் 26 வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு அழகிகள், வெள்ளையன்கள், வரியன்கள், நீலன்கள் போன்ற பல வகையான பட்டாம்பூச்சிகள் காணப்பட்டன. இதில் வரியன் வகை பட்டாம்பூச்சிகள் அதிக அளவில் காணப்பட்டன. கல்லூரியில் மஞ்சள் புலி, வரி புலி, நீலப்புலி, ராஜவண்ணத்தி, ரோஜா அழகி, கருவேப்பிலை அழகி, அரளி விரும்பி, எலுமிச்சை நீலன், கொள்ளை வெள்ளையன், சின்னபுல் நீலன், புங்க நீலன், எலுமிச்சை வசீகரன் போன்ற பட்டாம்பூச்சி வகைகள் பதிவு செய்ய பட்டன. இதில் மிகவும் மனதை கவரும் வண்ணத்துப்பூச்சி நீல சங்கழகன் ஆகும். இந்தியாவின் 2-ம் பெரிய வகை பட்டாம்பூச்சி கருநீலவண்ணன் ஆகும். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், அவர்களின் முயற்சியால் 2014-ம் ஆண்டில் கல்லூரியில் பட்டாம்பூச்சி பூங்கா நிறுவப்பட்டு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    • சாலையோர வியாபாரிகள் 5 பயனாளிகளுக்கு கடனுதவி பெறுவதற்கு அனுமதி வழங்கும் கடிதத்தினை வழங்கினார்.
    • இத்திட்டத்தின் மூலம் பெறும் கடன் தொ கையினை முறையாக தவணை தவறாமல் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    பட்டுக்கோட்டை நகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் புதிய சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி 2022-23 திட்டத்தின்கீழ் வங்கிகள் மூலம் பிரதி புதன்கிழமை தோறும் சாலையோர வியாபாரிகள் தினத்தில் கடனுதவி வழங்கும் முகாம் நாடிமுத்து நகர் ஆர்ச் சாலை பகுதியில் நடைபெற்றது.

    மேற்படி சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி துவக்க விழா மற்றும் கடனுதவி வழங்கும் முகாமிற்கு, நகராட்சி தலைவர். சண்முகப்பிரியா செந்தில்குமார் தலைமை ஏற்று இத்திட்டம் குறித்து விளக்கினார். சுரேஷ், நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் சாலையோர வியாபாரிகள் 5 பயனாளிகளுக்கு கடனுதவி பெறுவதற்கு அனுமதி வழங்கும் கடிதத்தினை வழங்கினார்.

    சாலையோர வியாபாரி களின் கணக்கெடுப்பு பணி துவக்க விழாவில் இத்திட்டத்தின் நன்மைகள் குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு எடுத்து கூறினர். மேலும் ஒவ்வொரு கடைக்கும் நேரில் சென்று புதிய கணக்கெடுப்பு பணியினை துவக்கி வைத்தனர். சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பின் போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களை வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மேலும் இத்திட்டத்தின் மூலம் பெறும் கடன் தொ கையினை முறையாக தவணை தவறாமல் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. விழாவில் சுகாதார அலுவலர் நெடுமாறன், நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன், வருவாய் ஆய்வாளர்கள் முருகேசன், குப்புசாமி, சண்முகம், நகர்மன்ற உறுப்பினர்கள் பொண்மணி ராஜேந்திரன் மகா லெட்சுமி உலகநாதன், சுரேஷ், கலையசி, சமுதாய அமைப்பாளர்கள் பிரவீனா, சரண்யா, ராஜப்பிரியா, சமூக ஆர்வலர் மணிமுத்து. சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

    முடிவில் நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன் நன்றி கூறினார்.

    • வேளாண்மை கணக்கெடுப்பு பணி 1970-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • நீர்ப்பாசன வசதிகள் மற்றும் இடு பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் விவரங்கள் சேரிக்கப்ப டவுள்ளது.

    கள்ளக்குறிச்சி, செப்.3-

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட புள்ளியியல் துறையின் சார்பில், 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவில் வேளாண்மை மற்றும் விவசா யிகள் நல அமை ச்சகத்தின் மூலம் வேளா ண்மை கணக்கெடுப்பு பணி 1970-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் கணக்கெடுப்புகள் இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெற்று வந்தது. தற்போது, 5 ஆண்டு களுக்கு ஒருமுறையாக 2021-2022-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு, 11-வது வேளாண் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளது. இந்த கணக்கெடுப்பின் நோக்கம் புள்ளி விவரங்களின் அடிப்படையில் புதிய வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் வகுப்பதற்கும் மதிப்பீடு செய்வதற் கும் பயன்படுகிறது. கணக்கெடுப்பின் மூலம் கைப்பற்றின் வகைகள், கைப்பற்றின் எண்ணிக்கைகள் நிலப் பயன்பாடு, பயிரிடும் வகைகள், நீர்ப்பாசன வசதிகள் மற்றும் இடு பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் விவரங்கள் சேரிக்கப்படவுள்ளது.

    அனைத்து வருவாய் கிராமங்களிலும், நில ஆவணப்பதிவேடுகளில் உள்ள விவரங்களின் அடிப்படையில், விவரங்களை மறு அட்டவணைப்படுத்திடும் பொருட்டு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து சர்வே, சப் டிவிஷன் எண்களையும் ஆராய்ந்து கைப்பற்றுகளின் எண்ணிக்கை மற்றும் பரப்பு விவரங்களை வகுப்பு வாரியாக சேகரிக்கப்படவுள்ளது. முதல்முறையாக கணினிமயமாக்கப்பட்ட நில ஆவண பதிவேடுகளை அடிப்படையாக கொண்டு, வேளாண் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்காக பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட மி ன்பொருள் செயலியை பயன்ப டுத்தி, கைப்பேசி மற்றும் கையடக்கக் கணினி, மடிக்கணினி வழியே கணக்கெடுப்புப்பணி நடை பெறவுள்ளது. மிக முக்கியமான பணிகளில் ஒன்றான வேளாண் கணக்கெடுப்புப் பணியினை தொடர்புடைய அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் லதா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகலட்சுமி, தாசில்தா ர்கள், வட்டார புள்ளியில் ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மத்திய, மாநில அரசுகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • தலைமை நிலைய பேச்சாளர் கனல் கண்ணன் சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மத்திய மாநில அரசுகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கா.அண்ணாதுரை வரவேற்றார்.

    கலைச்செல்வன், பாபு, தமிழரசன்,சுயம்பு கஜேந்திரன், அய்யா மணிக ண்டன், சத்திய மூர்த்தி, அன்பு ஆரோக்கியராஜ், ரமேஷ், மணிமாறன், மாதவன், சைவராஜ் கவிதாசன், ராஜா, சாம்யோஷ்வா, பழனிவேல், சிவக்குமார், முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை நிலைய பேச்சாளர் கனல் கண்ணன் சிறப்புரையாற்றினார். ஆலக்குடி பன்னீர் செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் பேசினர்.

    இதில்மத்திய மாவட்ட பொறு ப்பாளர்கள்அரவிந்த், சரவணன், நார்முகமது, நியான், உசேன்பாட்சா, நெல்சன், வெங்கடேஷ், கலியமூர்த்தி, குணசேகரன், கல்யானபுரம் கார்த்தி, பிரபு, வெற்றிச்செல்வன், கணேசன், புஷ்பநாத மணிகண்டன்,பாலா, மணிமாறன் புண்ணிய மூர்த்தி, மணி, ராஜா, அப்பு, முருகேசன், சுதாகர், பாக்கியராஜ், கலையரசன், சுந்தரமூர்த்தி, சந்திரசேகர், பாலமுருகன், ஆனந்த், மதியழகன், முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜெய் பிராகாஷ் நன்றி கூறினார்.

    ×