search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணினி"

    • ஆப்பிள் M3 சீரிஸ் சிப்செட் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • 24 இன்ச் ஐமேக் மாடலில் 4.5K ரெட்டினா டிஸ்ப்ளே உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் மேக்புக் ப்ரோ மாடல்களை M3 சிப்செட் மூலம் அப்டேட் செய்த கையோடு 24 இன்ச் ஐமேக் மாடலை முற்றிலும் புதிய M3 சிப் உடன் அறிமுகம் செய்து இருக்கிறது. 2021 மாடலில் M1 சிப் வழங்கப்பட்ட நிலையில், ஐமேக் மாடலுக்கு மிகப் பெரிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. M3 சிப்செட் கொண்ட புதிய ஐமேக் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட இருமடங்கு வேகமானது ஆகும்.

    புதிய மாடலிலும் 4.5K ரெட்டினா டிஸ்ப்ளே, அதிவேக வைபை 6E வயர்லெஸ் கனெக்டிவிட்டி, அதிகபட்சம் 24 ஜி.பி. யுனிஃபைடு மெமரி, அடுத்த தலைமுறை GPU வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஹார்டுவேர் அக்செல்லரேடெட் மெஷ் ஷேடிங் மற்றும் ரே டிரேசிங் போன்ற வசதிகளை வழங்குகிறது.

     

    ஆப்பிள் ஐமேக் 24 இன்ச் 2023 அம்சங்கள்:

    24 இன்ச் 4480x2520 பிக்சல் 4.5K ரெட்டினா XDR டிஸ்ப்ளே

    ஆப்பிள் M3 சிப்

    8 ஜி.பி. யுனிஃபைடு மெமரி

    256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி

    மேக் ஒ.எஸ். சொனோமா

    பேக்லிட் மேஜிக் கீபோர்டு

    மேஜிக் கீபோர்டு மற்றும் டச் ஐ.டி.

    வை-பை 6E

    ப்ளூடூத் 5.3

    1080 பிக்சல் ஃபேஸ் டைம் ஹெச்.டி. கேமரா

    ஸ்பேஷியல் ஆடியோ

    டிஸ்ப்ளே போர்ட், தண்டர்போல்ட் 3

    யு.எஸ்.பி. 4, யு.எஸ்.பி. 3.1 ஜென் 2

    இந்திய சந்தையில் 24 இன்ச் ஐமேக் M3 (8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. யுனிஃபைடு மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று துவங்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 74 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் பொதுப்பிரிவில் (முன்னுரிமையற்றவர்கள்) காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    இதற்கு மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விபரங்களை நாகப்பட்டினம் மாவட்ட இணையதளத்தில் www.nagapattinam.nic.in பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பதிவஞ்சலில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், திட்ட செயலாக்க அலுவலக வளாகம், தரைத்தளம், புதிய கடற்கரை சாலை செல்லும் வழி, நாகப்பட்டினம்-611 001 என்ற முகவரிக்கு வருகிற 31-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • குறைந்தபட்சம் 6 மாத கால கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இதற்கு கல்வி தகுதியாக ஏதாவது ஒரு பாடத்தில் பட்ட படிப்பு மற்றும் குறைந்தபட்சம் 6 மாத கால கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.

    28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.

    தொடர்புடைய வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டிருக்க வேண்டும்.

    பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    வருகிற 10-ம் தேதிக்குள் விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, இணை இயக்குனர் / திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்.223, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தஞ்சாவூர் -613010.மேற்குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்படையிலான காலி பணியிடங்களுக்கு மாவட்ட தேர்வு குழு வாயிலாக எழுத்துத் தேர்வு 75 மதிப்பெண்களுக்கும் மற்றும் நேர்முகத் தேர்வு 25 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும்.

    எழுத்து தேர்வில் 45 மதிப்பெண்கள் ( 75 மதிப்பெண்களுக்கு 60 விழுக்காடு ) பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலில் இடம் பெறுவார்கள். உரிய காலத்திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கமுதி அருகே கணினி திருத்த முகாம் நடந்தது.
    • இந்த முகாம் வருகிற 8-ம் தேதி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் சிறப்பு கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் விஷ்னு சந்திரன் உத்தரவின் பேரில், வட்டாட்சியர் சேதுராமன் அறிவுரையின் படி, கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில், கிழக்கு வருவாய் ஆய்வாளர் மணிவல்லபன் தலைமையில், கணினி திருத்த முகம் நடைபெற்றது.

    இந்த முகாமில் கணினி யில் விடுபட்ட புழை எண் கள், விஸ்தீரன பிழை உள் பட பல்வேறு திருத்தங்கள் செய்து கொடுக்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கமுதி, செங்கப்படை, தவசிகுறிச்சி சம்பகுளம், சடையனேந் தல்பாக்குவெட்டி, ஆனையூர், பேரையூர் போன்ற கிராமப் பகுதியில் உள்ள பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் நாகநாதன், அபிராமம் வருவாய் ஆய்வாளர் கலாராணி, கோவிலாங் குளம் வருவாய் ஆய்வாளர் வெண்ணிலா ஆகியோர் தலைமையில் அப்பகுதிகளில் சிறப்பு கணினி திருத்த முகாம் நடைபெற்றது.

    இந்த முகாம் வருகிற 8-ம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளுமாறு வருவாய் ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அரசு கணினி சான்றிதழ் தேர்வு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) நடத்தப்படுகிறது.
    • 2023-ம் ஆண்டின் ஆகஸ்டு பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

    சேலம்:

    அரசு கணினி சான்றிதழ் தேர்வு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டின் ஆகஸ்டு பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

    அதன்படி, அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தை பயன்படுத்தி வருகிற ஜூன் 14-ந்தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க லாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்து ெகாள்ளலாம்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா தேர்வுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் கணினி அறிவியல் பட்டதாரியாக இருந்தால் மட்டுமே கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

    • இ-சேவை மையத்துக்கான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்டத்தில் உள்ள 350 இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கான பயிற்சிக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 350 இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள். அரசு கேபிள் டி.வி.வாரியம், தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கம், கிராம தொழில் முனைவோர் சார்பில் நடக்கும் இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள்.

    மாவட்ட மின்னாளுமை முகமை மேலாளர் முத்துக்குமார் பயிற்சி அளித்தார். கூட்டத்தில் அவர் பேசும்போது, மாவட்டத்தில் இ-சேவை மையம் அதிகரித்து வருவதால் போட்டியும் அதிகரித்துள்ளது. இ-சேவை மையத்தினர் அதற்கு தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு சான்றிதழுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அனைத்து மையங்களிலும் இரண்டு திரைகளை கொண்ட கணினியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விண்ணப்பதாரர் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, இ-சேவை மையத்தினர் தட்டச்சு செய்யும்போது, அதை எதிர்புறம் உள்ள விண்ணப்பதாரர் பார்த்து தவறு இருந்தால் அதை கூறி திருத்த முடியும். சான்றிதழுக்கான கட்டண பட்டியலை இ-சேவை மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றார்.

    • ஜாதி சான்றிதழ், வருமானம் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெற்று தரப்படும்.
    • கணினி செயலில் உள்ளீடு செய்தால் மாநகராட்சியால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாநக ராட்சி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று இ -சேவை மையம் தொடங்கப்பட்டது.

    இதனை ஆணையர் சரவணக்குமார் முன்னிலையில் மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    இ சேவை மையத்தில் ஆதாரில் பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், குடும்ப தலைவர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, அட்டை நகல், சிறுபான்மையினருக்கான உதவித்தொகை, முன்னாள் ராணுவத்திற்கான உதவித்தொகை, தேசிய கல்வி உதவித்தொகை பெறுதல், வேலைவாய்ப்பு பதிவு மற்றும் வேலை வாய்ப்பு பதிவை புதுப்பித்தல், ஜாதி சான்றிதழ், வருமானம் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெற்று தரப்படும்.

    பொது மக்களுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

    தங்களது வார்டுகளில் ஏற்படும் அனைத்து விதமான கோரிக்கைகள் மீது தொடர்ந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திடவும் சரி செய்திடவும் ஸ்மார்ட் தஞ்சை என்ற கணினி செயலில் உள்ளீடு செய்தால் மாநகராட்சியால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, கண்காணிப்பாளர் ஜெயக் குமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.
    • கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வைத்து எனது தலைமையில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி கம் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறி யியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிய கழகம், கூட்டுறவு நிப்பாசனம், கால்நடை, மிஸ்சாரம் போன்ற விவ சாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவி க்குமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறார்கள்.

    விவசாயிகள் குறைதீ ர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து க்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்கும்படி கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

    எனவே, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெறலாம்.

    கொரோனாதொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக இடைவெ ளியுடன், முகக்கவசம் அணிந்து அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிராம வருவாய் கணக்குகள் மற்றும் கணினியில் பட்டா மாறுதல் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க நகர பொறுப்பாளர் சித்திரவேலு தலைமை வகித்தார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பட்டா மாறுதல் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பேராவூரணி அருகேயுள்ள நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் 3 தலைமுறைகளாக குடியிருந்து வரும் விவசாய தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் அவர்கள் பெயரிலேயே கிராம வருவாய் கணக்குகள் மற்றும் கணினியில் பட்டா மாறுதல் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க நகர பொறுப்பாளர் சித்திரவேலு தலைமை வகித்தார்.

    தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ராஜமாணிக்கம், த.மா. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கருப்பையா, மாவட்ட குழு ஜெயராஜ், சி.பி.ஐ நகரச் செயலாளர் மூர்த்தி, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சி.பி.ஐ பேராவூரணி ஒன்றிய செயலாளர் கருப்பையா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய, நகர தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் மற்றும் நாட்டாணிக்கோட்டை கிராமத்தார்கள் கலந்து கொண்டனர்.

    ×