search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரஸ்வதி"

    • மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர்.
    • வன்னி மரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவது வழக்கம்.

    மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமி தினத்தன்று வழிபடுவதோடு, அதன் இலைகளையும் பறிப்பர்.

    அங்கு வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர்.

    இளைஞர்கள் இந்நாளில் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து ஆசியைப் பெறுவார்கள்.

    பெரியவர்களும் ஆண்டு முழுவதும் செல்வ வளம் பெற வேண்டும் என்ற அடிப்படையில்

    அந்த இலைகளை கொடுத்து "இதை தங்கமாக நினைத்து பெற்றுக் கொள்ளுங்கள்" என சொல்லி ஆசீர்வதிப்பர்.

    மகாராஷ்டிரா மாநில கோவில்களில் வன்னி மரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவது வழக்கம்.

    • மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • “தஸ்ராத்” என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.

    மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அரசு சார்பில் இங்கு மிகப் பிரமாண்டமான ஊர்வலம் நடத்தப்படும்.

    ஒரு காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன் மைசூர் சாமுண்டீசுவரியை ஒன்பது நாட்கள் இரவு நேரத்தில் சென்று வணங்குவது வழக்கம்.

    10வது நாளான விஜயதசமி நாளில் போருக்கு புறப்பட்டு செல்வர்.

    இதன் மூலம் தேவி அருளால் வெற்றி வாகை சூடி மகிழ்வர்.

    இன்றும் மைசூரில் தசரா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    "தஸ்ராத்" என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.

    இச்சொல்லே திரிந்து "தசரா" என்று வழங்கப்படுகிறது.

     முதல் ஒன்பது நாளும் நவராத்திரியாகவும், பத்தாம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடுகிறார்கள்.

    நவராத்திரியின் போது புத்தாடை உடுத்தி மகிழ்கின்றனர்.

    • அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பார்கள்.
    • பெற்றோரே நேரடியாக மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர்.

    பார்வதிதேவி சிவலோகத்தில் இருந்து தன் பிறந்த வீட்டுக்கு செல்லும் நிகழ்ச்சியாக

    மேற்கு வங்கத்தில் காளிபூஜை கொண்டாடப்படுகிறது.

    இந்த சமயத்தில் மேற்கு வங்காள பெண்கள் எத்தனை வயது உடையவராக இருந்தாலும்,

    அவரவர் பிறந்த வீட்டுக்கு செல்வது வழக்கம்.

    அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பார்கள்.

    தன் வீட்டில் இருக்கும் ஆபரணங்களையும், இனிப்பு வகைகளையும் மகள் மீது அள்ளி எறிந்து மகிழ்கின்றனர்.

    தவிர்க்க முடியாத காரணத்தால் பிறந்த வீட்டிற்கு வர முடியாமல் போனால்,

    பெற்றோரே நேரடியாக மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர்.

    இதனால் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டிற்கும் நல்லுறவை உண்டாகும் பாலமாக இந்த விழா திகழ்கிறது.

    • இவள் மிகவும் கோபக்காரி. நீதியை காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
    • நவராத்திரி ஒன்பதாம் நாள் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.

    நவராத்திரி ஒன்பதாம் நாள் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.

    தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள்.

    முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள்.

    இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர்.

    இவள் மிகவும் கோபக்காரி.

    நீதியை காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.

    ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

    இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது.

    அசுரர்களை அழிக்க அம்பிகை அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர்.

    அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.

    • மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.
    • சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

    நவராத்திரி எட்டாம் நாள் அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும்.

    மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.

    கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள்.

    சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

    மூல மந்திரம்: ஓம் – ஸ்ரீம் – நரஸிம்யை – நம

    காயத்ரி: ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!

    எட்டாம் நாள் நைவேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.

    • ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள்.
    • தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளேயாகும்.

    நவராத்திரி ஆறாம் நாள் சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும்.

    இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர்.

    இவள் இந்திரனின் சக்தி ஆவாள்.

    கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள்.

    ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள்.

    விருத்திராசுரனை அழித்தவள்.

    தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளேயாகும்.

    பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

    ஆறாம் நாள் நைவேத்தியம்:- வெண்பொங்கல்.

    • சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.
    • இந்த நாளில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும்.

    ஐந்தாம் நாளில் சக்தித்தாயை வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும்.

    சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.

    தீயவற்றை சம்ஹரிப்பவள்.

    இவளின் வாகனம் கருடன்.

    மலர் வகைகளில் மனோரஞ்சிதம் அல்லது பாரிஜாதம் மலர்களையும்,

    இலைகளில் திருநீற்றுப் பச்சை இலையும் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்

    இந்த நாளில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும்.

    ஐந்தாம் நாள் நைவேத்தியம்:- எலுமிச்சை சாதம்.

    • பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.
    • தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தரும் அன்னையாவாள்.

    நவராத்திரி நான்காம் நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும்.

    கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள்.

    விஷ்ணு பத்தினியாவாள்.

    பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.

    தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தரும் அன்னையாவாள்.

    நான்காம் நாள் நைவேத்தியம்:- கற்கண்டு சாதம்.

    • இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.
    • சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.

    நவராத்திரி மூன்றாம் நாள் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும்.

    வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள்.

    சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.

    பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.

    தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள்.

    இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.

    இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

    மூன்றாம் நாள் நைவேத்தியம் :- தயிர்சாதம்.

    • தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
    • சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.

    நவராத்திரி இரண்டாம் நாள் அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும்.

    மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள்.

    தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.

    ஓங்கார சொரூபமானவள்.

    சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.

    வீரத்தை தருபவள்.

    இரண்டாம் நாள் நைவேத்தியம்:- தேங்காய் சாதம்.

    • திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.
    • கடின உழைப்பாளிகள் உழைப்பின் பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

    நவராத்திரி முதலாம் நாள் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும்.

    அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள்.

    திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.

    அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள்.

    சர்வ மங்களம் தருபவள்.

    தர்மத்தின் திருவுருவம்.

    கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

    முதல் நாள் நைவேத்தியம்:- புளியோதரை.

    • வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
    • பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

    புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூஜை செய்தல் வேண்டும்.

    வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.

    விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும்

    பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

    ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று

    காலை ஒன்பது மணிக்கு முன் பாறணை செய்தல் வேண்டும்.

    இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

    விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவு பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து

    நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்த,

    குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.

    தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.

    இவ்விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.

    நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள்

    சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள்

    என்று காரணாகமம் கூறுவதாக சொல்லப்படுகின்றது.

    ×