என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இணை இயக்குனர்"
- திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனரான கனகராணி பொறுப்பேற்றுக்கொண்டார்.
- திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனராக இருந்த பிரேமலதா தென்காசிக்கு மாற்றப்பட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனராக இருந்த பிரேமலதா தென்காசிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை மாவட்டம் பூலுவப்பட்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் முதன்மை மருத்துவ அதிகாரியாக இருந்த கனகராணி, திருப்பூர் மாவட்ட இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டார்.திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனரான கனகராணி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அரசு மருத்துவ அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
- 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அரசு மருத்துவமனை கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்குபல்லடம், பொங்கலூர்,சுல்தான்பேட்டை,செஞ்சேரிமலை,ஜல்லிபட்டி,செஞ்சேரிப்புத்தூர்,வேலம்பாளையம்,காமநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும் இந்த மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.அப்போது அவரிடம் நோயாளிகள் குளியலறை மற்றும் சுகாதார வளாகத்தில் கடந்த பல நாட்களாக தண்ணீர் வருவது இல்லை. துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனையில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. குடிப்பதற்கு குடிநீரும் இல்லை என சரமாரியாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் பிரேமலதா தெரிவித்தார்.