search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோள பயிர்"

    • பருவ மழை சரியான நேரத்தில் பெய்ததால் அணைகள், குளங்கள், , ஆறுகள் என எல்லா இடங்களிலும் தண்ணீர் செழித்து காணப்பட்டது.
    • சோள மூடைகள் தரம்வாரியாக பிரித்து தற்போது ரூ. 1,000 முதல் 2,000 வரை மட்டுமே விற்க வேண்டி உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்துள்ள சுப்பிரமணியபுரம், கணக்கபிள்ளைவலசை, இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கொடிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயி கள் சுமார் 1000 ஏக்கருக்கும் மேலான மாணாவாரி பயிரான மருத்துவ குணம் வாய்ந்த நாட்டு சோளம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானம் கிடைக்காததால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் பூ மகசூல் என சொல்லப்படும் கேப்பை சோளம், மொச்சை, தக்காளி, வெண்டை, கத்தரிக்காய் உள்ளிட்ட பயிர்களை பயிரிடாமல் தரிசாகவே போட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை சரியான நேரத்தில் தொடங்கி பெய்ததால் நிலத்தடி நீர் பெறுகி அணைகள், குளங்கள், கால்வாய்கள், ஓடைகள், ஆறுகள் என எல்லா இடங்களிலும் தண்ணீர் செழித்து காணப்பட்டது.

    இதனால் செங்கோட்டை தாலுகா இலத்தூர் பகுதி விவசாயிகள் தக்காளி, வெங்காயம், வாழை, நெல், மற்றும் சோளம் போன்ற வற்றை சாகுபடி செய்தனர்.

    ஆனால் தென்மேற்கு பருவ மழை உரிய நேரத்தில் பெய்தும் உழவு நடவு, ஆள்பற்றாக்குறை, விதை விலை உயர்வு போன்ற பணிகளுக்கு தொடர் நஷ்டம் போன்ற பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நாட்டு சோளம் விவசாயிகள் பயிரிட்டு சாகுபடி செய்து அறுவடைநேரத்தில் போதிய விலை இல்லாததால் தாங்கள் கடந்தாண்டை போல் இந்தாண்டும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர்.

    இதுபற்றி விவசாயி சோழராஜன் கூறியதாவது:-

    சோளம் விதைத்து சுமார் 80- 90 நாட்கள் வரை ஏக்கருக்கு சுமார் 18 முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்து விதை, உழவு, களையெடுத்து பாதுகாத்து விதைத்து தற்போது அறுவடைக்கு தயாரான நேரத்தில் ஆள் பற்றாக்குறையால் அதிக சம்பளம் கொடுத்து அறுவடை செய்த மூடைகள் தரம்வாரியாக பிரித்து தற்போது ரூ. 1,000 முதல் 2,000 வரை மட்டுமே விற்க வேண்டி உள்ளது.

    மேலும் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாமலும் அதற்கேற்ப விலையும் இல்லாததால் சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஓவ்வொரு ஆண்டும் நஷ்டம் அடைந்துள்ளனர். செலவு செய்த பணம் கிடைக்காமல் கடனாளியாகதான் இருந்து வருகிறோம் என வேத னையுடன் தெரிவித்தார்.

    ×