search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பல் சிக்கியது"

    • ஒரு பெண் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை அறிய ஸ்கேன் செய்து கூறுமாறு சாக்கமாளிடம் கேட்டுள்ளார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா வழக்குப்பதிவு செய்து கவியரசன், அய்யனார் மற்றும் சாக்கம்மாள் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள வகுத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவருடைய மனைவி சாக்கம்மாள் என்கிற புனிதவதி (வயது56).

    இவர் தருமபுரி அருகே உள்ள பாளையம்புதூர் அரசு மருத்துவமனையில் ஆயாவாக வேலை பார்த்து வந்தார். இவர் கொரோனா காலத்தில் பணியில் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஆயாவாக வேலை பார்த்தபோது அந்த பகுதியில் உள்ள ஒரு சிலரை கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவரிடம் அழைத்து சென்று கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்ன கண்டறிந்து கூறியுள்ளார்.

    இதையடுத்து முருகேசன் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி சேசசமுத்திரம் பகுதியில் மெடிக்கல்ஸ் வைத்து நடத்தி வந்த செல்வமணி மகன் கவியரசன் (28) என்பவர் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கவியரசனுக்கும் சாக்காம்மாளின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஒரு பெண் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை அறிய ஸ்கேன் செய்து கூறுமாறு சாக்கமாளிடம் கேட்டுள்ளார்.

    இதையடுத்து கவியரசன், அவருக்கு உதவியாக வந்த கள்ளக்குறிச்சி சங்கராபுரம் பகுதியை சேர்ந்த அய்யனார் (34) ஆகியோர் வகுத்தானூரில் உள்ள சாக்கம்மாள் வீட்டிற்கு வந்தனர்.

    பின்னர் தாங்கள் கொண்டு வந்த கருவி மூலம் பாலினத்தை அறியும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மருத்துவ துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அரூர் வட்டார அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா தலைமையில் மருத்துவ குழுவினர் வகுத்தானூரில் சாக்கம்மாள் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்கு குழந்தையின் பாலினத்தை கண்டறியும் மொபைல் ஸ்கேனர் வைத்து பரிசோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து ராஜேஷ் கண்ணா மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா வழக்குப்பதிவு செய்து கவியரசன், அய்யனார் மற்றும் சாக்கம்மாள் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

    கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக வகுத்தானூர் கிராமத்தில் உள்ள சாக்கமாள் (எ) புஷ்பாவதி வீட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று மொபைல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வோம். அப்போது அதற்கான கட்டணம் ரூ.30 ஆயிரம் வரை வசூல் செய்வோம்.

    கருவில் இருப்பது பெண் குழந்தை என்றால் கருவை கலைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அவர்களிடம் அதற்கான வழிமுறைகளை கூறிவிடுவோம். இதுவரை நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று பரிசோதனை செய்துள்ளோம் என்று கூறினர்.

    கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சாக்கமாளை சேலம் பெண்கள் சிறையிலும், மற்ற இருவரை யும் தருமபுரி கிளைசிறையிலும் அடைக்கப்பட்டது.

    • கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளன.
    • கொள்ளை கும்பலை போலீசார் பிடித்தது பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளன. இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

    குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில், போலீசார் கண்காணிப்பு பணியிலும், தேடுதல் பணியிலும் தீவிரம் காட்டினர்.

    கடந்த 25 -ம் தேதி பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சிப்பட்டி மின்வாரிய அலுவலகம் எதிரில் குடியிருக்கும் பூவிழி என்பவர் தனது தாயார் உடல்நிலை சரியில்லாததால் அவசரமாக சேலம் சென்று விட்டார். இவர் வீட்டில் ஜன்னல் அருகில் வைத்திருந்த செல்போன் திருடு போயிருந்தது.

    அதேபோல 25-ம் தேதி பொம்மிடி அருகே உள்ள வேப்பாடி ஆறு மாரியம்மன் கோவில் பூசாரி உதயகுமார் வீட்டிலிருந்து பூட்டை உடைத்து 1300 ரூபாய் திருடு போயிருந்தது.

    26 -ம் தேதி இளங்கோவன் என்ற கோட்டைமேடு ராஜகணபதி நகர் பகுதி சார்ந்த அரசு போக்குவரத்துக் கழகம் நடத்துனர் வீட்டிலிருந்த காமாட்சி விளக்கு, பித்தளை தட்டு, சொம்பு, பணம் ரூ.3200 போன்றவற்றை இவர் வெளியூர் சென்றிருந்தபோது திருடியுள்ளனர்.

    மேலும் பில் பருத்தி கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் திருடவும் முயற்சி நடைபெற்றது. இந்த 5 திருட்டு சம்பவ வழக்குகளையும் பதிவு செய்த போலீசார் திருட்டு கும்பலை பிடிக்க அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் தலைமையில், பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பொம்மிடி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் சென்று வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் மேற்கண்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர் என தெரிய வந்தது.

    அதன் பேரில் அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்ததில் ஏற்காடு பகுதியை சார்ந்த கும்பலுக்கும் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடையது தெரிய வந்தது. இவர்களில் பெரியான் (வயது37), கார்த்திக் (21), கோவிந்தராஜ் (35), மணி (20), சக்திவேல் (26) உள்ளிட்ட 5 பேரை போலீசார் ஏற்காடு சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து 7 பவுன் நகை, குத்து விளக்கு, செல்போன், பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய கத்தி, ராடு, ஸ்குரு, முகமூடி மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் கடந்த இரண்டு மாத காலமாக இரு சக்கர வாகனத்தில் ஏற்காட்டில் இருந்து வந்து பொம்மிடி பகுதியில் தனியாக இருக்கும் வீடுகள், தனியாக வசிக்கும் வயதானவர்கள் போன்றவர்களை பகல் நேரத்தில் கண்காணித்து அப்பகுதியில் உள்ள மதுபான கடைகளில் குடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து ஏற்காடு தப்பி சென்றுள்ளனர்.

    இரண்டு மாத காலத்திற்குள் இந்த கொள்ளை கும்பலை போலீசார் பிடித்தது பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதியமான் கோட்டை ஏரியில் தண்ணீரில் வீசி சென்ற உண்டியலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • 18 வயது நிறைவடையாத ஒரு சிறுவன் என மூன்று பேரும் சேர்ந்து கொண்டு பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் ஊராட்சி மன்றம் செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் பஞ்சாயத்து அலுவலகத்தை நேற்று முன்தினம் மாலை ஊராட்சி செயலர் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

    மீண்டும் மறுநாள் காலை வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது அலுவல கத்தில் இருந்த பைல்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தது. மேலும் 30 ஆயிரம் மதிப்புள்ள டிவி திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் அதியமான் கோட்டை போலீசில் புகார் அளித்தார். இதேபோன்று வாரச்சந்தை வளாகப் பகுதியில் உள்ள சரவணன்(48) என்பவர் நடத்தி வந்த டீ கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 2500 ரொக்க பணத்தை திருடி சென்றனர். அதனை அடுத்து அதியமான் கோட்டை கீழ் காளியம்மன் கோவில் வளாகத்தில் இருந்த 5 அடி உண்டியலை தூக்கி வந்து அதியமான் கோட்டை ஏரியில் வைத்து உடைத்து உண்டியலில் இருந்த சுமார் 2000 மேல் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டி யலை ஏரியிலேயே வீசி சென்றுள்ளனர்.

    இந்த திருட்டு சம்ப வங்கள் குறித்து அதியமான் கோட்டை போலீசார் தகவல் அறிந்து வந்து அப்பகு திகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்தனர்.

    மேலும் காளியம்மன் கோவில் உண்டியலை திருடர்கள் அலேக்காக தூக்கிச் செல்லும் காட்சி களும் பதிவாகியிருந்தது. அதியமான் கோட்டை ஏரியில் தண்ணீரில் வீசி சென்ற உண்டியலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் நல்லம்பள்ளி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த செரபாண்டராஜ் (வயது35), கார்த்திக் (34) மற்றும் 18 வயது நிறைவடையாத ஒரு சிறுவன் என மூன்று பேரும் சேர்ந்து கொண்டு பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இந்த விசாரணையில் மூன்று பேரும் திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து அதியமான் கோட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். இதேபோன்று நல்லம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இந்த நபர்கள் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    • மாடு திருடும் கும்பல் முதியவரின் கைகளை கட்டி போட்டுவிட்டு மாடுகளை பிடித்து சென்று வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
    • இது குறித்து அந்தியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபர்களை விரட்டி பிடித்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் சாலையில் தண்டபாணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 4 மாடுகள் வளர்த்து வருகின்றார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பிக்அப் வாகனத்தின் மூலம் மாடுகளை திருடி விற்பனை செய்வதற்காக அங்கு சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு சிலர் மாடுகளை பிடித்து கொண்டிருந்தனர்.

    மாடு சத்தமிடுவதைபார்த்த தோட்டத்தில் இருந்த முதியவர் சத்தம் போட்டார். மாடு திருடும் கும்பல் முதியவரின் கைகளை கட்டி போட்டுவிட்டு மாடுகளை பிடித்து சென்று வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

    மீண்டும் முதியவர் சத்தமிடுவதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த மாடு திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் வாகனத்தையும் மாடுகளையும் விட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபர்களை விரட்டி பிடித்தனர். இதில் அந்த நபர்கள் அந்தியூர் பர்கூர் சாலையில் புரோட்டா கடை நடத்தி வருவது தெரிய வந்தது.

    மேலும் இவர்கள் இதேபோல் எந்தெந்த இடத்தில் மாடுகளை திருடியுள்ளார்கள், வேறு ஏதேனும் திருட்டில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் அவர்களிடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×