search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்-பல்லடம் சாலை"

    • கடையின் உரிமையாளர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலையில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. எனவே அதனை அகற்ற வேண்டுமென மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடையின் உரிமையாளர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் பலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.

    இதையடுத்து இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன்,தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், பலகைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்ற ப்பட்டன. இதனால் திருப்பூர் பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×