என் மலர்
நீங்கள் தேடியது "வாக்குமூலம்"
- அருண் ஜெனிசுக்கும் சுரேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண் ஜெனிஸ் சித்தப்பா சுரேஷை சரமாரியாக குத்தினார்.
- கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை தாயாரை அரிவாளால் வெட்டி சித்தப்பா சுரேஷ் கொலை செய்ய முயன்றார்
நாகர்கோவில் :
சுசீந்திரம் அருகே குலசேகரன் புதூர் கொத்தன் குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா தாஸ். இவரது மூத்த மகன் காஸ்டின் இளைய மகன் சுரேஷ் (வயது 45). அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று சுரேஷ் கூத்தன் குளம் பகுதியில் உள்ள நூலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது சகோதரரின் மகன் அருண் ஜெனிசுக்கும் சுரேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண் ஜெனிஸ் சித்தப்பா சுரேஷை சரமாரியாக குத்தினார்.
மேலும் அந்த பகுதியில் கிடந்த கல்லால் தலையில் அடித்தார். இதில் ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.இது பற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அருண் ஜெனிஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அருண் ஜெனிஸ் போலீசாரிடம் கூறியதாவது:-
சுரேஷ் எனது சித்தப்பா ஆவார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர். அந்த திருமணத்தை எனது தந்தை காஸ்டின் மற்றும் தாயார் சரஸ்வதி ஆகியோர் தடுத்ததாக கூறி அவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை தாயாரை அரிவாளால் வெட்டி சித்தப்பா சுரேஷ் கொலை செய்ய முயன்றார்.இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறி தகராறு செய்து வந்தார். இது தொடர்பாக என்னிடமும் கூறினார். இதனால் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை சரமாரியாக குத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அருண் ஜெனிசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமாரி:
இரணியல் அருகே மணக்கரை அவரி விளக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை (வயது 78). இவரது மகன் அய்யப் பன் ேகாபு (43) இவரது மனைவி துர்கா (38).
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராணுவ வீரரான அய்யப்பன்கோபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து துர்கா கணவரின் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மாமனார்ஆறுமுகம் பிள்ளைக்கும், மருமகள் துர்காவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் பிள்ளை அவரது மகன் மது (43) இருவரும் சேர்ந்து துர்காவை சரமா ரியாக தாக்கினார்கள். கல்லாலும், கம்பாலும் தாக்கியதில் துர்கா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந் தார்.
இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துர்காவின் சகோதரர் பகவத்சிங் இரணியல் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீ சார் ஆறுமுகம் பிள்ளை, அவரது மகன் மது ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ஆறுமுகம் பிள்ளை கூறியதாவது:-
எனது மகன் அய்யப்பன் கோபு கடந்த சில மாதங் களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு அவருக்கு எல்லை பாதுகாப்பு படையிலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டது. அந்த பணம் எனது மருமகள் துர்காவிடம் வந்து சேர்ந்தது. இந்த பணம் பிரச்சினை தொடர்பாக எனக்கும் எனது மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்றும் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற் பட்டது. அப்போது எனது இன்னொரு மகன் மது அங்கு வந்தார். ஆத்திர மடைந்த நாங்கள் துர்காவை சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.
போலீசார் கைது செய் யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருமகளை மாம னார் மைத்துனர் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காதலனை கொலை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன
- விசாரணை அதிகாரி உறுதி
கன்னியாகுமரி:
கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மூறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஷரோன்ராஜ் (வயது 23).
கடந்த அக்டோபர் மாதம் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக திருவனந்த புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷரோன்ராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 25-ந் தேதி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் தனது மகன் மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக ஷரோன்ராஜின் தந்தை ஜெயராமன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். மகனின் காதலியான குமரி மாவட்ட இளம்பெண் வீட்டுக்குச் சென்று வந்தபிறகு தான் மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாற சாலை போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடு பட்டனர்.
அப்போது குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஷரோன்ராஜ் படித்த போது, களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளதும், அவரது வீட்டுக்கு சென்று வந்தபிறகு தான் ஷரோன்ராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இது பற்றி விசாரித்தபோது, ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால், அக்டோபர் 14-ந் தேதி ஷரோன்ராஜை தனது வீட்டிற்கு வரவழைத்து கசாயத்தில் பூச்சிமருந்து கலந்து கிரீஷ்மா கொடுத்த தும் இதனால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஷரோன்ராஜ் இறந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் கிரீஷ்மாவிடம் விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்த ப்பட்ட அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது, ஷரோன்ராஜூடன் அவர் சென்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற விசார ணையில், கிரீஷ்மா, குளிர்பானத்தில் விஷம் கலந்து அடிக்கடி ஷரோன் ராஜிக்கு கொடுத்திருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையில் கொலைக்கான தடயங்களை மறைத்ததாக, கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் போலீசார் சீல் வைத்திருந்த கிரீஷ்மாவின் வீட்டு கதவு பூட்டை யாரோ உடைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் வழக்கில் திடீர் திருப்பமாக, தான் ஷரோன்ராஜை கொலை செய்யவில்லை என்றும், போலீசாரின் துன்புறுத்தல் காரணமாக கசாயத்தில் விஷம் கலந்ததாக ஒப்புக் கொண்டேன் என மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிரீஷ்மா வாக்குமூலம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அவரது வாக்குமூலத்தால் வழக்கு விசாரணை பாதிக்க கூடும் என கூறப்படுகிறது. ஆனால் இதனை வழக்கின் விசாரணை அதிகாரி மறுத்துள்ளார். ஷரோன்ராஜை, கிரீஷ்மா ெகாலை செய்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானப் பூர்வமாக சேகரித்துள்ளோம். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே தற்போதைய வாக்குமூலம், வழக்கின் விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்த வழக்கில் 70 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம். கிரீஷ்மாவை காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்ய உள்ளோம். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அனுமதி வழங்கவில்லை என்றால், உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அவர் கூறினார்.
- மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்காததால் கொலை செய்தேன் என மாமனாரை கொன்ற வாலிபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
- தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
மதுரை
மதுரை தெற்குவாசல் எப்.எப்.ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது52). இவரது மகள் நாகரத்தினம். இவருக்கும் காஜா தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஆத்விக் என்ற மகன் உள்ளான்.
கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக நாகரத்தினம் கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து விட்டார். பிரபாகரன் பலமுறை சமரசம் பேசியும் நாகரத்தினம் வர முடியாது என கூறிவிட்டார். மேலும் விவாகரத்து வழக்கும் நாகரத்தினம் சார்பில் தொடரப்பட்டது.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் தனது மகளுக்கு 2-வது திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இதையறிந்த பிரபாகரன் மாமனார் பாலசுப்பிரமணியனிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. நேற்று மாலை பாலசுப்பிரமணியன் வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது பிரபாகரன் உள்பட 4 பேர் அரிவாளால் பாலசுப்பிரமணியனை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும், நாகரத்தினமும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை என்னுடன் சேர்த்து வைக்காமல் மாமனார் பாலசுப்பிரமணியன் மறுமணம் வைத்து வைக்க முயற்சி செய்தார்.
பலமுறை சமரசம் பேசியும் எங்களை பிரித்து வைப்பதிலேயே ஆர்வம் காட்டினார். இதனால் மாமனாரை கொலை செய்தேன் என பிரபாகரன் போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
- 2 பேரை மதிகோன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் நேற்று கைது செய்து தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- செந்தில்குமாரின் உடலை நேற்று முன்தினம் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). போலீஸ் ஏட்டாக பணியாற்றிய இவர், பணி காலத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி மாயமானார். இது தொடர்பாக செந்தில்குமாரின் தாயார் பாக்கியம் கல்லாவி போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே மாயமான செந்தில்குமாரின் செல்போனும், அவரது மகனின் செல்போனும், இவர்களது கார் டிரைவர் கமல்ராஜ் (37) செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை கடந்த 13-ந் தேதி விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் போலீசில் ஆஜராகாமல் கடந்த 14-ந் தேதி கிருஷ்ண கிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
அப்போது அவர்கள் செந்தில்குமாரை கொலை செய்து தென்பெண்ணை ஆற்றில் உடலை வீசி விட்டதாக போலீசாரிடம் கூறினர்.
இதையடுத்து இந்த கொலை தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி சித்ராவிடம் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தினார்.
அப்போது செந்தில்குமாரை கொலை செய்து உடலை கல்லை கட்டி ஊத்தங்கரை பாரதிபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து செந்தில்குமாரின் உடலை நேற்று முன்தினம் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, பாவக்கல்லைச் சேர்ந்த பெண் சாமியார் சரோஜா என்கிற சரோஜா தேவி (37), கூலிப்படையை சேர்ந்த ஊத்தங்கரை பாரதிபுரம் விஜயகுமார் (21), தூத்துக்குடி மாவட்டம் மாங்குட்டைபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜ பாண்டியன் (32) ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும் போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் தலைமறைவான கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கைதான சித்ரா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது கணவர் செந்தில்குமார் கடந்த 2008-ல் ஒரு காரை வாங்கி அதை வாடகைக்கு ஓட்டி வந்தார். எனது கணவரிடம் கார் டிரைவராக கமல்ராஜ் என்பவர் வேலை பார்த்தார். முதலில் அவருடன் நான் சாதாரணமாக பழகினேன். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
எனது கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் கமல்ராஜ் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் உல்லாசமாக இருந்து வந்தோம். ஒரு நாள் எனது கணவர் செந்தில்குமார் வீட்டுக்கு வந்தபோது நான் கமல்ராஜூடன் தனிமையில் இருந்தேன்.
இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த பொருட்களை உடைத்தார். அதன் பிறகு அவருக்கும், கமல்ராஜூக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக கமல்ராஜ் கொடுத்த புகாரில் எனது கணவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வந்தார்.
எனக்கு தொடர்ந்து பிரச்சினைகள் வந்ததால் பாவக்கல்லை சேர்ந்த பெண் சாமியார் சரோஜாவை சந்தித்தேன். எனது பிரச்சினைகளை கேட்ட அவர், என்னிடம் கூலிப்படை உள்ளது. ரூ.10 லட்சம் கொடுத்தால் உனக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்து கட்டி விடலாம். யாருக்கும் தெரியாமல் கதையை முடித்து விடுவோம் என்று திட்டம் போட்டு கொடுத்தார்.
இதையடுத்து நான் ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் தயார் செய்து பெண் சாமியார் சரோஜாவிடம் கொடுத்தேன். அந்த பணத்தை கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமியிடம் சாமியார் கொடுத்தார்.
அப்போது நான், எனது கணவரின் கதையை முடித்து விடுங்கள். இதில் நான் சம்பந்தப்பட்டது யாருக்கும் தெரிய கூடாது என்று கூறினேன்.
அதன்படி சம்பவத்தன்று செந்தில்குமாரை எனது மகன் ஜெகதீஷ்குமார் மூலம் வீட்டிற்கு வரவழைத்தோம். அங்கு தயாராக இருந்த கூலிப்படையினர், அவரை அடித்துக்கொலை செய்தனர்.பின்னர் உடலில் கல்லை கட்டி பாரதிபுரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் போட்டு விட்டோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் அளித்துள்ளார்.
பின்னர் கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
- அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துவிட்டு தப்பிவிட்டார்.
- வங்கி ஏடிஎம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் (கரூர் வைஸ்யா) வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு கடந்த 25-ந் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர், வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி அதிலிருந்து பணத்தை திருட முயற்சித்தார். இயந்திரத்தை முழுமையாக உடைத்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர், அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துவிட்டு தப்பிவிட்டார். இது தொடர்பாக வங்கி மேலாளர் ஸ்ரீதர் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஏடிஎம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஏ.டி.எம். இயந்திரம் அருகே, மது போதையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த ஒருவரை, இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பதும், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததையும் ஒப்புக்கொண்டார். மேலும் தான் வேலையில்லாமல் சுற்றி வருவதாகவும், சகோதரி திருமணத்திற்கு பணம் இல்லாமல், மது அருந்திவிட்டு யோசித்த பொழுது, போதையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். அதன் பெயரில் போலீசார் விக்னேஷை கைது செய்து சிறையில அடைத்தனர்.
- தம்பியை கொலை செய்த மகாலிங்கத்தை கைது செய்தனர்.
- வெல்டிங் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தோம்.
கிணத்துக்கடவு
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 42). வெல்டிங் ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரை அவரது அண்ணன் மகாலிங்கம் (47) என்பவர் குத்தி கொலை செய்தார்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தம்பியை கொலை செய்த மகாலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மகாலிங்கம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நாங்கள் 2 பேரும் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்தோம். எங்களுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். எங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவி மற்றும் எனது தம்பியின் மனைவி ஆகியோர் பிரிந்து சென்றனர்.
இதனால் கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் தனியாக வசித்து வந்தோம். அப்போது நானும் எனது தம்பி ஆறுச்சாமியும் தேங்காய் வியாபாரம் செய்ய திட்டமிட்டோம். அதன் படி என்னிடம் இருந்த 6 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து தேங்காய் வியாபாரத்தை தொடங்கினோம். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் நாங்கள் தற்போது எங்கள் பகுதியில் உள்ள வெல்டிங் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தோம்.
வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நாங்கள் தினசரி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அப்போது எங்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்படுவது வழக்கம்.
சம்வத்தன்று நாங்கள் வழக்கம் போல ஒன்றாக சேர்ந்து மது குடித்தோம். அப்போது நான் எனது தம்பியிடம் தேங்காய் வியாபாரம் செய்ய அடகு வைத்து நகைகளை மீட்க வேண்டும் என்பதற்காக பணம் கேட்டேன். அப்போது எனது தம்பி லாபத்தில் மட்டும் தான் பங்கு கேட்பேன். நஷ்டம் வந்தால் அவருக்கு தெரியாது என கூறினார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. எனது தம்பி அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையால் என்னை தாக்கினான்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து எனது தம்பியை குத்த முயன்றேன்.பயந்த அவன் என்னை தள்ளி விட்டு ஓடினான்.
நான் அவரை விரட்டி சென்றேன். வடபுதூர் பஸ் நிலையம் அருகே சென்ற போது எனது தம்பி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது நான் கத்தியால் ஆறுச்சாமியின் மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் குத்தினேன். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றேன்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே எனது தம்பி ஆறுச்சாமி இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.
பின்னர் தம்பியை குத்தி கொலை செய்த தொழிலாளியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.
- வீட்டில் இருந்த 3 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
- சிறுமுகை அருகே வீடு புகுந்து கைவரிசை காட்டினர்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை தாளத்துறை பகுதியை சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 55). விவசாயி. தனியாக வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது சித்தப்பாவின் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து மணியம்மாள் சிறுமுகை போலீசில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த கைரேகைகளை சேகரித்தனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், சிறுமுகை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலையை சேர்ந்த வீரமணி (35) மற்றும் அவரது தம்பி ஆகாஷ் (19) ஆகியோர் என்பதும், மூதாட்டி மணியம்மாளின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
ேமலும் விசாரணையில் அவர்கள் தற்போது காரமடை அருகே உள்ள தொட்டிபாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வருவதாகவும், ஊரில் உள்ள கடன் பிரச்சினையால் கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பண்ருட்டி அருகேஓட்டல் தொழிலாளியைகொலை செய்தது ஏன்? நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்.
- அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை தீவிர விசாரனை நடத்தியது
கடலூர்:
பண்ருட்டி அடுத்த மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து (24). இவர் காடாம்புலியூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவரை கடந்த 29-ந் தேதி இரவு அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வீட்டில் விட்டனர். சிவக்கொழுந்து விபத்தில் அடிபட்டு சாலையில் கிடந்ததாகவும், அவ்வழியே வந்த நாங்கள் ஏற்றி வந்ததாகவும் கூறிச் சென்றனர் இதையடுத்து சிவக்கொழுந்து பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்துபோனார். ஓட்டல் தொழிலாளியான சிவக்கொழுந்து சாலை விபத்தில் இறக்கவில்லை.
அதுபோல சாலை விபத்து நடந்ததாக எங்கள் கிராம மக்கள் யாரும் கூறவில்லை. வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச் சென்ற காட்டாண்டிக்குப்பம் 2 வாலிபர்கள்தான் கொலை செய்து இருக்கவேண்டும். அவர்களை கைது செய்த பின்னரே உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் பண்ருட்டி போலீஸ் துணைசூப்பிர ண்டுசபியுல்லா உத்திரவின் பேரில், காட்டாண்டிக்குப்பம் கிராமத்திற்கு காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைப்பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர் இது தெரிந்த அந்த 2 வாலிபர்களும் தப்பியோட காடாம்புலியூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் அபினேஷ், கார்மேகம் என்பது தெரிய வந்தது.
மேலும், இந்த 2 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
நாங்கள் இருவரும் காட்டான்டிக்குப்பத்தை சேர்ந்தவர்கள். ஹோட்டலுக்கு சாப்பிட செல்லும்போது சிவக்கொழுந்து எங்களுக்கு அறிமுகமானார். நாங்கள் 3 பேரும் இரவு நேரங்களில் சந்தித்து மது குடிப்போம்.
பரபரப்பு வாக்குமூலம்
கடந்த 29-ந் தேதி இரவு சிவக்கொழுந்துவுடன் அமர்ந்து நாங்கள் 2 பேரும் மது அருந்தினோம். அப்போது நாங்கள் கொண்டு வந்த ஆட்டுக் கறியை சாப்பிடுவதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சிவக்கொழுந்து எங்கள் 2 பேரையும் அசிங்கமாக திட்டினான்.
இதனால் ஆத்திரமடைந்த நாங்கள், அருகில் கிடந்த உருட்டு கட்டையால் சிவக்கொழுந்தை தாக்கினோம்.இதில் சிவக்கொழுந்து தப்பியோட முயற்சித்தான். துரத்தி சென்று அடித்து கொலை செய்தோம். இந்த ெகாலையை மறைக்க விபத்தில் அடிபட்டு சிவக்கொழுந்து சாலையில் கிடந்ததாக கூறி அவரது வீட்டில் இறக்கிவிட்டு நாடகம் ஆடினோம்.
ஆனால் நாங்கள் கொலை செய்ததை கண்டுபிடித்து விட்டனர். போலீசார் எங்களை தேடுவது தெரிந்து தப்பி ஓட முயன்றோம். ஆனாலும் போலீசார் எங்களை மடக்கி பிடித்துவிட்டனர். மேலும், நாங்கள் சிவக்கொழுந்துவை தாக்கப் பயன்படுத்திய தடியினையும் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டாம் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இதையடுத்து இந்த 2 பேரையும்
- சுப்பிரமணி கோவை ஆவாரம்பாளையம் சபா நகரில் தங்கி சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.
- ஒரு பேக்கரி முன்பு ஸ்டாண்டில் எங்களது வாகனத்தை நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தோம்.
கோவை,
நெல்லை கரையிருப்பை சேர்ந்தவர் தாடி வீரன். இவரது மகன் சுப்பிரமணி (வயது 28).
இவர் கோவை ஆவாரம்பாளையம் சபா நகரில் தங்கி இருந்து சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரை அவரது நண்பரான லோடு வேன் டிரைவர் சாரங்க பாணி (31) என்பவர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். பின்னர் அவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இது குறித்து காட்டூர் போலீசார் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சரவணம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நண்பரை கொலை செய்து விட்டு சரண் அடைந்த சாரங்கபாணியை காட்டூர் போலீசார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நண்பரை கொலை செய்ததற்கான காரணம் குறித்து சாரங்கபாணியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நாங்கள் 2 பேரும் கணபதி எப்.சி.ஐ. ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி முன்பு ஸ்டாண்டில் எங்களது வாகனத்தை நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தோம்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணி ஆட்டோ வாங்குவதற்காக என்னிடம் ரூ.20 ஆயிரம் கடன் கேட்டார். மேலும் சில வாரங்களில் பணத்தை திருப்பி தருவதாக என்னிடம் கூறினார். இதனையடுத்து நான் ரூ.20 ஆயிரம் பணத்தை தயார் செய்து அவரிடம் கொடுத்தேன்.
ஆனால் சுப்பிரமணி பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இது குறித்து நான் பலமுறை அவரிடம் கேட்டும் அவர் பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் சுப்பிரமணி மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
நேற்று மாலை 5 மணியளவில் அவர் மது குடித்து விட்டு வாகனம் நிறுத்தும் ஸ்டாண்டில் அமர்ந்து இருந்தார். அப்போது நான் அங்கு சென்றேன். பின்னர் அவரிடம் ரூ.20 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டேன். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நான் எனது வாகனத்தில் இருந்த இரும்பு கம்பியைஎடுத்து சுப்பிரமணியின் தலையில் தாக்கினேன். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் சம்பவஇடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் காட்டூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.
போலீசார் நண்பரை கொலை செய்த வழக்கில் சரண் அடைந்த சாரங்கபாணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
- திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஜெயபால் (46) என்பவரை மேனகா 2-வது திருமணம் செய்து கொண்டார்
- ஜெயபாலை இரணியல் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு ஆர்சி தெருவை சேர்ந்தவர் மேனகா (வயது 38). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ்லின் பாபு என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஜெயபால் (46) என்பவரை மேனகா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மேனகா குருந்தன்கோடு வந்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி ஜெயபால் குருந்தன்கோடு வந்துள்ளார். அப்போது ஆலயத்திற்கு சென்று வந்த மேனகாவை வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் மேனகாவுக்கு கழுத்து, நாடி, முதுகு, விரல் ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அருகில் நின்ற மகளை வெட்டியதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே ஜெயபால் தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மேனகா சிகிச்சை பல னின்றி கடந்த 24-ந் தேதி உயிரிழந்தார். சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த இரணியல் போலீசார் தலை மறைவான ஜெயபாலை தேடி வந்தனர். இதனிடையே திக்கனங்கோடு பகுதியில் பதுங்கி இருந்த ஜெயபாலை இரணியல் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது வாக்குமூலத்தில் ஜெயபால் கூறியிருப்பதாவது:- கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மேனகாவை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேனகா பிரிந்து குருந்தன்கோடு வந்துவிட்டார். நானும் குருந்தன்கோட்டில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து ஓட்டல் தொழில் செய்து வந்தேன். வாரத்திற்கு ஒரு முறை எனது மகனை பார்க்க மேனகா வீட்டிற்கு செல்வேன். கடந்த ஒரு சில வாரமாக எனது மகனை பார்க்க மேனகா அனுமதிக்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்தேன்.
இந்த நிலையில் தான் கடந்த 19-ந் தேதி ஆலன்விளை ஆலயத்திற்கு சென்று வந்த மேனகாவை தடுத்து நிறுத்தி மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினேன். ஆத்திரம் அடங்காமல் அருகில் நின்ற மகளையும் தலை யில் வெட்டினேன். இருவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதனால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். ஆனால் எனது மனைவி சிகிச்சை பலனின்றி இறந்ததை அறிந்ததும் மிகவும் வேதனை அடைந்தேன். போலீசுக்கு பயந்து திக்கனங்கோடு சென்று விட்டேன். அங்கு நான் ஒளிந்து இருந்த போது போலீசில் சிக்கிக் கொண்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.