search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகளை"

    • இளையராஜா (வயது 45) குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது
    • குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த இளையராஜாவை கைது செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் காத்திருப்பு வளாகம் உள்ளது. இங்கு மணலூர்பேட்டை போலீஸ் சரகம் செம்படை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (வயது 45) குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து நீதிமன்ற எழுத்தர் சேவியர் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த இளையராஜாவை கைது செய்தார். 

    ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில் மது போைதயில் வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகானந்தம் (வயது38). இவர் ஜெயங்கொண்டம் தனியார் டீக்கடை ஒன்றில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் மது போதையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் கடும் ரகளையில் ஈடுபட்டதுடன் பஸ் வரும் நேரத்தில் சாலை நடுவே படுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கூடுதலாக ரூ.5 மற்றும் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதாக போதையில் கத்தி கூச்சலிட்டார். இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீண்ட நேரம் போராடி அந்த போதை ஆசாமியை சமாதானப்படுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
    • மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு அருகில் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை மது அருந்திய 2 வாலிபர்களிடையே தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியே வந்த அவர்களிடையே கை கலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஒரு வாலிபரின் சட்டை கிழிந்தது. இதனால் அவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.

    அவருக்கு பின்னால் கை கலப்பு செய்த வாலிபரும் சென்றார். இருவரும் அதிக போதையில் இருந்ததால்மறுநாள் காலை வருமாறு போலீசார் கூறினார். சட்டை கிழிந்த வாலிபர் போலீசார் சொல்லுக்கு கட்டுப்பட்டு திரும்பி சென்று விட்டார். உடன் வந்த வாலிபர் காவல் நிலையத்தில் அமர்ந்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஓரிடத்தில் நிற்காமல் போலீஸ் நிலையத்திற்குள்ளேயே ரகளையில் ஈடுப்பட்டார்.

    அவரை கட்டுப்படுத்திய போலீசாரையும் வாலிபர் தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசாரின் பிடியில் கட்டுப்படாத அந்த வாலிபர் தொடர்ந்து அங்குமிங்கும் திமிறி கொண்டிருந்தார். விசாரணையில் அந்த வாலிபர் கருங்கல் அருகே மிடாலம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதற்கிடையே தகவலறிந்த வாலிபரின் பெற்றோர் குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.ஆனால் அந்த வாலிபர் அவரது தந்தையையும் அவதூறாக பேசினார்.

    இதனால் செய்வதறியாத தந்தை வாலிபரை கட்டுப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றார். இதனால் தந்தை - மகனிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக வாலிபரின் நண்பர்களின் உதவியால் பெற்றோர் வாலிபரை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தினால் நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×