search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரடிகள் நடமாட்டம்"

    • கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அருவங்காடு:

    குன்னூர் பகுதியில் கிராமப்புறம் மட்டுமின்றி நகர பகுதிகளிலும் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஊருக்குள் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முயற்சி மேற்கொண்டாலும், அவை எளிதில் தப்பித்து மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுகின்றன.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றைக்கரடி குன்னூர் ஆர்செடின் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள சின்னப்பன் என்பவரது வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றது.

    தொடர்ந்து சமையலறையில் இருந்த உணவுகளை தின்று ருசிபார்த்தது. பின்னர் அங்கிருந்த சமையல் பொருட்களை சூறையாடியது.

    இதற்கிடையே வீட்டில் பொருட்கள் உருளும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த சின்னப்பன் உடனடியாக சமையலறைக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு கரடி நின்றுகொண்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னப்பன் குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து அண்டை வீட்டாரிடம் நடந்த விஷயங்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று வீட்டுக்குள் நின்ற கரடியை தீப்பந்தங்கள் காட்டி அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்கு விரட்டியடித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த குன்னூர் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் கரடியின் நடமாட்டம் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மேல்வாலிப்பாறை கிராமத்தில் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் தொடர் பீதியில் உள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள மேல்வாலிப்பாறை வருசநாடு வனச்சரகத்தை ஒட்டிய பகுதியாகும். இங்கு குறைந்த அளவு குடியிருப்புகள் உள்ளபோதும் மலைப்பகுதியிலேயே தங்கி அவர்கள் விவசாய பணிகள் செய்து வருகின்றனர். தற்போது கடும் கோடைகாலம் நிலவி வருவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் இடம் பெயர்ந்து குடியிருப்புக்குள் வரத்தொடங்கி உள்ளன.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக கரடிகள் நடமாட்டம் உள்ளதால் மேல்வாலிப்பாறை கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உணவுக்காக வரும் கரடிகள் வீட்டு சுவற்றை சுரண்டி ஓட்டைப்போட்டு உள்ளே வர முயற்சி செய்கின்றன. அதனை கற்களை கொண்டு பொதுமக்கள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்தபோதும் இரவு முழுவதும் தூக்கமின்றி அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். எனவே கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, மேல்வாலிப்பாறை வனப்பகுதியில் அமைந்துள்ள பகுதியாகும். இங்கு கரடிகள் வசிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வனப்பகுதியில் முந்திரி உள்ளிட்ட பயிர்களை சாப்பிடும் கரடிகள் தண்ணீருக்காக குடியிருப்பை நோக்கி வருகின்றன.

    மேலும் இவர்கள் வசிக்கும் வீடு மண் சுவர் என்பதால் கரையானை தேடி சுவற்றை சுரண்டி வருகின்றன. இவைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கடந்த மாதம் ஆண்டிபட்டி அருகே ஒரு வீட்டிற்குள் கரடி புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. வனத்துறை அதனை போராடி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

    தற்போது மேல்வாலிப்பாறை கிராமத்திலும் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் தொடர் பீதியில் உள்ளனர்.

    • அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர்.
    • பள்ளியை சுற்றியுள்ள புதற் செடிகளை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வால்பாறை:

    வால்பாறை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் கரடிகள் நடமாட்டத்தை பார்த்த பகுதி மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.

    வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகள் நட மாட்டம் அதிகரித் துள்ளதாக பொது மக்கள் கூறுகின்றனர். யானை, சிறுத்தை நட மாட்டம் மட்டுமே காணப்பட்டு வந்த நிலையில் தற ்போது எஸ்டேட் பகுதிகளில் கரடிகள் நட மாட்டம் காணப் படுவதாக கூறுகி றார்கள்.

    இந்நிலையில் வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளாகத்தில் 3 குட்டிகளுடன் 2 கரடிகள் நடமாடியதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

    இதை அடுத்து அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளியை சுற்றியுள்ள புதற் செடிகளை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் வனத்துறை அதிகாரிகளிடம் பேசி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் அங்கு வேட்டை தடுப்பு காவலர்களைக் கொண்டு கரடி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    ×