search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாம்பலம்"

    • திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை தட்டு, தாம்பலம் எடுத்து வந்தனர்.
    • அக்னி வார்க்கப்பட்டு ஆகம விதிமுறைகள்படி சகல சடங்கு, சம்பிரதாயங்களுடன் விநாயகருக்கு அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் விவாஹ வரம் அருளக்கூடியவர்.

    இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 10 நாள் பிரமோற்சவத்தில் ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபத்தில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீதெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும் என்பது உண்மை.

    இந்த ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 22ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினசரி சுவாமி பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது 4ம்நாள் நிகழ்வாக காலை வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், 5ம் நாள் நிகழ்ச்சியாக ஓலை சப்பரத்தில் ஸ்சுவாமி வீதியுலா நடைபெற்றது.

    பிரமேற்சவத்தின் 7-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுவாமி தெட்சணாமூர்த்திக்கு சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

    திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை தட்டு, தாம்பலம் எடுத்து வந்தனர்.

    அதனை தொடர்ந்து அக்னி வார்க்கப்பட்டு ஆகம விதிமுறைகள்படி சகல சடங்கு, சம்பிரதாயங்களுடன் சுவாமிக்கு அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    திருக்கல்யாண வைபத்தில் திருமணம் தள்ளிபோகும் பெண்கள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு விநாயகரை வணங்கி, மலர்மாலையும், மஞ்சள் கயறு அணிந்து கொண்டும் திருமண பிரார்த்தனை செய்து கொண்டனர்.

    திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருக்கல்யாண வைபவம் மற்றும் பிரமோற்சவ ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராமமக்கள் செய்து இருந்தனர்.

    ×