search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழைப்பிதழ்"

    • புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடைபெற உள்ள கம்பன் பெருவிழா அழைப்பிதழ் வெளியிடபட்டுள்ளது
    • இந்த விழாவுக்கான அழைப்பிதழை கம்பன் கழகத் தலைவர் ச.ராமச்சந்திரன் வெளியிட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா பெற்றுக் கொண்டார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48-ம் ஆண்டு கம்பன் பெருவிழா வருகின்ற ஜூலை மாதம் 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 10 நாட்கள் நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. இப் பெருவிழாவின் தொடக்க நாளில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாட்சியர் டாக்டர் ராஜன் நடராஜன் தலைமை ஏற்றுச் சிறப்பிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் எழுச்சி உரையாற்றுகிறார். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் இரண்டு நாட்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.சென்னை பாரதி பாஸ்கர் பட்டிமன்ற நடுவராகப் பொறுப்பு ஏற்கிறார்.

    தமிழ்நாடு  ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு நிறைவு விழாப் பேருரை ஆற்றுகிறார். இந்த விழாவுக்கான அழைப்பிதழை கம்பன் கழகத் தலைவர் ச.ராமச்சந்திரன் வெளியிட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கம்பன் கழகச் செயலாளர் ரா சம்பத்குமார், துணைத் தலைவர் எம் ஆர் எம் முருகப்பன், துணைப் பொருளாளர் கறு. ராமசாமி, கூடுதல் செயலாளர் பாரதி, இணைச் செயலாளர்கள் முனைவர் முருகையன், காடுவெட்டி குமார் மற்றும் விழாக் குழு உறுப்பின ர்கள் பேராசிரியர் ரவிச்சந்திரன், முனைவர் மாரியப்பன், கவிஞர் நிலவை பழனியப்பன் , அனுராதா சீனிவாசன், காசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே மாதம் 24-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • ரூ.12 கோடியில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று நிறைவடையும் நிலையில் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இங்கு லிங்கம் , மூர்த்தம் சங்கமம், ஆகிய மூன்று வடிவங்களில் சிவபெருமான் அருள் புரிந்து வருகிறார்.

    கோயிலில் மலை மீது உமா மகேஸ்வரர், சட்டைநாதர் சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர்.

    திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது.

    இக்கோயில் பிரம்ம தீர்த்த குளத்தில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 1991 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இதற்கான ரூ.12கோடியில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று நிறைவுபெறும் தருவாயில் உள்ளது.

    இதனிடையே கோயில் கும்ப்பாபிஷேக பத்திரிக்கை அச்சிட்டு அதனை பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, திருநிலைநாயகிஅம்மன், சட்டநாதர் சுவாமி உள்ளிட்ட சுவாமி சன்னதிகளில் வைத்து வழிபாடு செய்து படைக்கப்பட்டது.

    அதன்பின்னர் கும்பாபிஷேக முதல் பத்திரிக்கையை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கிட அதனை திருப்பணி உபயதாரரும், சீர்காழி தமிழ்சங்க தலைவருமான இ.மார்கோனி பெற்றுக்கொ ண்டார்.

    அருகில் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் ஆசிரியர் கோவி.நடராஜன் உள்ளனர்.

    • பொதுசேவை புரிந்தவர்கள் பத்மா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.
    • குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து தன்னலமிக்க பொது சேவை, தனித்துவமான வேலை மற்றும் விதிவிலக்கான சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக ஒன்றிய அரசாங்கம் பத்ம விருதுகள் வழங்க அறிவித்துள்ளது.

    கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15-ந் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×