search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊர்வலம். Ganesha idols"

    • ராஜபாளையத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செய்திருந்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா, மன்ற தலைவரும் சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு 35-வது விநாயகர் சதுர்த்தி திருவிழா நடந்தது. 5 தினங்கள் நடந்த விழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், நடந்தன. தினமும் 3 வேளை அன்னதானமும் நடந்தது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாலையில் மும்பையில் வடிவமைக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட மும்பை சித்தி கணபதி, வல்லப கணபதி, சுபக்ருது கணபதி, ஹேரம்ப கணபதி, உச்சிஷ்ட கணபதி விக்ரகங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    மதுரை சாலை, பழைய பஸ் நிலையம், தென்காசி சாலை, காந்தி கலை மன்றம் விலக்கு, சொக்கர் கோவில், திருவனந்தபுரம் தெரு, சங்கரன் கோவில் விலக்கு வழியாக ஐ.என்.டி.யு.சி. நகர் எதிரே உள்ள புதியாதியார்குளத்தில் அனைத்து சிலைகளும் போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு வழிபாடு நடத்தி கரைக்கப்பட்டது.

    பாதுகாப்பு ஏற்பாடு களை விருதுநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, காவல் பயிற்சி பள்ளி துணை முதல்வர் முகேஷ் ஜெயக்குமார், டி.எஸ்.பிக்கள் பிரீத்தி(ராஜபாளையம்), சபரிநாதன் (வில்லிபுத்தூர்), பாபு பிரசாத் (சிவகாசி) தலைமையில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×