search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி மையம்"

    • பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
    • ரத்லாம் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இந்த தனியார் பயிற்சி மையம் இயங்கி வருகிறது

    மத்தியப் பிரதேசத்தில் காவலர் சீருடை அணைத்தவாறு தனியார் பயிற்சி மைய விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் இயங்கி வரும் போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் மேலதிகாரிகளின் கவனத்துக்கு இது சென்றுள்ளது. எனவே அவரை தற்போது இடைநீக்கம் செய்து காவல் கண்கணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதியளித்துள்ளார்.   

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
    • கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 5-ந்தேதி நடை பெறவுள்ளது.

    இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 969 மாணவா்களும், சென்னையில் 827 மாணவா்களும், திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 730 மாணவா்களும் விண்ணப்பித்துள்ளனா்.

    அவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெற்று வருகிறது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடங்களிலும் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சுழற்சி முறையில் பாடங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களிலும் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீா் மற்றும் மதிய உணவு மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சி மையங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்புதல் தோ்வுகளும், வாராந்திரத் தோ்வுகளும் நடைபெறுகின்றன.

    • இந்தியாவின் 22 விமான நிலையங்களை நிர்வகிக்கும் மிகப்பெரிய நிறுவனம்.
    • 158-க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை வெற்றிகரமாகக் கையாண்டது.

    விமான போக்குவரத்து சேவை பணிகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், விமான சேவையில் பிரபலமான குளோபல் ஃப்ளைட் ஹேண்ட்லிங் சர்வீசஸ் நிறுவனம் சென்னையில் மிகப்பெரிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.

    பஹ்ரைன் நாட்டின் கல்ஃப் ஏவியேஷன் அகாடமியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே, 8000 சதுர அடியில் குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

     


    விமானப் போக்குவரத்துக் கல்வியில், விரிவான பயிற்சித் திட்டங்களை வழங்க, அதிநவீன வகுப்பறைகள், அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி வசதிகள் மற்றும் அதிநவீன கற்றல் அனுபவத்தை வழங்க அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிறுவனத்தின், குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன்- விமானப் பள்ளி, கேபின் க்ரூப் பயிற்சி, பல்வேறு விமான நிலைய நிர்வாகத் திட்டங்களில் உள்ள படிப்புகள் உட்பட விமானப் பயணத்தின் பல்வேறு அம்சங்களை கற்றுத்தருகிறது.

    இதில் ஸ்மார்ட் கிளாஸ் அறை, ஆய்வகம், கேபின் க்ரூ பயிற்சிக்கான மாக் செட், நூலகம் மற்றும் க்ரூமிங் அறை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன.

    புதிய பயிற்சி மையம் குறித்து பேசிய அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, "கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு விமானத்துறையில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் தேவை. இந்த பயிற்சி மையம் சென்னை விமான நிலையத்திற்கு அருகில், அமைந்துள்ளதால் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்," என்றார்.

    • பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்க கூடாது.
    • நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதத்தை பெற்றோருக்கு அளிக்க கூடாது.

    தனியார் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எந்த ஒரு பயிற்சி மையமும் பட்டப்படிப்பை விட குறைவான தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது. பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்க கூடாது.

    மாணவர்களைச் சேர்ப்பதற்காக பயிற்சி நிறுவனங்கள் தவறான வாக்குறுதிகளை அளிக்கவோ, ரேங்க் அல்லது நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதத்தை பெற்றோருக்கு அளிக்கவோ கூடாது.

    பயிற்சியின் தரம், வழங்கப்படும் வசதிகள், பயிற்சி மையத்தால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தொடர்பான எந்தவொரு தவறான விளம்பரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியிடக் கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பலஇடங்களில் அவரை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.
    • தாமோதரன் என்பவர் ஆசை வார்த்தை கூறி ஜெயப்பிரதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நத்தம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் ஜெயப்பிரதா (வயது 19). இவர் மடப்பட்டு நேதாஜி காவலர் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். கடந்த 20-ந் தேதி காலை 8 மணிக்கு பயிற்சி மையத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பலஇடங்களில் அவரை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இவரது தந்தை ஜெயராமன் புகார் கொடுத்தார்.

    அதில், அதே ஊரை சேர்ந்த சுந்தர் (எ) தாமோதரன் என்பவர் ஆசை வார்த்தை கூறி ஜெயப்பிரதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன காவலர் பயிற்சி பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

    • புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வட கரையாத்தூர் ஊராட்சி ஜேடர்பாளையம் அருகே பள்ளாபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    பயிற்சி மையம்

    பயிற்சி மையத் தொடக்க விழாவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து

    கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

    வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா, மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் ஒருங்கி ணைப்பாளர் ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா குணசேகரன், கபிலர்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்கல்வி

    பயிற்சி மையத்தில் வடகரையாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பு ஆலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையத்தில் தொடர் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    பயிற்சி மைய தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை வட்டார பள்ளி செல்லா குழந்தைகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.

    • தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டுபுதிய புலன்விசாரணை பயிற்சி மையத்தை திறந்துவைத்தார்.
    • புலன் விசாரண பயிற்சிமையம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீசாருக்கான புலன் விசாரணை பயிற்சி மையம்பண்ருட்டியில்அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம்தலைமையில் நடந்தது. பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா வரவேற்று பேசினார்.பண்ருட்டி- கும்பகோணம் சாலை யில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தில்நடந்ததிறப்புவிழாவில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டுபுதிய புலன்விசாரணை பயிற்சி மையத்தை திறந்துவைத்துபேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது :- இந்த புலன் விசாரண பயிற்சிமையம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்.இதுபோன்ற பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் போலீசார் புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட முடியும். இந்த பயிற்சிகளின் மூலம் குற்ற வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முடியும்.சமீபத்தில் காடாம்புலியூரில் நடந்த கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து 36 மணி நேரத்தில் முறையான ஆவண ங்களுடன் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல்செய்து போலீசாருக்கு பெருமை சேர்த்த பண்ருட்டிபோலீசாரைபாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் ராஜதாமரை பாண்டி யன்,நந்தகுமார், சீனிவாசன், பரமேஸ்வரபத்மநாபன், பண்ருட்டி வர்த்தக சங்க பிரமுகர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • கரூர் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது
    • நிகழ்ச்சியில் ரூ.29ஆயிரத்து 482 மதிப்பில் போட்டி தேர்வு நூல்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

    கரூர்

    இனாம் கரூர் கிளை நூலகத்தில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி சார்பில் போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி மாவட்ட தலைவர் வடிவேல் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெரால்டு தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில் 5 இரும்பு நூல் அடுக்குகள், ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி, பீரோ, போட்டித் தேர்வு மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து படிக்கும் வகையில் மேைசகள் மற்றும் ரூ.29ஆயிரத்து 482 மதிப்பில் போட்டி தேர்வு நூல்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. முடிவில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நூலகர் மோகனசுந்தரம் செய்திருந்தார்.


    • நரிக்குறவர் குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் ஒன்றியம் -கல்வெட்டு மேடு இந்திரா நகர்ப்பகுதியில் உள்ள நரிக்குறவர் குழங்தைகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தை நிர்வகிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    தொண்டு நிறுவனம் தேசிய அறக்கட்டளை சட்டம்/சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் இருந்தால் ஆண்டுதோறும் புதுப்பித்திருக்க வேண்டும்.

    தொண்டு நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் பெயரில் 80ஜி/12எ விதிவிலக்கு சான்றிதழ் (Exemption Certificate) கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் கட்டாயமாக அந்நிறுவனத்தின் பெயரில் பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.

    தர்பான் போர்டல் கட்டாயம் பதிவு செய்திரு த்தல் வேண்டும். கடந்த 3 நிதியாண்டுகளில் தொண்டு நிறுவனத்தின் வரவு-செலவு சார்ந்த ஆண்டுத் தணிக்கை விபரங்களை வைத்திருத்தல் வேண்டும். 2019-2020, 2020-2021 மற்றும் 2021-2022 ஆண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல்செய்திருக்க வேண்டும். அரசு சாரா தொண்டு நிறுவனம்/சுயஉதவிக் குழுவானது உண்டு உறைவிடப் பள்ளி நடத்துதல் மற்றும் நலிவடைந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான சமூக சேவை செய்தல் போன்ற செயல்பாடுகளில் குறைந்தது 3 ஆண்டு கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மையத்தை நடத்துவதற்கு போதுமான இடவசதி இருத்தல் வேண்டும்.

    மையம் செயல்பட தேர்வு செய்யப்படும் இடம் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து கட்டிட உறுதித்தன்மை, தீ பாதுகாப்பு தடுப்பு, சுகாதாரம், உணவுப்பாதுகாப்பு சான்றிதழ்கள் ஆகியவை தொடர் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். தொண்டு நிறுவனங்கள் இளஞ்சிறார் சட்டம்/விடுதிகள் சட்டம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

    விண்ணப்பிக்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பப்படிவம் மின்னஞ்சல் மூலமாக சிவகங்கை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாவட்ட திட்ட அலுவலகத்தில் நாளை (3-ந் தேதி) முதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்புக் கொண்டு பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10-ந் தேதி மாலை 5.00 மணிக்குள் சிவகங்கை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×