search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாமி பவனி"

    • ஆவணி மூல திருவிழாவில் இன்று உலவாக்கோட்டை அருளிய கோலத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பவனி வந்தனர்.
    • மதுரையில் அடியார்க்கு நல்லார் என்பவர் வாழ்ந்து வந்தார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா நடந்து வருகிறது. 5-ம் நாளான இன்று உலவாக்கோட்டை அருளிய லீலை நடந்தது.

    மீனாட்சி அம்மன்- பிரியாவிடையுடன் சுந்தரே சுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம்- அபிஷேகம் நடத்தது. அதன் பிறகு சுவாமிகள் தம்பதி சமேதராக கருப்பண்ண சுவாமி மண்டபம், தெற்கு ஆவணி மூல வீதி, வடக்கு ஆவணி மூல வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.

    உலவாக்கோட்டை அருளிய லீலை பற்றி புராண வரலாற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மதுரையில் அடியார்க்கு நல்லார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே சாப்பிடும் பழக்கம் உடையவர். இதற்காக அவர் பலரிடமும் கடன் வாங்கினார். இதனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. அவருக்கு ஒரு கட்டத்தில் எவரிடமும் பணம் கிடைக்கவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர், சோமசுந்தரரை தரிசனம் செய்து விட்டு, மனைவியுடன் உயிர்நீப்பது என்று முடிவு செய்தார்.

    அவர்கள் கோவிலுக்கு சென்று கண்ணீர் விட்டு தொழுதனர். அப்போது இறைவன் அசரீரியாக தோன்றி, உடனே வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ள குறையாத நெல்மணிகளை கொண்ட உலவாக் கோட்டை அளித்துள்ளோம் என்றார். சிவனடியார் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு உலவாக் கோட்டை இருந்தது.

    அதன் மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்க்கு உணவளித்து வாழ்ந்தார்.

    ×