search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ. 3 லட்சம் மோசடி"

    • சுப்பிரமணி அடமானமாக வைத்த நில பத்திரம் மற்றும் ஆவணங்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • அவரது உண்மையான பெயர் கண்ணம்மா என்பதும், அவர் தனது பெயரை மாற்றி வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து கூட்டாக சேர்ந்து கடன் பெற்று மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது.

    திருச்சி,

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் காந்திநகர் நவல்பட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் திருவெறும்பூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் தனக்கு சொந்தமான நில பத்திரத்தை அடமானமாக வைத்து கடந்த 2002-ல் ரூ.3 லட்சம் கடனாக பெற்றார்.

    அதன் பின்னர் கடன் தொகையில் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.50,000 மட்டும் திருப்பி செலுத்தி உள்ளார். அதன் பின்னர் கடன் தொகை திருப்பி செலுத்தவில்லை. வங்கியில் இருந்து பல முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் சுப்பிரமணி அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    இதையடுத்து சுப்பிரமணி அடமானமாக வைத்த நில பத்திரம் மற்றும் ஆவணங்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் கடன் தொகைக்கு ஜாமீன் அளித்த திருச்சி காட்டூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ண கவுண்டர் மனைவி பத்மாவதியை தேடிச் சென்றனர்.

    அப்போது அவரது உண்மையான பெயர் கண்ணம்மா என்பதும், அவர் தனது பெயரை மாற்றி வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து கூட்டாக சேர்ந்து கடன் பெற்று மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வங்கியின் கிளை மேலாளர் ராஜ செல்வகுமார் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் கடன் தொகை பெற்று மோசடி செய்த சுப்பிரமணி அவருக்கு உடந்தையாக ஜாமீன் கையெழுத்திட்ட கண்ணம்மா, திருச்சி பெரிய கம்மாளர் தெரு பகுதியைச் சேர்ந்த பஞ்சநாதன் மனைவி பத்மாவதி ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் அவர்கள் அடமானம் வைத்த நிலப்பத்திரத்தின் உண்மை தன்மை தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. போலியான பத்திரம் தயார் செய்து அதனை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×