search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருள்"

    • இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.
    • மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள்

    மகாலட்சுமியின் பெருமை

    மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள்.

    சந்திரன் போன்று இருப்பவள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள் குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறையப் பெற முடியும். ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள்.

    மந்தகாச முகமுடையவள். தங்க பிராகாரங்களைக் கொண்டது இவள் பவனம், கருணையுடையவள்.

    வஸ்திரம், ஆபரணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள்.

    அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால் திருப்தியுடையவள் பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.

    தாமரைமலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதார குணமுடையவள்.

    இவள் "ஈம்" என்ற பீஜாட்சரத்தை உடையவள் இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள்.

    இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.

    தரித்திரத்தையும் குறைவையும் இவள் அகற்றும் சக்தி படைத்தவள்.

    மகாலட்சுமி சூரியன் போன்றும் பிரகாசிப்பாள் இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது.

    இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் கீர்த்தி என்பவளும் பக்தன் வீடு தேடி வந்தடைவர்.

    இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம். இவளே செழிப்பைத் தருபவள் கோமியத்தில் வாசம் செய்பவள்.

    சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈஸ்வரி. ஆசையை நிறைவேற்றி, வாக்குக்கு சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருள்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

    மகாலட்சுமியின் திருக்குமாரர் கர்தமர் சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே.

    இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள்.

    செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள். இந்த பெருமைகளை யெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மைவிட்டு அகலாதிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்க வேண்டும்.

    • வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.
    • ஒரு சங்கின் சுருள்பகுதி அதன் வாய்பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு.

    செல்வம் தரும் வலம்புரி சங்கு

    கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு.

    சிறியதாக குறுகிய அளவானவை பெண் சங்குகள். சற்றுபருத்த திடசங்குகள் ஆண் சங்குகள்.

    சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்) வைத்து வலம்புரிச்சங்கு, இடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள்.

    ஒரு சங்கின் சுருள்பகுதி அதனுடைய வாய்பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரி சங்கு எனப்படும்.

    ஒரு சங்கின் சுருள்பகுதி அதன் வாய்பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரி சங்கு.

    வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு அகியவற்றில் வலம் புரிச்சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும்.

    இந்த வலம்புரி சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதற்கு அரிய தெய்வீக சக்தி உண்டு.

    தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒருபங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில் ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்கு சமமாக இருப்பது சிறப்பு நீளம் அதிகமாக இருந்தால் மிகச் சிறப்பு.

    ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம்புரி சங்கு. இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் "ஓம்" என்ற சப்தம் கேட்கும்.

    வலம்புரிச்சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் மற்றும்பலவித நன்மைகள் கிடைக்கும்.

    மாமிசம் சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச்சங்கைத்தொடக்கூடாது.

    சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளி தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைக்கக்கூடாது.

    செல்வத்திற்கு அதி தெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடிமாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பவுர்ணமியிலும், ஆனி மாதம் சுக்லபட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பவுர்ணமியிலும்

    வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமியையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகியவைகளை பசு நெய்யில் செய்துபால்பாயசம் செய்துபசு நெய் ஊற்றி விளக்கேற்றி இரவு 10.00 மணியிலிருந்து 1.00 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.

    இப்படி செய்தால் எல்லாவித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சங்கிற்கு பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய்,பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை விட்டு வாசற்படியில் தெளிக்கவும்.

    இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும்.

    ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க சங்கில்பசும்பால் விட்டு 27 செவ்வாய்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

    குழந்தைகளுக்கு இதில்பசும்பால் ஊற்றி வைத்துப்பாலாடையாகப் புகட்ட நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

    வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.

    இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகள் குணமடையும்.

    • கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும்.
    • பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.

    சஷ்டி விரதம் கடைபிடிப்பது எவ்வாறு?

    * கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும். விரத நாட்களில் காலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.

    * பின் முருகன் படத்துக்கு மாலை அணிவித்து 'துதிப்போருக்கு வல்வினை போம்'என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

    * ஆறு நாளும், உபவாசம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை எனவே, காலையில் மட்டும் பட்டினியாகவும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்ச் சாதமும், இரவில் பழம் அல்லது எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.

    * மதிய சாதத்திற்கு ஊறுகாய், வெங்காயம் சேர்க்காமல் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

    *ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.

    சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது உணவு கட்டுப்பாடுதான். உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.

    மனம் கட்டுப்பட்டால், உலக வாழ்வில் துன்பமே இருக்காது. குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி, விரதம் மேற்கொள்வது உடனடி பலன் தரும்.

    பெண்களின் பாதுகாப்புக்கு கந்தசஷ்டி கவசம் படியுங்கள்!

    ஒரு வீரனுக்கு, அவனது மார்பிலுள்ள கவசம் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது. அதுபோல், பக்தர்களைக் காப்பதற்காக கந்தசஷ்டி கவசம் உள்ளது.

    கந்த சஷ்டி கவம் தேவராய சுவாமியால் பாடப்பட்டது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதற்காக ஆறுநாளும் இதனைப் படித்து வருவர்.

    இதனைப் படித்தால் கிடைக்கும் நன்மையைப் பற்றி தேவராய சுவாமிகளே சொல்லியுள்ளார்.

    கவசத்தின் முதல் பாடலில், "துதிப்போருக்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும்" என்கிறார். அதாவது கந்த சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு தீவினையும், துன்பமும் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும்.

    காலை, மாலையில் பக்தியுடன் படித்து, திருநீற்றினை நெற்றியில் அணிவோருக்கு நவக்கிரகங்களால் நன்மை உண்டாகும்.

    மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.

    சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.

    குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை நிலவும் இந்தக் காலத்தில், சஷ்டி கவசம் சிறந்த பாதுகாப்பைத் தரும்.

    • குலதெய்வக்காரர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்களால் நாளை காலை நடைபெற இருக்கிறது.
    • அம்மன் அருள் பெற பக்தர்களுக்கு அங்காள பரமேஸ்வரி திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குலதெய்வக்காரர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்களால் நாளை 5-ந்தேதி காலை நடைபெற இருக்கிறது. இந்த மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனின் அருளைப்பெற பக்தர்களுக்கு அங்காள பரமேஸ்வரி திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×