search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிடு கிடு"

    • தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை
    • ஓணம் பண்டிகையையொட்டி வியாபாரிகள் குவிந்தனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தை செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஓசூர், மேட்டுப்பா ளையம், பெங்களூர், மதுரை பகுதிகளில் இருந்து காய்கறி கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட் டத்தில் இருந்தும் விற்ப னைக்காக வருகிறது. கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை குறை வாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்பொழுது காய்கறிகளின் விலை கிடு கிடுவென உயரத் தொடங்கியுள்ளது.

    ஓணம் பண்டிகை களைக் கட்டி உள்ள நிலையில் கேரள வியாபா ரிகள் ஏராளமானவர் குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்களில் காய்கறி களை வாங்கி செல்வதால் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று தக்காளி விலை 5 மடங்கு உயர்ந்து கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டது. இதேபோல் பீன்ஸ், கேரட், வெள்ளரிக்காய் விலையும் கடுமையான அளவு உயர்ந்துள்ளது.

    பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120-ம், கேரட் ரூ.300-ம், வெள்ளரிக்காய் ரூ.30-ம், மிளகாய் ரூ.80-ம், புடலைங்காய் ரூ.25-ம், சேனை ரூ.30-ம், பல்லாரி ரூ.30-ம், உருளைக்கிழங்கு கிலோ ரூ.40-ம், இளவக்காய் ரூ.20-ம், பீட்ரூட் ரூ.40-ம், கத்தரிக்காய் ரூ.70-ம், வழு தலங்காய் ரூ.60-ம், வெண்டைக்காய் ரூ.40-க்கும் விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கேரளா வில் ஓணம் பண்டிகை களை கட்டியுள்ளதையடுத்து அங்கிருந்து வியாபாரிகள் ஏராளமானோர் காய்கறி களை வாங்குவதற்காக குமரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். எனவே இன்னும் மூன்று நாட்களுக்கு காய்கறிகளின் விலை அதிகமாக தான் இருக்கும். ஓணம் பண்டிகை முடிந்த பிறகு விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இனிவரும் ஒரு வார காலத்திற்கு திருமண நிகழ்வுகளும் அதிகம் உள்ளதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    ×