என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விலையில்லா சைக்கிள்"
- கமுதியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
- மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் பரமக்குடி கோட்டாட்சியர் அப்துல் ரத்தாப் முன்னிலையில் நடைபெற்றது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் பரமக்குடி கோட்டாட்சியர் அப்துல் ரத்தாப் முன்னிலையில் நடைபெற்றது.
கமுதி தாசில்தார் சேதுராமன் வரவேற்றார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி னார்.
விழாவில் கமுதி ஊராட்சி ஒன்றிய பெரும் தலைவர் தமிழ்செல்வி போஸ், எம்.பி. நவாஸ் கனி, மாவீரன் வேலுசாமி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் வாசு தேவன், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, கோவிந்தராஜ், மணலூர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முத்துப்பேட்டையில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியை பொருளியல் ஆசிரியர் ஜான் தொகுத்து வழங்கினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் காஷ்மீர் சகாயநாதன் தலைமை தாங்கினார். பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவி அக்பர் ஜான் பீவி, காரான் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் விழாவை நடத்தினார்.
பள்ளி ஆசிரியர் செயலர் ஜோசப் பீட்டர் ராஜா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியை பொருளியல் ஆசிரியர் ஜான் தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் இணைச் செயலர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.
- திருமங்கலத்தில் 331 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை நகர்மன்றத்தலைவர் வழங்கினார்.
- பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டது.
திருமங்கலம்
தமிழகத்திலுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்குச் செல்லும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும்331 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் தி.மு.க. நகர கழகச் செயலாளர் ஸ்ரீதர், நகர் மன்றத்துணைத் தலை வர் ஆதவன் அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கமிட்டி செயலர் சரவணன், தலைவர் பார்த்திபன், பொருளாளர் காமராஜ், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிராஜன் மற்றும் பள்ளியின் டைரக்டர்கள், ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- 483 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- பெற்றோர்-ஆசிரிய கழக தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நாகப்பா மருதப்பா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டையிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது.
3 பள்ளிகளில் மொத்தம் 483 மாணவ- மாணவிளுக்கு ரூ.23.09 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிளை அமைச்சர் பெரியகருப்பன், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், துணை சேர்மன் கான்முகமது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிர மணியன் (திருக்கோஷ்டி யூர்), சுசிலா (கோட்டை யிருப்பு), மாவட்ட விளை யாட்டு அணி நாராயணன், மாவட்ட மாணவரணி ராஜ்குமார், ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகளான சகாதேவன், பஷீர்அகமது,சீமான் சுப்பு, கண்ணன், ஹரிகிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் பள்ளி தலைமையாசி ரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்-ஆசிரிய கழக தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் 282 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
- இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசகுமார் தலைமை வகித்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசகுமார் தலைமை வகித்தார். மத்தூர் ஆண்கள் மேல்நிலைப் தலைமையாசிரியர் வாசுதேவன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தி.மு.க. வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குண வசந்தரசு, மாவட்ட குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட பொரு–ளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், மத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கிருஷ்ணகிரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் 282 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் உதவியாசிரியர்கள் சின்னதுரை, சின்ராஜ், முருகன், ரவி, சக்திவேல், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.
- கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
- சைக்கிள்களின் டயர், டியூப், சீட் கவர் ஆகியவை சேதமடையும் நிலை உருவாகி வருகிறது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்கள் சுமார் 500 பேருக்கு வழங்க அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச சைக்கிள்கள் பாதுகாப்பாக வைக்காமல் திறந்தவெளி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் சைக்கிள்களின் டயர், டியூப், சீட் கவர் ஆகியவை சேதமடையும் நிலை உருவாகி வருகிறது. தமிழக அரசால்பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்களின் பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் வரும் வகையில் அரசு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி வருகிறது.
அவர்களின் நலனில் அக்கறை கொண்டு வழங்கப்படும் இந்த சைக்கிள்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் முன்பாகவே பழுதடையும் நிலை உருவாகி வருகிறது.
பல ஊர்களில் மாணவர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சைக்கிள்கள் ஓட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் சைக்கிள் பெற்றவர்கள் அந்த சைக்கிள்களை தூக்கி சென்று கடைகளில் கொடுத்து பல நூறு ரூபாய் செலவு செய்து சீராக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது இந்த பள்ளியில் உள்ள சைக்கிள்கள் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விழாவில் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
- 86 மாணவர்களுக்கும், 92 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
கடையநல்லூர்:
தமிழ்நாடு அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் தாளாளர் பட்டத்து சாஹிப் ஹஸன்மக்தூம் ஆலிம் சாகிப் தலைமையில் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சிக்கந்தர் ரஹிமான் முன்னிலை வகித்தார். கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியின் தாளாளருடன் இணைந்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடந்து 86 மாணவர்களுக்கும், 92 மாணவிகளுக்கும் தமிழ்நாடு அரசு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர்மன்ற உறுப்பினர்கள் முகமதுஅலி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர்மன்ற உறுப்பினர் நிலோபர் அப்பாஸ், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் முகமதுபுகாரி, முன்னாள் பட்டதாரி ஆசிரியர் உதுமான், தி.மு.க. நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜாஹிர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- ஒவ்வொரு பள்ளிக்கும் அத்தியாசிய புனரமைப்பு தேவைக்காக ரூ.10 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியங்களில் உள்ள ஏரியூர், எஸ்.எஸ். கோட்டை, முறையூர், சிங்கம்புணரி, கிருங்காகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 732 மாணவ- மாணவிகளுக்கு ரூ.37 லட்சத்து 34 ஆயிரத்து 451 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
2021-22-ம் ஆண்டு பொதுத் தேர்வில் அந்தந்த பள்ளியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சொந்த நிதியில் இருந்து முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் ஒவ்வொரு பள்ளிக்கும் அத்தியாசிய புனரமைப்பு தேவைக்காக ரூ.10 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், திருப்புவனம் பேரூராட்சி சேர்மன் வேங்கை மாறன், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் என்.எம்.சுரேஷ், கிருங்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- சாயல்குடி-டி. மாரியூர் பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் ஊராட்சி தலைவர் வழங்கினார்.
- 78 மாணவ- மாணவிகள் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் களை ஊராட்சி மன்ற தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் வழங்கினார்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, டி. மாரியூர் பகுதிகளில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரி யப்பன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், பேரூராட்சி துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், நீர் பாசன சங்க தலைவர் ராஜாராம் நகர தி.மு.க. இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம், தி.மு.க. துணை செயலாளர் சுப்பிர மணியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்தி ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் கலந்து கொண்டு 154 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சாயல்குடி தி.மு.க. வார்டு செயலாளர் ராபர்ட் கென்னடி மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள், கலந்து கொண்டனர்.
இதேபோல் சாயல்குடி அருகே உள்ள டி.மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டி. மாரியூர் ஊராட்சி மன்ற தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சற்குணராஜ் வரவேற்றார். சாயல்குடி கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் பெரோஸ் பானு ஜலீல், வசந்தா கதிரேசன், மாரியூர் ஜமாத் தலைவர் முத்துமுகம்மது ராவுத்தர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 78 மாணவ- மாணவிகள் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் களை ஊராட்சி மன்ற தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரம்மசக்தி, துணைத் தலைவர் ரேவதி, மாரியூர் தி.மு.க. செயலாளர்கள் காசி நாகூர் அடிமை, அய்யனார், ஆறுமுகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
- ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கி 66 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
உடன்குடி:
உடன்குடி தேரியூர் ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கி 66 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். தமிழக அரசு மாணவர்களுக்கு செயல்படுத்தி வரும் திட்டங்கள், மாணவர்கள் ஓழுக்கத்துடன் கல்வி கற்பது குறித்து எடுத்துரைத்தார். உடன்குடி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மால்ராஜேஷ், பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் விங்கேஸ்வரன் வரவேற்றார். தி.மு.க. மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர் ஷேக் முகமது, நிர்வாகி மோகன், ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் பயஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ராஜதிலகவதி நன்றி கூறினார்.
- ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
- தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.
ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா, அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட்ராஜா மற்றும் ராகஜோதி ராம்விஷ்ணு ராஜா, கருத்தாளர்கள் சிவகுமார், பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
- டி.பி.பாலசிங் தலைமை தாங்கி 139 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
- பள்ளித் தலைமையாசிரியர் விவிங்ஸ்டன் அனைவரையும் வரவேற்றார்.
உடன்குடி:
உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கி 139 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். பின்னர் தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓழுக்கத்துடன் கட்டுப்பாடுடன் வாழ்தல் குறித்து விரிவாக பேசினார்.பள்ளித் தலைமையாசிரியர் விவிங்ஸ்டன் முன்னதாக அனைவரையும் வரவேற்றார். உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், பள்ளி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சாமுவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜான்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி தலைமையாசிரியர் மைக்கேல் நன்றி கூறினார். தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி ஹீபர், நிர்வாகிகள் கணேசன், கிளார்வின், மோகன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்