என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
- சாயல்குடி-டி. மாரியூர் பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் ஊராட்சி தலைவர் வழங்கினார்.
- 78 மாணவ- மாணவிகள் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் களை ஊராட்சி மன்ற தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் வழங்கினார்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, டி. மாரியூர் பகுதிகளில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரி யப்பன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், பேரூராட்சி துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், நீர் பாசன சங்க தலைவர் ராஜாராம் நகர தி.மு.க. இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம், தி.மு.க. துணை செயலாளர் சுப்பிர மணியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்தி ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் கலந்து கொண்டு 154 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சாயல்குடி தி.மு.க. வார்டு செயலாளர் ராபர்ட் கென்னடி மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள், கலந்து கொண்டனர்.
இதேபோல் சாயல்குடி அருகே உள்ள டி.மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டி. மாரியூர் ஊராட்சி மன்ற தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சற்குணராஜ் வரவேற்றார். சாயல்குடி கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் பெரோஸ் பானு ஜலீல், வசந்தா கதிரேசன், மாரியூர் ஜமாத் தலைவர் முத்துமுகம்மது ராவுத்தர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 78 மாணவ- மாணவிகள் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் களை ஊராட்சி மன்ற தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரம்மசக்தி, துணைத் தலைவர் ரேவதி, மாரியூர் தி.மு.க. செயலாளர்கள் காசி நாகூர் அடிமை, அய்யனார், ஆறுமுகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்