search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதல்- கல்வீச்சு"

    • சிலர் இது சம்பந்தமாக தட்டிகேட்ட போது இது தரப்பினருக்குள் வாய் தகராறு ஏற்பட்டு கடும் மோதலாக மாறியது.
    • மோதலில் ஊர் பொதுமக்கள் மற்றும் காலனியை சேர்ந்த 8 பேர் காயம் அடைந்தனர்.

     கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு காலனி அருகே அய்யனார் கோவில் உள்ளது. நேற்று சஞ்சீவிராயன் கோவில் பகுதி சேர்ந்த ஊர் பொதுமக்கள் கோவிலில் ஊரணி பொங்கல் விழாவை முடித்துவிட்டு ஊர்வலமாக தங்களது ஊருக்கு நடுவீரப்பட்டு காலனி வழியாக சென்றபோது ஒரு குறிப்பிட்ட ஜாதி பாடலை ஒலி பெருக்கிக் கொண்டு ஒரு சில வாலிபர்கள் ஆடிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு தரப்பை சேர்ந்த சிலர் இது சம்பந்தமாக தட்டிகேட்ட போது இது தரப்பினருக்குள் வாய் தகராறு ஏற்பட்டு கடும் மோதலாக மாறியது. இதன் காரணமாக இரு தரப்பினரும் மாறி மாறி கல் வீசி தாக்கிக் கொண்டனர். இதனை கண்டித்துஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மோதலில் ஊர் பொதுமக்கள் மற்றும் காலனியை சேர்ந்த 8 பேர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நடுவீரப்பட்டு காலனி தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் சஞ்சீவிராயன் கோவில் சேர்ந்த 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று போலீசார் சஞ்சீவிராயன் கோவில் பகுதியில் இருந்த 8 நபரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்த பாமக மாவட்ட தலைவர் தட்சிணா மூர்த்தி தலைமையில் பொதுமக்கள், பெண்கள் காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். அப்போது பண்ருட்டி துணை போலீஸ் சூப்பி ரண்டு சபியுல்லா பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பொதுமக்கள் கூறுகை யில், இந்த மோதல் சம்பவத்தில் இருதரப்பி னரும் பாதிக்கப்பட்டு ள்ளனர். ஆனால் போலீ சார் ஒரு தரப்புக்கு வழக்கு பதிவு செய்து சம்பந்தமில்லாத நபர்களை போலீஸ் நிலையத்திற்கு நள்ளிரவில் அழைத்துச் சென்றது ஏற்புடையதல்ல. நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும்.

    மேலும் தற்போது பிடித்து வைத்துள்ள நபர்களை விடுவிக்க வேண்டும் என கூறினர். இதனை தொடர்ந்து போலீசார் நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது பிடித்து வரப்பட்ட நபர்களை உரிய விசாரணை செய்து அவர்கள் மீது குற்றம் இல்லாத பட்சத்தில் விடுவி க்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அதி காலையில் பிடித்து சென்ற வெளி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேரை போலீ சார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அதிகாலையில் மீண்டும் 4 பேர்களை போலீசார் பிடித்து விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் சஞ்சீவிராயன் கோவில் தரப்பு சேர்ந்தவர்கள் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருவதோடு, ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் பகுதி முழுவதும் பதற்றமாக காணப்பட்டு வருகின்றது.

    ×