என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுந்தரபாண்டியன்"
- தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.
- இதில் சிறந்த கதாசிரியருக்கான விருதினை இயக்குனர் எஸ். ஆர். பிரபாகரன் பெற்றார்.
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (04-09-2022) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் விக்ரம், ஆர்யா, ஜீவா, சித்தார்த் உள்ளிட்ட முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விருதுகள் பெற்றனர். இதையடுத்து 'சுந்தரபாண்டியன்' படத்திற்காக சிறந்த கதாசிரியருக்கான விருதினை இயக்குனர் எஸ். ஆர். பிரபாகரன் பெற்றார்.
பின் அவர் பேசியதாவது, "சுந்தர பாண்டியன் படத்திற்கு மாநில விருது கிடைத்திருக்கிறது. சிறந்த படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காலதாமதமானலும் விருது பெற்றத்தில் மகிழ்ச்சி. சுந்தர பாண்டியன் படத்திற்கு கதை எழுதும் போது விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து எழுதவில்லை. படம் மிகவும் யதார்த்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே படத்திற்கு கதை அமைத்தேன்.
எஸ். ஆர். பிரபாகரன்
சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமார் அவர்களுக்கு இணை இயக்குனராக இருந்தேன். சசிகுமார் சாரும் மிகவும் யதார்த்தமான பாணியில் கதையமைக்கக் கூடியவர். சசிகுமார் சார் "சுந்தர பாண்டியன்"படத்தை தயாரித்து நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. சிறந்த வில்லனுக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றிருக்கிறார்.
ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த அவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அவர் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைத்துப் படமும் ஹிட் அடித்து வருகிறது. அதற்கான பிள்ளையார் சுழி "சுந்தர பாண்டியன்" படத்திலிருந்து போடபட்டது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
டெக்னாலஜி ரசிகர்களின் கையில் வந்து விட்டது, ஓடிடியில் தான் பெரும்பாலான மக்கள் தற்போது படங்களை பார்த்து வருகின்றனர். பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே திரையரங்கு என்றிருக்கிறது. இரண்டையும் ஆரோக்கியமான விஷயமாகத் தான் பார்க்கிறேன். தொடர்ந்து நல்ல கதைகளை கொண்டு வரும் இளம் இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்கும் திட்டம் இருக்கிறது.
நடிப்பதற்கு நண்பர்கள் பலரும் என்னை அழைக்கிறார்கள். ஆனால், எனக்கு நடிப்பின் மேல் ஆர்வம் இல்லை. இயக்குனராக நல்ல கதைகளை வழங்கவேண்டும் என்று மட்டும் தான் எண்ணம் இருக்கிறது" இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்