என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்திய ஒற்றுமை பயணம்"
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- காட்டாத்துறை ஊராட்சி இளைஞர் காங்கி ரஸ் சார்பாகவும் முளகு மூட்டில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
திருவட்டார் :
அகில இந்தியா காங்கி ரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜிடோ யாத்திரையின் ஓராண்டு நிறைவு ஆனதை யொட்டி பத்மநாபபுரம் தொகுதி இளைஞர் காங்கி ரஸ்சும், காட்டாத்துறை ஊராட்சி இளைஞர் காங்கி ரஸ் சார்பாகவும் முளகு மூட்டில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தொகுதி தலைவர் சக்தி வேல், கண்ணனூர் இளை ஞர் காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபென் ஆசீர் ஆகியோர் தலைமை தாங்கினர். கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோன், இளைஞர் காங்கிரஸ் விஜய், ரூபன், ஸ்டெபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால்சிங், மாவட்ட பொருளாளர் ஐஜபி.லாரன்ஸ், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, வட்டார தலைவர் வழக்கறிஞர் ஜெபா, வேர் கிளம்பி பேரூ ராட்சி தலைவர் சுஜிர்ஜெப சிங்குமார், மாவட்ட பொது ச்செயலாளர் ஜெகன்ராஜ், மாவட்ட செயலாளர் ஆற்றூர் குமார், மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வா கிகள் பலர் கலந்துகொண்ட னர்.
- இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவு விழா
- விஜய் வசந்த் எம்.பி. பேச்சு
குளச்சல் :
குமரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை ஓராண்டு நிறைவு பேரணி குளச்சல் பீச் சந்திப்பில் நடந்தது.
மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா தலைமையில் விஜய் வசந்த் எம்.பி. பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது பெரிய பள்ளி முக்கு சந்திப்பு, பள்ளிரோடு, பயணியர் விடுதி சந்திப்பு, குளச்சல் அரசு மருத்துமனை வழியாக காமராஜர் பஸ் நிறுத்தம் சென்றடைந்தது. அங்கு விஜய்வசந்த் எம்.பி.பேரணியை முடித்து வைத்து பேசியதாவது:-
ஏழை எளிய உழைக்கும் மக்களின் குரலை நாடாளு மன்றத்தில் ராகுல்காந்தி ஒலிக்க செய்தார். நாட்டு மக்களுக்காக அவர் இன்னும் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறார். வருகிற 2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் அமோக வெற்றிப்பெற்று பிரதமர் ஆவார். அதற்கு நீங்கள் தொடர்ந்து காங்கிரசை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேரணியில் குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து கிழக்கு எல்லை வரை 2-ம் கட்ட ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.
- அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் வரை 2- வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து கிழக்கு எல்லை வரை 2-ம் கட்ட ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை முதல் கட்டமாக ஒற்றுமை பயணம் ராகுல் காந்தி மேற்கொண்டார்.
குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சலப் பிரசேத்தின் பாசிகட் வரை 2-வது கட்டமாக ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொள்ள உள்ளது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
+2
- பனிஹாலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகு யாத்திரையை நிறுத்த வேண்டியிருந்தது.
- பாதுகாப்பு விலக்கப்பட்டதால், மக்கள் பாதுகாப்புப் பகுதியை மீறிச் சென்றதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். குடியரசு தினத்தையொட்டி நேற்று யாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் யாத்திரையை தொடங்கினார்.
பனிஹாலில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, பனிஹால் சுரங்கத்தை கடந்தபோது, மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி ராகுல் காந்தியை பாதுகாப்பு வாகனத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி இன்றைய யாத்திரையை காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று 20 கிலோ மீட்டர் தூரம் நடக்க திட்டமிட்டிருந்த ராகுல் காந்தி, பனிஹாலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகு யாத்திரையை நிறுத்த வேண்டியிருந்தது.
ராகுல் காந்தி காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சென்றபோது, திடீரென பாதுகாப்பு விலக்கப்பட்டதால், அங்கு காத்திருந்த ஏராளமானோர் பாதுகாப்புப் பகுதியை மீறிச் சென்றதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் திடீரென திரும்ப பெறப்பட்டது கடுமையான பாதுகாப்பு மீறலை ஏற்படுத்தியது என்றும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பனிஹால் பகுதியில் ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்கினார்.
- ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் யாத்திரையில் பங்கேற்றனர்.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீரில் நடந்து வருகிறது. குடியரசு தினத்தையொட்டி ஒரு நாள் இடைவேளைக்கு பிறகு இன்று யாத்திரை மீண்டும் தொடங்கியது.
பனிஹால் பகுதியில் ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்கினார். இதில் அவருடன் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா இணைந்தார். ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் யாத்திரையில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய உமர் அப்துல்லா, ராகுல் காந்தி தலைமையிலான இந்த யாத்திரையானது, அவரது இமேஜை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் யாத்திரை அல்ல, மாறாக நாட்டின் சூழலை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது என்றார்.
- வருண் காந்தி எனது பாத யாத்திரையில் பங்கேற்றால் அவர் சிக்கலை சந்திக்க நேரிடும்.
- பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள், மத்திய நிறுவனங்களை கட்டுப்படுத்துகின்றன.
ஹோஷியார்பூர்:
இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது உறவினரும் பாஜக எம்பியுமான வருண் காந்தியை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து ராகுல் காந்தி கூறியதாவது:-
அவர்களின் சித்தாந்தங்கள் எங்களுடன் ஒத்துப்போகாது. வருண் காந்தி எனது பாத யாத்திரையில் பங்கேற்றால் அவர் சிக்கலை சந்திக்க நேரிடும். பாஜக அதை ஏற்காமல் போகலாம்.
என்னால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு போக முடியாது. என் கழுத்தை அறுத்தாலும் அங்கு நான் போக மாட்டேன். எனது குடும்பத்திற்கு என ஒரு சித்தாந்தம் உள்ளது, அதற்கு ஒரு சிந்தனை அமைப்பு உள்ளது. நான் அவரை அன்புடன் சந்திக்க முடியும், அவரை கட்டிப்பிடிக்க முடியும். ஆனால் அந்த சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கு சாத்தியம் இல்லை.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள், மத்திய நிறுவனங்களை கட்டுப்படுத்துகின்றன. தேர்தல் ஆணையம், நீதித்துறை மீது அழுத்தம் கொடுக்கிறது. அனைத்து நிறுவனங்களுக்கும் அழுத்தம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல் காந்தியின் பாத யாத்திரை ஜனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில், கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, பல்வேறு மாநிலங்களை கடந்து இன்று பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறுகிறது. இந்த யாத்திரையின் போது நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்களை சந்தித்துள்ளார் ராகுல்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை ஜனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது. ஸ்ரீநகரில் நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக மம்தா பானர்ஜியினி திரிணாமுல் காங்கிரஸ், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் அனுப்பி உள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சீனாவில் கொரோனா தொற்றுநோய் மீண்டும் பரவியதைத் தொடர்ந்து, நெறிமுறைகளை அமல்படுத்துமாறு மத்திய அரசிடம் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியது. இதன்மூலம் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை ஆம் ஆத்மி கட்சி மறைமுகமாக தாக்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் மற்றும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் மாநில பிரிவு தலைவர்கள் யாத்திரையில் இணைய உள்ளனர். குப்கார் கூட்டணியின் மற்றொரு உறுப்பினரான எம்ஒய் தாரிகாமியும் கலந்து கொள்ள உள்ளார்.
- ஒரே மாதத்தில் உண்மையை நாட்டுக்கு காட்டியிருப்பதாக ராகுல் காந்தி பேச்சு
- நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் நண்பர்களுக்கு விற்றுவிடுவார்கள்.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
எனது யாத்திரைக்கு தேவையான சக்திய மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ளீர்கள். சிலர் எல்லா இடங்களிலும் மத வெறுப்புணர்ச்ச்சியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். யாத்திரையை தொடங்கியபோது நாட்டில் நிலவும் வெறுப்புணர்ச்சியை நீக்க நினைத்தேன்.
கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து வந்துள்ளேன். நாட்டில் எங்கும் வன்முறையையோ வெறுப்பையோ பார்த்ததில்லை. நான் தொலைக்காட்சியை ஆன் செய்தால் நான் வன்முறையை பார்க்கிறேன். ஊடகங்களை கட்டுப்படுத்தும் சக்திகளின் தூண்டுதலின் பேரில் எப்போதும் தொலைக்காட்சியில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் எனது இமேஜை அழிக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது. ஆனால், நான் ஒரே மாதத்தில் உண்மையை நாட்டுக்கு காட்டியிருக்கிறேன்.
உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக 24 மணி நேரமும் இந்து-முஸ்லிம் பெயரில் வெறுப்பு பரப்பப்படுகிறது. 24 மணி நேரமும் இந்து-முஸ்லிம் என பேசிவிட்டு, உங்கள் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் பிற சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் நண்பர்களுக்கு விற்றுவிடுவார்கள். அவர்கள் உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பார்கள். இது நரேந்திர மோடியின் அரசு அல்ல, அம்பானி-அதானியின் அரசாங்கம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
- கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களை காங்கிரஸ் பின்பற்றும்.
- நாங்கள் எந்த கடிதத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.
லக்னோ:
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை ஜனவரி 3 ஆம் தேதி பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைய உள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியா விட்டால், பாத யாத்திரையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கடந்த செவ்வாயன்று கடிதம் எழுதியிருந்தார்.
கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் காங்கிரஸ் பின்பற்றும் என்றும், ஆனால் பாத யாத்திரை நிறுத்தப்படாது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:
ஜனநாயக அமைப்பில், ஒவ்வொரு கட்சிக்கும், தனி மனிதனுக்கும் தங்கள் கருத்தைப் பேச உரிமை உண்டு. காங்கிரஸ் யாத்திரையைக் கண்டு மத்திய அரசு பயப்படுகிறது, அதனால்தான் பல்வேறு உத்தரவுகள் வெளியிடப்படுகின்றன. கொரேனாவிற்கு பயப்படாதவர்கள், பாத யாத்திரைக்கு பயப்படுகின்றனர். நாங்கள் எந்த கடிதத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.
இந்த பாத யாத்திரையை நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து தேவையான அனுமதியை காங்கிரஸ் பெற்றுள்ளது. பாஜக அரசு நிர்வாகத்தின் மூலம் அதைத் தடுக்க முயன்றால் ஜனநாயக அமைப்புகளுக்கு அது பதில் சொல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி முக கவசம் அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தது குறித்து பதிலளித்த குர்ஷித், பிரதமர் மோடி மிகச் சிறந்த நாடக கலைஞர் என்று கூறியுள்ளார்.
- நான் வெறுப்பை வளர்க்கவில்லை, என் இதயத்தில் காதல் மட்டுமே மலர்ந்தது.
- உங்கள் இதயத்தில் உள்ள பயத்தைப் போக்குங்கள், வெறுப்பு மறைந்து விடும்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது. அம்பேத்கரின் பிறந்த இடமான மோவ்வில் உள்ள அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் பேசிய ராகுல்காந்தி கூறியுள்ளதாவது:
அம்பேத்கர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட பெரிய ஆளுமைகள் நமக்கு அரசியலமைப்பை வழங்கினர். நமது அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கி உள்ளது. மாநிலங்களவை, நீதித்துறை மற்றும் நாட்டின் அதிகார அமைப்புகள், அரசியலமைப்பிலிருந்து தோன்றியவை.
அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல, ஒரு வாழும் சக்தி, ஒரு சிந்தனை. அந்த எண்ணத்தை ஆர்.எஸ்.எஸ் அழிக்க விரும்புகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.அதன் அலுவலகங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றாததற்காக, அதன் எதிர்ப்பாளர்களால் விமர்சிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவும் அரசியல் அமைப்பு சட்டத்தை வெளிப்படையாக அழிக்க முடியாது. அவர்களுக்கு அந்த தைரியம் கிடையாது. அவர்கள் அதை முயற்சித்தால், நாடு அவர்களை தடுத்து நிறுத்தும். அதனால் அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க பின்கதவு வழியாக முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், தனது ஆட்களை, முக்கிய அமைப்புகள், நீதித்துறை, ஊடகங்களில் ஈடுபடுத்தி வருகிறது.
என் பாட்டி 32 தோட்டாக்களை உடலில் வாங்கி கொல்லப்பட்டார், என் தந்தை கொல்லப்பட்டார். ஆனால் யாரிடமும் எனக்கு வெறுப்பு இல்லை. வெறுப்பு என்னை விட்டு விலகிய நாள், என் இதயத்தில் காதல் மட்டுமே மலர்ந்தது, வேறொன்றுமில்லை. வெறுப்பின் ஒரு துளி கூட என்னிடம் இல்லை. நான் வெறுப்பை வளர்க்கவில்லை.
அதனால் பாஜக, பிரதமர் மோடி ஜி, அமித் ஷா, ஆர்எஸ்எஸ்காரர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் இதயத்தில் உள்ள பயத்தை கைவிடுங்கள், வெறுப்பு மறைந்து விடும். உங்கள் பயமே நாட்டில் வெறுப்பை உண்டாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. அன்பு உள்ளவர்கள் ஒரு போதும் பயப்பட மாட்டார்கள், அஞ்சம் கொண்டவர்களால் நேசிக்க முடியாது. இதுவே எனது பாதயாத்திரையின் செய்தியும் கூட. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தன்னை போன்று பலர் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பார்கள்.
- ராகுல் காந்தியின் நடை பயணத்தில் சிவசேனா எம்.எல்.ஏ. ஆதித்ய தாக்கரே பங்கேற்பு.
ஹிங்கோலி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாத யாத்திரை 65வது நாளான நேற்று மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை அடைந்தது. அப்போது தம்மை வரவேற்ற சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார். அவர்கள் மத்தியில் பேசிய அவர், சிறுபான்மை சமூக மக்கள் தனியாக இல்லை. தங்கள் உரிமைகளை பாதுகாக்க போராடும் அவர்களுடன் துணை நிற்போம் என்று உறுதியளித்தார்.
இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்களும் தாக்கப்படுகிறார்கள், இந்த சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழி பயத்தைப் போக்க வேண்டும், ஏனெனில் பயம் மனதில் மட்டுமே உள்ளது என்றும் ராகுல் குறிப்பிட்டார். தன்னை போன்று பலர் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று அவர் கூறினார்.
முன் எப்போதும் இல்லாத வகையில் நீதித்துறை நிறுவனங்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதால், அரசியலமைப்புச் சட்டம் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியின் நடை பயணத்தில் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆபத்தில் இருப்பதால், கருத்தியல் வேறுபாடுகள் இருந்த போதும் ராகுல் காந்தியுடன் இணைந்ததாக கூறினார். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி மாநிலத்திலும், நாட்டிலும் நடந்து வருகிறது. இதற்கு எதிராக, நாங்கள் சாலையில் இறங்கியுள்ளோம். இது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்த முடிவு விவசாயிகள் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்.
- இந்திய ஒற்றுமை பாத யாத்திரை திட்டமிட்டபடி காஷ்மீரில்தான் நிறைவு பெறும்.
பிலோலி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் தமிழகம், கேரளா, ஆந்திரா வழியாக தெலுங்கானாவை தாண்டி மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தை அடைந்தது.
இந்நிலையில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 6வது ஆண்டு நினைவு நாளான இன்று பிலோலி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்தார்.
தனது மூன்று பில்லியனர் நண்பர்களுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தை ஏகபோகமாக்குவதை உறுதி செய்ய பே பி.எம். மேற்கொண்ட நடவடிக்கை என்று அவர் விமர்சித்தார். 2016 ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த முடிவு விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் பாஜக ஆட்சியில் ஊழல் நடந்தாக குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி பேடிஎம் என்பதை மாற்றி பே சிஎம், பே பிஎம் என்ற வார்த்தை பயன்படுத்தி வருகிறது. தற்போது பிரதமர் மோடி குறித்து அந்த வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தெக்லூரில் பேசிய ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை பாத யாத்திரை திட்டமிட்டபடி காஷ்மீரில்தான் நிறைவு பெறும் என்றார். அதற்கு முன்பு யார் நினைத்தாலும் அதை பாதியில் நிறுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்