search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுக்கு சங்கர்"

    • சவுக்கு சங்கர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டார்.
    • சவுக்கு சங்கர் திடீரென கோஷம் எழுப்பியதால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை:

    பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சவுக்குசங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை கோவை ஜெயிலில் இருந்த சவுக்கு சங்கரிடம் சென்னை போலீசார் வழங்கினர்.

    சவுக்கு சங்கர் கைதாகி கோவைக்கு அழைத்து வரும்போது வாகனம் விபத்தில் சிக்கி அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவரது கையில் கட்டுப் போடப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை 2-வது முறையாக சவுக்கு சங்கர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டார். டாக்டர்கள் அவரது கையை ஸ்கேன் செய்து பார்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் சர்க்கரை நோய் பாதிப்புக்காகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபோது அவர் திடீரென கோஷம் எழுப்பினார். எனது கையை கோவை ஜெயிலில் உடைத்து விட்டனர். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். சவுக்கு சங்கர் திடீரென கோஷம் எழுப்பியதால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பெலிக்ஸ் மனைவி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
    • பலமுறை அழைப்பு விடுத்தும் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.

    சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட வழக்கில் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளி கிழமை இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்னும் தமிழ்நாடு அழைத்து வரப்படாததால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "என் கணவரை கடந்த வெள்ளிக் கிழமை (மே 10) இரவு தொடர்பு கொண்டேன். தொலைபேசியில் சிலமுறை அழைப்பு விடுத்தும் போனை எடுக்காத அவர், ஒருக்கட்டத்தில் எனது அழைப்பை ஏற்று, தன்னை காவலர்கள் பிடியில் எடுத்துள்ளனர் என்று மட்டும் கூறிவிட்டு போனை அருகில் இருந்த காவலரிடம் கொடுத்துவிட்டார்."

    "அலைபேசியில் என்னிடம் பேசிய போலீசாரிடம் எதற்காக என் கணவரை கைது செய்துள்ளீர்கள்? எப்போது, எந்த ஊருக்கு அழைத்து வரவுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் மறுநாள் காலை ரெயில் மூலம் அவரை திருச்சி அழைத்து வர இருப்பதாக தெரிவித்தனர். மறுநாள் காலை தொடர்பு கொண்ட போது காலை ரெயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறினர். அதன்பிறகு பலமுறை அழைப்பு விடுத்தும் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை."

    "எனது கணவரை எங்கே வைத்திருக்கிறார்கள்? எங்கு அழைத்து சென்றனர்? என்ன செய்ய போகின்றனர்? என்பது குறித்து எனக்கு எவ்வித தகவலும் யாரும் கொடுக்கவில்லை. என் கணவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது தொடர்பாக எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை. தமிழக அரசு இது தொடர்பாக எனக்கு உதவி செய்ய வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். 

    • யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.
    • குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது.

    யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் 7வதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து, சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

    சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்ற நிலையில், 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

    இந்நிலையில், யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    கோவை சிறை அதிகாரிகள் குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது.

    காவல்துறையினர் குறித்த அவதூறு பேச்சு, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் கைதாகியுள்ள சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    • தம்பி சவுக்கு சங்கர் காவல்துறையினர் குறித்துத் தெரிவித்தக் கருத்துகள் தவறானவை; அதனை ஏற்க முடியாது.
    • எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் எனும் நிலையிலிருந்த சவுக்கு சங்கர், தனது வீட்டிலும், அலுவலகத்திலும், வாகனத்திலும் கஞ்சாவை வைத்துக்கொண்டு சுற்றுவாரா?

    ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: நடப்பது மக்களாட்சியா? பாசிச ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரெட் பிக்ஸ் ஊடகத்தின் நிறுவனரும், ஊடகவியலாளருமான அன்புத்தம்பி பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களைக் கைது செய்திருக்கும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    சவுக்கு சங்கர் பேசிய கருத்துகளுக்காக பல்வேறு வழக்குப் பாய்ச்சப்பட்டு, ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது நேர்காணலில் நெறியாளுகை செய்ததற்காக பெலிக்ஸ் ஜெரால்டையும் தற்போது கைதுசெய்திருப்பது சட்டவிரோத நடவடிக்கையாகும். இது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல! பங்கேற்பாளரின் கருத்துக்கு நெறியாளரையும் சேர்த்துக் கைது செய்யும் இச்செயல்பாடு ஊடகச்சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயலாகும்.

    இது ஊடகச்சனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது. காட்சி ஊடகங்கள், வலையொளிகளின் நேர்காணல்களில் பங்கேற்பாளர்கள் பேசும் கருத்துகளுக்கு அதன் நெறியாளர்களோ, அதனை ஒளிபரப்பும் ஊடகங்களோ ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை என்பது அடிப்படை ஊடகச்செயல்பாடு.

    அப்படியிருக்கையில், எதற்காக இந்த கைது நடவடிக்கை? திமுக அரசின் மீது விமர்சனங்களை வைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் வெளிப்படையாக விடுக்கும் அச்சுறுத்தல் இல்லையா இது? திமுக ஆட்சியின் கொடுங்கோன்மையைப் பேசியவர்கள் எல்லாம் குறிவைத்து அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாவார்களென்றால், நடப்பது மக்களாட்சியா? இல்லை! பாசிச ஆட்சியா? பேரவலம்!

    தம்பி சவுக்கு சங்கர் காவல்துறையினர் குறித்துத் தெரிவித்தக் கருத்துகள் தவறானவை; அதனை ஏற்க முடியாது. அப்பேச்சுக்காக அவரைச் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்துவதில் நமக்கு எந்தச் சிக்கலுமில்லை.

    அதேசமயம், இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, அவரைச் சிறைக்குள் வைத்துத் துன்புறுத்துவதும், அடித்து உதைத்து கையை உடைப்பதும், அடுத்தடுத்து பல பொய் வழக்குகளைப் பாய்ச்சி அலைக்கழிப்பதும் கொடும் அரசியல் பழிவாங்கும் போக்கு இல்லையா?

    தமிழ்நாடு முழுமைக்கும் போதைப்பொருட்களைப் புழங்கவிட்டுவிட்டு, சவுக்கு சங்கரின் வாகனத்தில் கஞ்சாவை எடுத்ததாகக் கூறுவது நம்பும்படியாக இருக்கிறதா? எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் எனும் நிலையிலிருந்த சவுக்கு சங்கர், தனது வீட்டிலும், அலுவலகத்திலும், வாகனத்திலும் கஞ்சாவை வைத்துக்கொண்டு சுற்றுவாரா? எதற்கு இத்தனைத் திரைக்கதை அமைக்கிறீர்கள் பெருந்தகைகளே?

    அம்மையார் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில், அவசர நிலையின்போது காவல்துறையால் சிறைக்குள் துன்புறுத்தப்பட்டதை இன்றளவும் பேசும் ஐயா ஸ்டாலின் அவர்கள், காவல்துறையை வைத்துக் கொண்டு இத்தகையக் கொடூரங்களை நிகழ்த்தலாமா? இதுதான் சமூக நீதி ஆட்சியா? விடியல் ஆட்சியா? வெட்கக்கேடு!

    திமுக கடந்த காலங்களில் காட்டிய பாசிச முகத்தை மீண்டும் காட்டத் தொடங்குகிறதா? 2006 - 2011ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடத்திய கொடுங்கோல் ஆட்சிக்குப் பின்னர், பத்தாண்டு காலம் அதிகாரத்தை இழந்து நின்றது மறந்துபோனதா? அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும் எத்தனைக் காலத்துக்கு ஆட்டம்போடுவீர்கள் பெருமக்களே? பெரும் சாம்ராஜ்ஜியங்களும், பேரரசுகளுமே வீழ்த்தப்பட்டிருக்கின்றன.

    ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்டுகளே வரலாற்றில் வீழ்ந்திருக்கிறார்கள். மக்கள் கொடுத்த அதிகாரத்தில்தான் நீங்களெல்லாம் இன்று உயரே நிற்கிறீர்கள்! மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினால் மொத்தமாய் சரிந்து விழுவீர்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால், உங்கள் ஆட்டமெல்லாம் இன்னும் இரண்டு ஆண்டுகள்தானே!

    அதற்குப் பிறகு, எங்கே இருப்பீர்கள்? ஆட்சியில் இருந்துகொண்டு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அடாவடித்தனமும், அட்டூழியமும் செய்யும் இதுபோன்ற பாசிச ஆட்சிகளையும், கொடுங்கோல் அரசுகளையும் மக்கள் கட்டாயம் தூக்கி எறிவார்கள் என ஆளும் ஆட்சியாளர்களை எச்சரிக்கிறேன்.

    இத்தோடு, ஊடகவியலாளர் தம்பி பெலிக்ஸ் ஜெரால்டு மீதான வழக்கையும், கைதுநடவடிக்கையையும், தம்பி சவுக்கு சங்கர் மீது சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையையும், புனையப்படும் பொய் வழக்குகளையும், அவர் மீதான அரசின் பழிவாங்கும் போக்கையும் வன்மையாக எதிர்க்கிறேன்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    • காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது.

    காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ரெட்பிக்ஸ் யூட்யூப் சேனல் எடிட்டரான ஃபெலிக்ஸ் ஜெரால்டை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லியில் இருந்த அவரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது

    பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர்.

    காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என முன் ஜாமின் கேட்டு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி குமரேஷ் பாபு கடும் கண்டனங்களை தெரிவித்தார். மேலும் யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற தூண்டும் விதமாக நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார்.

    • சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு.
    • ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல்.

    யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

    சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது.

    இந்த சோதனையில் ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • சவுக்கு சங்கர் மீது சென்னை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டு போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர்.
    • அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    யூடியூப்களில் பிரபலமானவர் சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர். இவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    சவுக்கு சங்கர் மீது சென்னை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டு போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர். அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் ஏற்கனவே 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் 6-வது வழக்கிலும் கைதாகியுள்ளார்.

    • சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
    • கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    பெருந்துறை:

    பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கை உடைக்கப்பட்ட நிலையில் கோவை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்ற த்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கோவை மத்திய சிறையில் உள்ள தனது மகன் சவுக்கு சங்கருக்கு பாதுகாப்பு இல்லாததால் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்த சிறைத்துறை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று காலை சவுக்கு சங்கரை கோவை போலீசார் சென்னைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாது காப்புடன் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சவுக்கு சங்கர் தன்னுடைய கை வலிப்பதாகவும், உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்து க்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் அங்கிருந்து நேரடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர் சாந்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு காலை 9.45 மணி அளவில் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று சவுக்கு சங்கரை பார்த்து கேள்வி எழுப்பினர். அப்போது அவரை பேசவிடாமல் போலீசார் தடுத்து அழைத்து சென்றனர். சவுக்கு சங்கருக்கு தொடர்ந்து குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. அதனை ஒரு காவலர் கையில் தூக்கி பிடித்த படி சென்று கொண்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரவாயலில் உள்ள வீடு, தி.நகரில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்தது குறித்து கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது சோதனை நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 4-ந்தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்குசங்கரை கைது செய்தனர்.

    இதற்கிடையே தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தபோது, அவரது காரில் இருந்து கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் அவரை அன்றைய தினமே கோவை அழைத்து வந்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இந்நிலையில் சென்னையில் யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுரவாயலில் உள்ள வீடு, தி.நகரில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கஞ்சா பரிமாற்றம் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவுப்படி தேனி போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். மதுரவாயல் தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மதுரவாயல் போலீசார் உடன் உள்ளனர்.

    சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்தது குறித்து கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது சோதனை நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே சென்னையில் தொடர்ந்த வழக்குகள் தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

    • நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள சங்கரை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்துள்ளனர்.
    • சிறையில் அடைக்கும் முன் அவரது உடலில் எவ்வித பாதிப்பும் இல்லை. சவுக்கு சங்கர் வழக்கறிஞர் புகார்

    யூடியூபரான சவுக்கு சங்கர் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேனியில் கைது செய்யப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா வைத்திருந்தாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் நீதிமன்றகாவல் அளித்து உத்தரவிட்டது. சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உடலில் காயம் ஏதும் ஏற்படவில்லை. சிறையில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் சவுக்கு சங்கர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த நிலையில் சிறையில் சவுக்கு சங்கர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

    மேலும், சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்த அறிக்கையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் பெற்று தாக்கல் செய்ய பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் இன்று மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சவுக்கு சங்கருக்கு மே 22-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மே 17-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று கஞ்சா வழக்கில் ஆஜர்படுத்த மதுரை அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள சங்கரை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கும் முன் அவரது உடலில் எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போது, அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.

    அதை மறுத்துள்ள சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள், சிறையில் அவரை யாரும் தாக்கவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

    தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வந்தபோது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கி சவுக்கு சங்கருக்கு காயம் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன.
    • கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார்.

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவர் மீது சென்னை, சேலம், திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 4 வழக்குகளிலும் அடுத்தடுத்து சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணையில் சவுக்கு சங்கரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்றத்திற்கு வலது கையில் கட்டு போட்டபடி சவுக்கு சங்கர் வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க நீதிமன்ற வளாகம் முன்பு காத்திருந்த பெண்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கைது செய்ய சென்ற போலீசாரை தரக்குறைவாக பேசியது உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
    • வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது.

    தேனி:

    பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூ-டியூபர் சவுக்கு சங்கரை தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பூதிப்புரம் ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 3-ந் தேதி அதிகாலை சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவருடன் தங்கி இருந்த சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராம்பிரபு, பரமக்குடியைச் சேர்ந்த ராஜரத்தினத்தை விசாரித்தனர்.

    அவர்கள் வந்த காரில் சோதனை செய்தபோது 2.6 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நடமாடும் தய அறிவியல் ஆய்வு வாகனம் மூலம் ஆய்வு செய்த போலீசார் சவுக்கு சங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகிய 3 பேர் மீதும் கஞ்சா கடத்தல் வழக்கு, கைது செய்ய சென்ற போலீசாரை தரக்குறைவாக பேசியது உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    சவுக்கு சங்கர் கோவைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் 4-வது நபராக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆரைக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த திருமால் மகன் மகேந்திரன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சவுக்கு சங்கருக்கு மகேந்திரன் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் இருந்து 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்ட நீதிமன்றத்தில் 1 கிலோவுக்கு உட்பட்ட கஞ்சா வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடியும். ஆனால் மொத்தம் 3 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளதால் இந்த வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது என்றனர்.

    ×