search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமானுவேல் சேகரன்"

    • பரமக்குடி ஓட்டப்பாலம் ரவுண்டாணாவில் இமானுவேல் சேகரனுக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும்.
    • தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கீழக்கரை

    தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் பரம்பை பாலா ராமநாதபுரத்தில் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ஏழை, எளிய மக்களின் மீதான தீய ஆதிக்க சக்திகளின் நீதிக்கு புறம்பான வன்முறைகளையும் தீமைகளையும் எதிர்த்து தடுத்து நிறுத்தி அனைத்து தரப்பு மக்களின் நல்லிணக்கத்திற்காகவும் நல் வாழ்விற்காகவும் போராடிய இமானுவேல் சேகரனுக்கு வெண்கல முழு உருவ சிலையை பரமக்குடி ஓட்ட பாலம் புதிய ரவுண்டானா பகுதியில் நிறுவ வேண்டும். இமானுவேல் சேகரன் சிலையை அங்கு அமையச் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    மேலும் இமானுவேல் சேகரன் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர்களை எஸ.சி.பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவாக ராமநாதபுரம் கலெக்டரிடம் கொடுத்துள்ளோம்.

    அவர் எங்கள் மனுவை ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதிய ளித்துள்ளார். மாநில, மத்திய அரசு அலுவல கங்களில் இமானுவேல் சேகரன் படம் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். எங்கள் கோரிக்கையை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு நிறைவேற்றித் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தப் பேட்டியின் போது தேவேந்திரர் பண்பாட்டுக் கழக செயலாளர் வழக்கறிஞர் புண்ணியமூர்த்தி, நடுவர் மன்ற அமைப்பாளர் தங்கராஜ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக 35 வாகனங்களில் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஊர்வலமாக வந்து தலைவர் பரம்பை பாலா தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    • இமானுவேல் சேகரன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    சிவகாசி

    இமானுவேல் சேகரனின் 65-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள பெரியபொட்டல்பட்டியில் அவரது சிலைக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

    முன்னதாக சிவகாமிபுரம், மாரனேரியில் வைக்கப்ப ட்டிருந்த இமானுவேல் சேகரனின் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பெரியபொட்டல்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார்- ரோஷினி தம்பதியினரின் பெண்குழந்தைக்கு ஜெயலட்சுமி என பெயர் சூட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக வேண்டுராயபுரம் சுப்பிரமணி, சிவகாசி மண்டல செயலாளர்கள் சரவணகுமார், கருப்ப சாமிபாண்டியன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜயஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், பள்ளபட்டி ரமேஷ், பிரியா, சசி மலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாமிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன் செய்திருந்தார். பெரியபொட்டல்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசுந்தரராஜமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் சசிமலர், பள்ளபட்டி ரமேஷ். ஊர் நாட்டாமை ராஜீவ்காந்தி, உதவி நாட்டாமை மான்ராஜ் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் மம்சாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தங்கமுனியான்டி, கிளை செயலாளர் சிவக்குமார், சுந்தரராஜமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாரனேரியில் வீரன் சுந்தரலிங்கம் ஆட்டோ சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துலுக்கப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, அம்மாபட்டி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் சுப்புகாளை, பொன்னுசாமி, மூவேந்தர், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
    • திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

    திருச்சி:

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் முதன்மை செயலாளர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் துரைராஜ், ஒன்றியச்செயலாளர் கதிர்வேல், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, கண்ணன், இளைஞரணி பி.ஆர்.சிங்காரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜன், செந்தில், பகுதி செயலாளர்கள் தர்மராஜ், நீலமேகம், ராஜ் முஹம்மது, மணிவேல், மோகன், விஜயகுமார், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • அனுமதி பெற்று சிலையை வைக்குமாறு வற்புறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம், அமைச்சியாபுரம் காலனியில் நேற்று இரவு திடீரென்று இமானுவேல் சேகரன் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை போலீஸ் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனை அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதி பெற்று சிலையை வைக்குமாறு வற்புறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நாளை மதுக்கடைகள் அடைக்கப்படும்.
    • உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள், மதுபான கூடங்களின் உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகயைில் இமானுவேல் சேகரன் நினைவு தினமான நாளை (11-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த செல்லும் வாகனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், பார் கூடங்கள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்கள் மதுபான விற்பனை செய்யக்கூடாது.

    தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி நாளை ஒரு நாள் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கலெக்டரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப்பணியாளர்கள், மதுபான கூடங்களின் உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம்-மதுரை வழித்தடத்தில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • 41 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரமக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியாா் பஸ்கள் பரமக்குடி நகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் அனைத்தும் ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை, சருகனி, காளையாா்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரைக்கு செல்ல வேண்டும்.

    மதுரையில் இருந்து வரும் பஸ்கள் பூவந்தி, சிவகங்கை, காளையாா்கோவில், சருகனி என அதே பாதையில் ராமநாதபுரம் வந்து ராமேசுவரம் செல்ல வேண்டும்.

    பரமக்குடி வருவோா் சொந்த வாகனங்களில் வரவேண்டும் உள்ளிட்ட 11 நிபந்தனைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவின்படி பதாகைகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 160 வழித்தடங்கள் தடை செய்யப்பட்டவை ஆகும்.

    அனுதியின்றி பரமக்குடிக்கு 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்டத்தில் 131 பகுதிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்ப ட்டுள்ளன. மாவட்ட எல்லையில் 41 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • அரசு போக்குவரத்து கழகம் மூலம் பரமக்குடிக்கு கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்த வருபவர்கள் போலீசாரின் அறிவுரைப்படி அனுமதி பெற்ற சாலை வழியாக வந்து செல்ல வேண்டும். மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எந்த பகுதியிலும் சிறிய பிரச்சினை வராமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அரசு போக்குவரத்து கழகம் மூலம் பரமக்குடிக்கு கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1500 போலீசாருடன் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 3500 போலீசார் வரவழைக்கப்பட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    நினைவு தின நிகழ்ச்சி அனைவரின் ஒத்துழைப்புடன் எந்த வித இடையூறும் இன்றி அமைதியாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×