search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிரியார் ஜார்ஜ பொன்னையா"

    • சர்ச்சைக்குரிய பாதிரியாருடன் ராகுல் சந்திப்பு குறித்து பாஜக கடும் விமர்சனம்.
    • பாதிரியாருடனான ராகுல் சந்திப்பில் எந்த தவறும் இல்லை என காங்கிரஸ் விளக்கம்.

    இந்திய ஒற்றுமை பயணம் மேற் கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டம் புலியூர் குறிச்சியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றார். அங்கிருந்த பாதிரியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இயேசுநாதர் கடவுளின் வடிவமா, இது சரிதானா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, இயேசுவே உண்மையான கடவுள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடவுள் அவரை ஒரு உண்மையான மனிதராக வெளிப்படுத்துகிறார், சக்தியை போல் அல்ல, அதனால் நாம் அவரை (ஏசுநாதரை) மனிதராக பார்க்கிறோம் என்றார். 

    ஏசுநாதர் உண்மையான கடவுள் என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி மற்றும் ஜார்ஜ் பொன்னையா இடையேயான உரையாடல் குறித்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதற்கு முன்பு இந்த மனிதர் (ஜார்ஜ் பொன்னையா) இந்து குறித்த வெறுப்பு கருத்துக்களை கூறியதற்காக கைது செய்யப்பட்டார், பாரத மாதாவின் அசுத்தங்கள் நம்மை மாசுபடுத்தக் கூடாது என்பதற்காக நான் காலணிகள் அணிகிறேன் என்று அவர் கூறியிருந்தார் என ஷெஹ்சாத் பூனாவாலா குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் ராகுல்காந்தி சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ராகுல் காந்தி தனது பாதயாத்திரையின் போது பலரை சந்தித்து உரையாடுவார், அதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  

    ×