search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 265508"

    • பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்தனர்.
    • புனிதவதி, சத்யா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

    கடலூர்:

    கடலூர் - மடப்பட்டு சாலையில் 230 கோடி மதிப்பீட்டில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலை விரிவாக்க பணிக்காக ஏற்கனவே நெடுஞ்சாலைத்து றையினரால் வரையப்பட்ட குறியீடுகள் வரை ஆக்கிரமி ப்புகள் அகற்றப்படாமல் இருந்து வந்ததால் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அரசியல் கட் சியினர் மற்றும் சமூக அமைப்பினர்கள் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்சாலை திட்ட கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி, தனி தாசில்தார் (நில எடுப்பு) தமிழ்ச்செல்வி மற்றும் சர்வேயர் முன்னிலையில் நெல்லிக்குப்பம் வர சித்தி விநாயகர் கோவிலில் இருந்து திரவுபதி அம்மன் கோவில் வரை சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு பணிகள் நடைபெற்றன. அப்போது ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி, சத்யா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

    இதனை தொடர்ந்து கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் அரசு வரைபடம் மூலம் அளவீடு பணிகளில் ஈடுபட்டு குறியீடு வரையப்பட்டது. அப்போது ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சரியான முறையில் அளவீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டதை அனைவரும் ஏற்று வரவேற்றனர். பின்னர் அவர் கூறுகையில், கடலூர் மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணிக்காக அரசிடம் இருந்து அனுமதி பெற்று அதற்கான நிதி பெற்று பணிகள் சரியான முறையில் அளவீடு செய்துசாலை விரிவாக்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டம் நிறைவேற்றுவதன் மூலம் விபத்து இல்லாமலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்படக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதன்படி அனைத்து பணிகளும் நடைபெற்ற வருகின்றது. தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததை தொடர்ந்து மீண்டும் உரிய முறையில் அளவீடு செய்து குறியீடு வரையப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் பணி தொடங்கப்பட்டு முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மற்றொருபுரத்திலும் உரிய முறையில் அளவீடு நடைபெற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • ஆச்சனூர் முனியாண்டவர் கோவில் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அங்கன்வாடிக்கு சென்று அங்கு படிக்கும் குழந்தைகளிடம் வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார்.

    திருவையாறு:

    திருவையாறு ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    திருவையாறு ஒன்றியம் வைத்தியநாதன்பேட்டை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் செலவு மதிப்பீட்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் இடங்களை ஆய்வு செய்தார்.

    அதை தொடர்ந்து பிரதமந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு அளவீடுகளையும், வீட்டின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.31.96 லட்சம் செலவு மதிப்பீட்டில் நடக்கும் ஆச்சனூர் முனியாண்டவர் கோவில் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து தரமாக போடப்பட்டுள்ளதா என்று அளவீடு செய்தார்.

    பொது விநியோகத் திட்டத்தில் ரேசன் கடையை பார்வையிட்டு இருப்பு விவரங்களையும் பொருட்கள்

    வழங்கப்பட்ட விவரங்களையும் ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் உறுதித்த ன்மையை ஆய்வு செய்தார்.

    அங்கன்வாடிக்கு சென்று அங்கு படிக்கும் குழந்தைகளிடம் வழங்கப்படும் உணவுகள் பற்றியும், குழந்தைகளின் கேட்டறிந்து குழந்தைகளின் கல்வி அறிவையும், பேச்சு திறமையையும் குழந்தையின் உடல் நலம் பற்றியும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    அதை தொடர்ந்து திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிமன்றத் தலைவர்களுடன் கலந்து ரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு ஊராட்சிமன்றத் தலைவர்களின் கருத்துக ளையும், குறைகளையும் கேட்டறிந்தார்.

    ஆய்வி ன்போது உதவித்திட்ட அலுவலர் சித்ரா, உதவிசெயற் பொறியாளர் கருப்பையா, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் நந்தினி, ஜான்கென்னடி மற்றும் தாசில்தார் பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
    • நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வடுகபாளையம் பகுதியில் குட்டை உள்ளது .இந்தக்குட்டையை பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

    குட்டை துார் வாரும் பணி நடந்து வரும் சூழலில் இங்குள்ள புறம்போக்கு இடத்தில் தனி நபர்களுக்கு புதிதாக வழித்தடம் தடம் விட்டு பணிகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே குட்டையை அளவீடு செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி (காங்கிரஸ்), சசிரேகா ரமேஷ்குமார் (பா.ஜ.க,) ஆகியோர் நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் விரைவில் அளவீடு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் குட்டையை அளவீடு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொங்கலுார் ஆர்.ஐ., கேத்தனூர் வி.ஏ.ஓ. ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ×