search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவ-மாணவி"

    • தாழக்குடி நீலகண்டன் உணவகம் முன்பிருந்து தொடங்கிய சைக்கிள் போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு என 3 பிரிவுகளில் நடந்த சைக்கிள் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி சைக்கிள் போட்டி இன்று நடந்தது.

    நாகர்கோவில் புற வழிச்சாலையில் உள்ள தாழக்குடி நீலகண்டன் உணவகம் முன்பிருந்து தொடங்கிய சைக்கிள் போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், தேரேக்கால் புதூர் ஊராட்சி தலைவர் சோமு நாகர்கோவில் மாநகரச் செயலாளர் ஆனந்த் ஒன்றிய செயலாளர் மதியழ கன் நாகர்கோவில் மாநகர துணை செயலாளர் வேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சைக்கிள் போட்டி 3 பிரிவுகளில் ஆண் பெண்க ளுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டது. 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு என 3 பிரிவுகளில் நடந்த சைக்கிள் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    17 வயதுக்குட்பட்ட மாண வர்களுக்கான போட்டியில் அனந்த நாடார்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆதித்யா முதல் பரிசும், கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் விஸ்வா 2-வது பரிசும், நாகர்கோவில் எஸ் எல்.பி. பள்ளி மாணவன் நந்தகுமார் 3-வது பரிசும் பெற்றனர்.

    15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் எஸ்.எல்.பி. பள்ளி மாணவன் மஞ்சுநாதன் முதல் பரிசும், மஞ்சு தேவன் 2-வது பரிசும் வென்றனர். இவர்கள் இருவரும் சகோதரர் ஆவார்கள். 3-வது பரிசை ராமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் மதன் பெற்றார்.

    ×