search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுத பூஜை"

    • தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களோடு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
    • கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாசில் உள்ள பணிமனை ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனை தொடர்ந்து 4, 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 1-ந்தேதி (சனிக்கிழமை) அரசு விடுமுறை நாளாகும்.

    4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிற நிலையில் அக்டோபர் 3-ந்தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

    மேலும் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளும் விடுமுறை அளித்துள்ளது.

    இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

    30 மற்றும் 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சென்னையில் இருந்து 2050 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களோடு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

    கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாசில் உள்ள பணிமனை ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    நாளை (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்து வெளியூர் செல்லக்கூடியவர்கள் பயணத்தை தொடங்குவதால் பல்வேறு போக்குவரத்து கழகங்களை சேர்ந்த பஸ்கள் சென்னையில் இருந்து கூடுதலாக இயக்கப்படுகிறது.

    "நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவனந்தபுரம், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை போன்ற தென் மாவட்ட பகுதிகளுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்படுகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 2050 சேர்ந்து மொத்தம் 4150 பஸ்கள் இயக்க திட்டமிட்டு உள்ளோம்.

    பொதுமக்களின் தேவையை கருதி கூடுதலாகவும் இயக்க தயாராக உள்ளோம். கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிக்க பகுதி வாரியாக பிரித்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மழை பெய்யாவிட்டால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவது வெளியூர் பயணத்தை முடக்கவும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பயணிக்க அதிக பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை அக்டோபர் 4 மற்றும் 5-ந் தேதியில் கொண்டாடப்பட உள்ளது. காந்தி ஜெயந்தி 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை நாளில் வருகிறது. 1-ந்தேதி சனிக்கிழமை விடுமுறை நாளாகும். 3-ந் தேதி ஒருநாள் அரசு ஊழியர்கள் விடுப்பு போட்டால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

    தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 1-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் தினசரி இயக்கப்படுகின்ற 2100 பஸ்களுடன் 2050 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1650 சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் கோயம்பேடு பஸ்நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பை பாஸ் (பணிமனை அருகில்) இருந்து இயக்கப்பட உள்ளது.

    கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. தினசரி வழக்கமாக செல்லக்கூடிய 2100 பஸ்களுக்கு முன்பதிவு முடிந்தவுடன் சிறப்பு பஸ்களுக்கு தொடங்கும்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இதுவரையில் 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். 30, 1-ந் தேதி மட்டுமின்றி, 2 மற்றும் 3-ந் தேதிக்கும் பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி அரசு பஸ்களில் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    வருகிற வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பயணிக்க அதிக பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். வழக்கமாக இயக்கக்கூடிய பஸ்களில் இடங்கள் நிரம்பிய பின்னர் சிறப்பு பஸ்களுக்கு முன் பதிவு செய்யப்படும். பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்க முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

    இன்று மகாளய அமாவாசை என்பதால் மேல்மலையனூருக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை பயணத்திற்கான முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.
    • அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரப்பிய பின்னர் மற்ற போக்குவரத்து கழக பஸ்களும் முன்பதிவுக்குள் கொண்டு வரப்படும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லக்கூடிய மக்கள் பஸ், ரெயில்களில் பெரும்பாலும் பயணம் செய்வார்கள்.

    அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் பஸ் பயணத்தை நோக்கி மக்கள் நகர்கிறார்கள்.

    பஸ்களில் 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ள வசதி இருப்பதால் தற்போது அரசு விரைவு பஸ்களில் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களை மக்கள் நாடுகிறார்கள்.

    tnstc.in.com என்ற இணையதளத்தின் வழியாக அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன.

    சென்னையில் இருந்து 450 அரசு விரைவு பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன. அதில் 400 பஸ்களுக்கான முன்பதிவு பெருமளவில் நிறைவடைந்துள்ளன.

    குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், மதுரை, தென்காசி, செங்கோட்டை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களில் இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    ஆயுத பூஜை, விஜயதசமி அடுத்த மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் வருகிறது. முன்னதாக 2-ந்தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை தினமாகும். தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வருவதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அதனால் அக்டோபர் 1, 2-ந்தேதி பயணம் செய்வதற்கும் அதிகளவில் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. தீபாவளி, ஆயுத பூஜை விடுமுறை முன்பதிவு அரசு விரைவு பஸ்களில் விறுவிறுப்பாக நடைபெறுவதால் குறைந்த அளவிலேயே இடங்கள் இருக்கின்றன.

    இதுவரை 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி முடிந்து மறுநாள் சென்னை திரும்புவதற்கான முன்பதிவு நாளை மறுநாள் (25-ந்தேதி) தொடங்குகிறது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை பயணத்திற்கான முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து புறப்படக்கூடிய பஸ்களில் குறைந்த அளவில் இருக்கைகள் காலியாக உள்ளன.

    கடைசி நேரத்தில் நெரிசலில் பயணம் செய்வதை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்வது நல்லது. அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரப்பிய பின்னர் மற்ற போக்குவரத்து கழக பஸ்களும் முன்பதிவுக்குள் கொண்டு வரப்படும்.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,200 பஸ்கள் தவிர 1,000 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும். பொதுமக்கள் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை விடவும் தயார் நிலையில் உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
    • பயணிகள் பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ளும்படி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, சென்னையின் மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

    திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் ஆகியவை தாம்பரம் மெப்ஸ் (MEPZ) பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் (மா.போ.க. பூவிருந்தவல்லி பணிமனை அருகில்) பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர்) கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    மேற்குறிப்பிட்டுள்ள 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகளையும், பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பேருந்துகளையும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்.

    இவ்வாகு அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    ×