search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து முன்னணி பந்த்"

    • இந்து அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தை இன்று அறிவித்திருந்தனர்.
    • விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    முன்னாள் மத்திய மந்திரியும் நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனை கண்டித்தும், ஆ.ராசாவை கைது செய்யக்கோரியும் புதுவையில் இந்து முன்னணி, இந்து அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தை இன்று அறிவித்திருந்தனர். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. 

    இதையொட்டி புதுவை யில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதேபோல விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. திட்ட மிடப்பட்டபடி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுவைக்கு விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ்கள் வழக்கம்போல் சென்றது. திருபுவனை, வில்லிய னூர் பகுதியில் விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன.

    விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு ஏரா ளமானோர் வேலைக்கு சென்றுவருகிறார்கள். மேலும் ஜிப்மர், புதுவை கதிர்காமத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்தி ரிக்கு விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் சென்று பயனடைந்து வருகிறார்கள். ஆனால் இன்று விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் புதுவை ஜிப்மருக்கு செல்ல வேண்டிய நோயாளிகள் கடும் அவதி யடைந்தனர். அதோடு வேலைக்கு செல்வோரும் முற்றிலும் பாதிக்க ப்பட்டனர். விழுப்புரத்தில் இருந்து புதுவை எல்லையான கெங்க ராம்பாளையம் வரை அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அங்கிருந்து ஷேர் ஆட்டோ, வாடகை கார்களில் ஏராள மானோர் புதுவைக்கு சென்றனர்.

    ×