search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடி போதை மறு வாழ்வு மையம்"

    • மணப்பாறை மறை–வட்ட–த்திற்கு–ட்பட்ட மஞ்சம்பட்டியில் குடிபோதைமாற்று–சிகிச்சை மைய திறப்பு விழா நடைபெற்றது.
    • டி.எம்.எஸ்.எஸ்.எஸ். பொருளர் ஜெயராஜ் மதுபோதையினால் வரும் குடும்ப பிரச்சனைகள் குறித்து பேசினார்.

    திருச்சி

    திருச்சி பல்நோக்கு சமூகப் பணி மைய ஒருங்கி–ணைந்த குடிபோதைமாற்று–சிகிச்சை மைய திறப்பு விழா மணப்பாறை மறை–வட்ட–த்திற்கு–ட்பட்ட மஞ்சம்ப–ட்டியில் நடைபெற்றது.

    டி.எம்.எஸ்.எஸ்.எஸ். இயக்குநரும் மற்றும்செய–லர்ஜா ன் செல்வராஜ் அனைவ–ரையும் வரவேற்று, நிறுவன செயல்பாடுகள் மற்றும் சிகிச்சை மைய செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள்வழங்கினார்.

    டி.எம்.எஸ்.எஸ்.எஸ். பொருளர் ஜெயராஜ் மதுபோதையினால் வரும் குடும்ப பிரச்சனைகள் குறித்து பேசினார்.

    புனித ஜான் தொழிற்பயிற்சி பள்ளி இயக்குநரும் தாளாளருமான சேசுராஜ்இன்றைய சமூகத்தில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின்நேர்முக, மறைமுக மதுபோதை பளக்கங்கள் குறித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் மணப்பாறை காவல் துறை கண்காணிப்பாளர் ராமநாதன் தனது உரையில் மது போதையினால் ஏற்படும் வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள் சமூக விரோத செயல்கள் பிரச்சனைகளை கையாளும் சட்டங்கள் பற்றியும் இது போன்ற மையங்களின் தேவைகள் குறித்து பேசினார்.

    மணவை மறைவட்ட அதிபர் தாமஸ் ஞானதுரை இப்பகுதியில் இம்மையத்தின் தேவைகள் குறித்தும், பொருளாதாரப் பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், திருமண வாழ்வின் முடிவுகள், கலாச்சார சீர்கேடுகள் குறித்து பேசினார்.

    விழாவில் மருத்துவர்கள், ஊர்முக்கியஸ்தவர்கள், பஞ்சயத்து தலைவி தேன்மொழி பொன்னழகர் ஆகியோர் கலந்து கொண்டு மேலும் பல கருத்துகளை வழங்கினார். திட்ட அலுவலர் ஆல்பர்ட் மனோகர் நன்றி கூறினார்.

    இந்நிகழ்வில் மகளிர் உறுப்பினர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை பணியாளர் ஜஸ்டஸ் தொகுத்து வழங்கினார்.

    ×