என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்வி அதிகாரி"
- விஜய் படத்திற்கு ரூ.25-ம், ரஜினி படத்துக்கு ரூ.10-ம் மாணவிகளிடம் கட்டாயமாக வசூல் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது.
- குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று நினைத்து யாரும் இது தொடர்பாக புகார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வி.கே.புரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 9-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் இந்த பள்ளியில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.
தொடர்ந்து அதே பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இதற்காக விஜய் படத்திற்கு ரூ.25-ம், ரஜினி படத்துக்கு ரூ.10-ம் மாணவிகளிடம் கட்டாயமாக வசூல் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது.
அதே நேரம் பள்ளியில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதற்கு மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும் தட்டிக் கேட்டால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று நினைத்து யாரும் இது தொடர்பாக புகார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே பள்ளியில் சினிமா படங்கள் ஒளிபரப்பப்பட்ட தகவல் கசிந்த நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் புதிய திரைப்படங்கள் இரண்டும் திரையிடுவதற்கு பள்ளியில் உரிமம் பெற்று உள்ளார்களா? என்று அவர்கள் கேள்வி கேட்டதோடு, பள்ளிகளில் சினிமா திரைப்படங்களை திரையிட்டு அதன் மூலம் வசூல் வேட்டையில் பள்ளி நிர்வாகம் இறங்கியுள்ளதாக அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
இதையடுத்து உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில், கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கூறுகையில், மாணவர்களுக்கு மனதளவிலான அழுத்தத்தை குறைப்பதற்காக கடந்த சனிக்கிழமை திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது என்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
அந்த மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை உடனடியாக திருப்பி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.
மேலும் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
- சேலம் கோட்டை பெண்கள் பள்ளியல் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகிறார்கள்.
- பள்ளியில் மாணவிகளுக்கு போதுமான கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லை என்றும், கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வில்லை என்றும் புகார்கள் எழுந்தது.
சேலம்:
சேலம் கோட்டை பெண்கள் பள்ளியல் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளியில் மாணவிகளுக்கு போதுமான கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லை என்றும், கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வில்லை என்றும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து மாணவிகளின் பெற்றோ ர்களும் தலைமை ஆசிரியரிடம் பல முறை புகார் கொடுத்தனர். ஆனாலும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் மாணவிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி மோகன் இன்று காலை பள்ளியில் உள்ள கழிவறை மற்றும் குடிநீர் தொட்டி களையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரி யரிடமும் விசாரணை நடத்தி வரு கிறார். இத னால் பள்ளியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி நேரில் ஆஜரானார்.
- 2018-ம் ஆண்டில் ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அதை இத்தனை ஆண்டுகளாக செயல்படுத்தாதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த சருகனியில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றிய தையல் ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த இடத்துக்கு புதிய ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி பள்ளியின் தாளாளர் சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரிக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தனர்.
இதனால் கடந்த 2015-ம் ஆண்டில் பள்ளி தாளாளர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தையல் ஆசிரியை நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, சருகணி நடுநிலை பள்ளியில் தையல் ஆசிரியை நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை கல்வி அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டில் அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி நேரில் ஆஜரானார். (அவர் தற்போது ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது).
அப்போது, ஏற்கனவே 2018-ம் ஆண்டில் ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அதை இத்தனை ஆண்டு களாக செயல்படுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்காக சாமி சத்தியமூர்த்திக்கு 2 வாரம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவிட்டார்.
இதைக்கேட்ட அரசு வக்கீல், இந்த தண்டனையை தற்போது நிறுத்தி வைக்க கோரியதால், கல்வி அதிகாரிக்கு விதித்த தண்டனை 2 வாரத்திற்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் அறிமுக விழா நடந்தது.
- 12-ம் வகுப்புக்கு பிறகு என்ன மேல்படிப்பு படிக்கலாம் என்பது தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
குன்னூர்,
குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் அறிமுக விழா நடந்தது. குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் தலைமை தாங்கினார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி மாணவ மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாட்டு பாடி அசத்தினார். அதன்பிறகு இளம்தலைமுறையினருக்கு கல்வி மிகவும் முக்கியம்.
தமிழக அரசு கல்வி மேம்பாட்டுக்காக அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதனை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு முழு முயற்சியுடன் படிக்க வேண்டும். அதன்பின் என்ன செய்ய வேண்டும் என்பதனை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கேற்ப வியூகங்களை வகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து நான் முதல்வன் கல்லூரி கனவு என்ற கையேடு மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அடுத்தபடியாக 12-ம் வகுப்புக்கு பிறகு என்ன மேல்படிப்பு படிக்கலாம் என்பது தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதற்கிடையே மாணவ- மாணவியருக்கு தேவையான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றை பெறும் வகையில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
- மூடப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர்கள் அடுத்த வாரம் வெளியாகும்.
- அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மூடப்படும்.
கோவை,
கோவை மாவட்ட கல்வி அதிகாரி கீதா கூறி இருப்பதாவது:-
கோவை மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் தனியார் நர்சரி பள்ளிகளில் அங்கீகாரம் பெறாதவை, ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியவை, கூரைகள் உடன் செயல்படுபவை, அடுக்குமாடி குடியிருப்புகளில் செயல்படுபவை ஆகியவற்றை தமிழக அரசின் புதிய உத்தரவின்படி மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இருந்தபோதிலும் ஒருசில கோப்புகள் பரிசீலனையில் இருப்பதால், அந்த பள்ளிகளின் பெயர் வெளியிடப்படவில்லை. அரசு அனுமதி பெற்ற தனியார் பள்ளிகளின் பெயர்கள் விடுபட்டு இருப்பின், அடுத்த பெயர் பட்டியலில் அறிவிக்கப்படும். எனவே தமிழக அரசின் அங்கீகாரம் பெறாத எந்த பள்ளிகளிலும், பெற்றோர்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம். நீண்ட காலமாக அங்கீகாரம் புதுப்பிக்காத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் பெயர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும். அப்போது மூடப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர்களும் வெளியாகும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவாஸ் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் ஆசிரியை கரும்பலகையில் எழுதியவற்றை கையால் அழித்ததாக புகார் கூறப்பட்டது.
- கோபமடைந்த ஆசிரியை துடப்பதால் மாணவர்களின் முட்டிக்கு கீழ் அடித்ததாக புகார் எழுந்தது.
அரியலூர்:
அரியலூர் வாலாஜா நகரம் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகாபதி இவரது மகன் நிவாஸ் (வயது9). இந்த சிறுவன் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.
அரியலூர் வாலாஜா நகரம் கல்லாத்து பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசை தம்பி. அவரது மகன் சுசீந்திரன்( 9). இந்த சிறுவனும் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவாஸ் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் ஆசிரியை கரும்பலகையில் எழுதியவற்றை கையால் அழித்ததாக புகார் கூறப்பட்டது.
இதில் கோபமடைந்த அந்த ஆசிரியை துடப்பதால் அந்த மாணவர்களின் முட்டிக்கு கீழ் அடித்ததாக புகார் எழுந்தது.
இது பற்றி அறிந்த அந்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளிக்கூடத்தில் நேரடி விசாரணை நடத்தினார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஆசிரியை துடப்பத்தால் அடித்த சம்பவம் அரியலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்