என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வடக்கு மாவட்ட செயலாளர்"
- பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- செல்வராஜ் எம்.எல்.ஏ.வுக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
திருப்பூர் :
தி.மு.க.வின் 15-வது உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக செல்வராஜ் எம்.எல்.ஏ., தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னையில் இருந்து திருப்பூர் வந்த செல்வராஜ் எம்.எல்.ஏ.வுக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் ஆளுயர மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து திருப்பூர் ெரயில் நிலையம் அருகே உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் ,துணை பொது செயலாளர்கள் பகுதி செயலாளர்களை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., பேசியதாவது:- என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு மாவட்ட செயலாளராக பதவி தந்த தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அரவணைத்து சென்று கட்சியை மேலும் வலுப்படுத்த அயராது பாடுபடுவேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து பணியாற்ற வேண்டும். நமது கட்சி அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும். நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்தித்து நிறை குறைகளை கூறலாம்.பெரியார் ,அண்ணா சந்தித்த இந்த திருப்பூர் மண்ணில் வருகிற தேர்தல் அனைத்திலும் நாம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அதற்கு எனது உயிர் உள்ளவரை கடுமையாக உழைத்து வெற்றிக்கனியை தளபதி காலடியில் சமர்ப்பிப்பேன் என்று உறுதி ஏற்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.